Wednesday, December 2, 2009
பெண்கள் என்றாலே மென்மையானவர்கள் அவர்கள் தங்கள் அழகிலும், ஆரோக்கியத்திலும் மிகுந்த கவலைப்படுபவர்கள் , அதற்காக எவ்வளவு நேரமானாலும் எவ்வளவு முக்கிய நிகழ்வானாலும் கவலைப்படமாட்டார்கள் , அப்படித்தான் திருச்சி மாவட்டம் மன்னச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த டி.டி.கே.லட்ச சந்தியா, பாக்கிய லட்சுமி என்ற இருபெண்கள் விழுப்புரம் காமராசர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அறிவியல் கண்காட்சியில் அறிவியலால் ஏற்பட்டுள்ள சூழல் கேடுகளை நிவர்த்தி செய்து அழகையும் , ஆரோக்கியத்தையும் காக்க ஒரு திட்டத்தை செயல் முறையில் விளக்கினார்கள் , இது அவர்கள் அழகை பாதுக்காக்க அல்ல உலகில் நாளும் அதிகரித்துவரும் கொசுத்தல்லையால் அன்றாடம் வீடுகள் தோறும் தரமட்ட்ற, நச்சுத் தன்மைவாய்ந்த கொசுவத்தி சுருள்களை கொளுத்தி குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகள் , அழகு கோளாறுகளை பற்றி கவலை பட்டிருக்கிறார்கள் . வயதானவர்களுக்கும் சுவாசக் கோளாறு உள்ளிட்டட உயிர்கொல்லி நோயல்களிளிருந்து விடுபட குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்க மூலிகை கொசுவத்தியினை தயாரித்து மனித வளத்தை அழிவிலிருந்து காத்திட நகர ,பெருநகர , கிராம தாய்மார்கள் , குழந்தைகளுக்கு தாயன்புடன் ஆரோக்கிய பாