கந்த சஷ்டி கவசம் பற்றி தவறான கருத்தை பரப்பாதீர்கள்| Don't spread wrong i...
இப்படிக்கு சி.முருகதாஸ் நேரம் 1:02 AM 0 பின்னூட்டம்
Sunday, January 13, 2013
காசியிலும் வீசம் பெரிது மனிமுக்தாறு துர்நாற்றம்
காசியிலும் வீசம் ஜாஸ்தி என்கிறார்கள் விருத்தாசலம் மனிமுக்தாற்றின் புனிதத்தை.காரணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மணிமுத்தாற்றின் கரையில் முனிவர் ஒருவரால் கட்டப்பட்ட பழமலைநாதர் கோவில். பழங்கலத்தில் விருத்தாசலத்தை திருமுதுகுன்றம் எனவும், இந்த கோவிலை பழமலை நாதர் கோவில் எனவும், மூலவரை பழமலை நாதர் எனவும் அழைத்துள்ளனர்.
காலப்போக்கில் பழமலை நாதர் என்ற சிவபெருமான் பெயரை விருத்தகிரினாதர் எனவும், திருமுதுகுன்றம் என்ற நகரின் பெயர்கள் விருத்தச்சலம் எனவும் சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டுவருகிறது.புதிதாக திருமணமானவர்கள் பாளையம் விட்டு தங்கள் வாழ்க்கையை இங்கிருந்துதான் துவங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.மேலும், இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் மாநிலத்தின் பல இடங்களிலிருந்து இங்குதான் வருகின்றனர்.மனிமுக்தாற்றில் குளித்து, பழமலைநாதரை வணங்கினால் பாவங்கள் தொலைந்து புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளகுறிச்சி வட்டம், கல்ராயன்மலையில் உற்பத்தியாகின்ற மணி, முக்தா என்ற இரு நதிகள்; கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வழியாக வங்கக்கடலில் மணிமுக்தா என்ற புண்ணிய நதியாக கலக்கிறது.
நவ நாகரீக காலத்திற்கு முன் இந்த நதி உண்மையிலேயே புனிதமாகத்தான் இருந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த நதியில் விருத்தச்சலத்தின் கழிவு நீரை கலக்கவிட்டுள்ளனர். மழைக்காலத்தை தவிர மற்ற காலங்களில் விடப்படும் கழிவு நீர் தேங்கி நின்று , பன்றிகள் உழன்றுகொண்டுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து துணிகளை துவைத்து, மீன்களை பிடித்து ஆற்றோடு விளையாடி மகிழ்ந்துள்ளனர்.ஆனால், தற்போது இந்த நதியில் குளித்தால் புண்ணியம் சேர்கிறதோ இல்லையோ கண்டிப்பாக வியாதிகள் வந்து சாவது நிச்சயம். மனிமுக்தாறு விருத்தாசலம் நகரில் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது. நகராட்சி பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுநீர் என கால் நனைக்கவே அருவருப்பாக மாறியுள்ளது. புனிதம் போற்றும் நதியின் நிலை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் திடக்கழிவு மற்றும் கழிவு நீர் மேலாண்மையால் மட்டுமே காப்பாற்றப்படும்.

இப்படிக்கு சி.முருகதாஸ் நேரம் 5:06 AM 0 பின்னூட்டம்
குப்பையாகிப்போன தமிழன் பண்டிகை
தமிழர்கள் கொண்டாடும் முக்கிய திருநாள் பொங்கல் பண்டிகை.மார்கழி மாதத்தின் கடைசி நாளில் தொடங்கும் போகிப் பண்டிகை முதல் பெரும்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், ஆற்றுத் திருநாள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். போகிப்பண்டிகையன்று பழைய பாய், துணிகளை எரித்து அதிகாலையில் சுற்றிவந்து கொண்டடுவார்கள்.
நாளடைவில் போகிப்பண்டிகையில் பிளாஸ்டிக் பேப்பர்கள், பைகள், பாலியஸ்டர் இழைகளாலான துணிகள், டயர்களை எரித்து சுற்றுச் சூழலையும், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், வீடுகள் தோறும் எரியும் குப்பைகளால் கிராமங்கள், நகரங்கள் என நச்சு வாயுக்கள் நிறைந்த புகை மண்டலமாக காட்சியளித்தது. கடந்த மாதம் உலகம் அழியபோவதாக ஊடகங்கள் செய்தியை வெளியிட இந்திய மட்டுமல்ல உலக நாடுகளே பீதியில் உறைந்திருந்தன. அமெரிக்க போன்ற வல்லரசுகளே அச்சமடைந்தன.
கடந்த சில ஆண்டுகளாக ஒரே காலகட்டத்தில் ஒரு நாட்டில் கடுமையான வறட்சி ஒரு நாட்டில் அடை மழை நிலா நடுக்கம் சுனாமி சூறாவளி என் இயற்கை பேரிடர்களால் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பேரழிவுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இயற்கைக் கெதிராக போராட மனிதனால் முடியாது என்பதை கடந்த காலத்தில் இயற்கை ஆணி அறைந்தாற்போல் உணர்த்தியுள்ளது. ஆனால், மனிதன் அதை ஏற்றுக்கொண்டதாக இல்லை என்பது போகிப்பண்டிகை கொண்டாட்டத்தில் தெரிந்தது.
கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது, வைத்திருப்பது, விற்பனை செய்வது குற்றமாகும் என 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் கடந்த 1ம் தேதி முதல் அறிவித்தது. ஆனால், இந்த சட்டத்தினையோ அல்லது சுற்றுச்சூழல் சடத்தினையோ அதிகாரிகள் அமல் படுத்தாமல் வேடிக்கை பார்த்தனர். அரசின் பல சட்டங்கள் இப்படி சரியாக அமல்படுத்தமலும் கண்காணிக்காமலும் அலட்சியல் கட்டுவதால் பேரிடர்களின் பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்தனை பாடங்கள் இயற்கை கற்பித்தலும் ஏற்றுக்கொள்வதை இல்லை என்பதை ஆணித்தரமாக உள்ளனர்.
இதுவரை இயற்கை பேரிடர்களின் பாதிப்புகளுக்கு நிவாரணம் தேடும் நிலை மனித குலத்திற்குள்ளது;. இனி வரும் பேரிடர்களை எதிர்கொள்ளவோ நிவாரணம் தேட முடியும் என்பது கேள்விக்குறிதான்?

பொருள், சேவையில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் – சார்பு நீதிபதி ஆர்.ஸ்ரீதரன் பேச்சு - a2zTamilNadu.com
Monday, November 26, 2012
இப்படிக்கு சி.முருகதாஸ் நேரம் 5:28 AM 0 பின்னூட்டம்
Sunday, November 25, 2012
ஊடகங்களுக்கு பொறுப்பு தேவை
தமிழகத்தில் சில அரசியல் தலைவர்கள் தலித் மக்களுக்கு தாங்கள் ஒட்டுமொத்த பிரதிநிதி என்ற போர்வையில் சாதி வெறியை தூண்டிவிட்டு மோதல்களில் ஆதாயம் தேடுகின்றனர்.
மேல் சாதி பெண்களை காதலித்து திருமணம் செய்து பணம் சம்பாதிக்கும் வேலையில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு தவறாக வழிகாட்டுகின்றனர்.
கால மாறுதல்களை எண்ணி காதல் திருமணங்களை ஏற்றுகொள்ளும் பெண்ணின் பெற்றோர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது.
தலித் இளைஞர்கள் தலித் அல்லாத பெண்களை விரும்பி திருமணம் செய்வதற்காக காதலிப்பதில்லை.மாறாக அவர்களின் பணம் உள்ளிட்ட எதிர்பார்ப்பில்தான் காதல் என்ற ஆயுதத்தை கையிலெடுக்கின்றனர். இப்படி தமிழகத்திலுள்ள நாடார், தேவர், வன்னியர் உள்ளிட்ட சங்க தலைவர்கள் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.
சில சட்ட விதிமுறைகளை சாதகமாக வைத்துக்கொண்டு காலனி வழியாக செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களை கேலி செய்வதால் பெண்கல்வி பாதிக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இந்த சூழலில் ஏற்பட்ட முன்விரோதம்தான் தருமபுரி கலரத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரச்சினை முடிந்து சட்ட ரீதியாக வழக்குகள் பதிந்து விசாரணைகள் துவங்கியுள்ளது.
இதனை தொலைகாட்சிகள் தினமும் இருவேறு சமூக தலைவர்களின் பேட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சம்பவத்தை ஊதி பெரிதாக்கி சமூகத்தில் சிக்கலை ஏற்படுத்த முனைப்பு காட்டிவருகின்றனர்.
ஊடகங்கள் தங்கள் கடமைகள் என்ன என்பதை மறந்து விடுகின்றன. முக்கிய ரகசிய மற்றும் பாதுகாப்பு விஷயங்களை நேரடி ஒளிபரப்புகளை செய்து மக்களிடம் பதற்றத்தையும் , சமூக விரோதிகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கின்றனர்.
சமய சமூக தலைவர்கள் என்பவர்கள் சிக்கல்களை நிலையை பொறுத்து அவிழ்க்க பார்க்க வேண்டும் அதைவிடுத்து அதில் அரசியல் செய்வதில் ஆரவாரம் காட்ட கூடாது. ஊடகங்கள் இதனை நேரடி சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பதற்றத்தி ஏற்படுத்தி டி .ஆர்.பி. ஓயார்த்திவதை விட சமூக பொறுப்புகளை எண்ணி செயல் படுத்தல் வேண்டும் .

இப்படிக்கு சி.முருகதாஸ் நேரம் 8:17 AM 0 பின்னூட்டம்
ஊழல் ஒழிய வேண்டும்
Thursday, June 16, 2011
இந்தியாவில் ஊழலற்ற நிர்வாகம் சிறப்பாக நடைபெறுகிறது என அமெரிக்க அதிபர் பரக் அதிபர் ஒபாமா இந்தியாவின் சிறப்புகளை வரிசைப்படுத்தி பாடி மன்னிக்கவும் பேசிவிட்டு சென்றவுடன்தான் இந்தியாவில்தான் உலக ஊழலின் ஊற்றுக்கண் உள்ளது என நிருபிக்கின்றவகையில் அடுத்தடுத்து காமன்விளையட்டு துறையில் ஊழல், மும்பை ஆர்தர்ஸ் வீட்டு ஊழல் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற வகையில் உலகையே உலுக்குகின்ற 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என இந்தியா நேர்மையின் சுயரூபம் உலக நாடுகளுக்கு வெளிச்சம் போட்டு கட்டவேண்டிய காலம் வந்தது.
இதுவரை சுயநலம் காரணமாக நமக்கென்ன என இருந்த பொதுமக்கள் பொங்கி எழுந்து ஊழலுக்கான எதிரான போராட்டம் நாடெங்கிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
அன்று சுவாமி விவேகானந்தா, அவரது குரு ராமகிருஷ்ண உட்பட எராளமான நல்லவர்கள் இருந்த இங்குதான் கால ஓட்டம் கயவர்களை அரசியலிலும் ஆன்மிகத்திலும் வரவழைத்தது. நீண்ட நெடிய காலத்திற்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்டுள்ளு புரட்சி இங்கு மக்களுக்கு ஒரு நம்பிக்கையும் கயவர்களுக்கு ஒரு கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது, இது இந்திய நலனுக்கு வலு சேர்த்தல் நல்லத்துதன் போருத்திருது பார்க்கவேண்டும்.
இப்படிக்கு சி.முருகதாஸ் நேரம் 12:40 AM 0 பின்னூட்டம்
நீர்நிலைகளை காக்க ஆற்றில் மனுபோடும் போராட்டம்
Wednesday, February 2, 2011
இந்தியாவில் சிந்து,கங்கை ,பிரம்மபுத்திரா,காவேரி,பாலாறு,யமுனை,கோதாவரி,நர்மதா,தபதி,பெண்ணையாறு,கிருஷ்ணைள்ளிட்ட 14 பெரிய நதிகளும்,50 சிரியநதிகளும்,ஏராளமான சிற்றோடைகளும் உள்ளன . இந்தியாவில் கிடைக்கின்ற நன்னீரில் 50 சதம் இந்த ஆறுகளின் மூலம் மட்டுமே சுழற்சியை நிகழ்த்துகிறது. இந்த நன்னீர் தான் மக்களின் குடிநீரையும் , விவசாயத்திற்கும்,கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களின் உயிர்வாழ்விற்கு ஆதாரமாகிறது. நமது கலாச்சாரம் ,வழிபாட்டுமுறைகள் நதியில் குளித்தல்,துணிதுவைத்தல் போன்ற அவசிய தேவைகளுக்கு தேவைப்படும் நன்னீர் இங்கிருந்தே பயன்படுத்துதல், கலாச்சார விழாக்களை இங்குதான் நடுத்துவது மரபு. ஆக உயிர் காக்கும் நீரை பருகவும் , உணவுபொருட்களை உற்பத்திசெய்ய தேவையான நீரை நதிகளின் மூலமே பெறுகிறோம். சிறுவர்கள்முதல்,பெரியவர்கள் வரை தண்ணீர்வரத்து இல்லாத காலங்களில் மணலில் விளையாடுதல் என நதிகள் புவியில் முளைவிடும் புள்,பூண்டு முதல் ஆடு,மாடு,புலி,சிங்கம் என உயிர்கள் பிறப்பு,வாழ்வு,சாவு என உயிர்களோடு இரண்டற கலந்து இயங்கசெய்வது தாயாக,தந்தையாக,கடவுளாக, ஆய்வுக்கான கல்விக்கடலாக விளங்கிவந்தது.
செஞ்சி பேரூராட்சி திடக்கழிவுகளை தரம்பிரிக்காமல் சங்கராபரணி ஆற்றில் கொட்டி எரித்து காற்றையும் ,நீரையும் , மண்ணையும் விஷமாக்கிவருகின்றனர் .
இது தொடர்பாக வட்டாட்சியர் , மாவட்டாட்சியர் ,மாசுகட்டுப்பாட்டுவாரிய பொறியாளர்,தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு மனுகொடுத்து இதுவரை நடவடிக்கை இல்லாததால் செஞ்சி பகுதி நீர்நிலைகள் , நிலத்தடிநீர் விஷமாகி உள்ளது. எனவே சட்ட ரீதியாக எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்காதபோது , நதிகளையும்,ஏரிகளையும், நிலத்தடிநீர்ரையும் எங்களால் பாதுகாக்க முடியவில்லை எனவே உன்னை நீயே பாதுகாத்துக்கொள் என சங்கராபரணி நதியை பாதுகாக்க சங்கராபரணி நதியிடமே மனு கொடுக்க முடிவுசெய்து இன்று காலை பசுமைத்தாயக தொண்டர்கள் செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு செஞ்சி சங்கராபரணி மேம்பாலத்தில் ஒரு அஞ்சல் பெட்டிவைத்து போட்டு அரசின் அலட்சியத்தை உணர்த்தினர். இதுகுறித்து நதியின்,ஏரிகளின்,நிலத்தடிநீரின் மாசுபாட்டை பொறுத்துக்கொள்ளாத பொதுமக்கள் சுமார் அரை மணிநேரம் செஞ்சி -திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் வட்டாட்சியர்,காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரிலும்,பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் பேரிலும் மறியல் கைவிடப்பட்டது. பேச்சு வார்த்தையில் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதில்லை எனவும் திடக்கழிவுகளை தரம்பிரித்து உரம்தயாரிக்கவும் சம்மதித்து பேரூராட்சி செயல் அலுவலர் , வட்டாட்சியர் முன்னிலையில் உறுதியளித்தார் .

இப்படிக்கு சி.முருகதாஸ் நேரம் 3:43 AM 0 பின்னூட்டம்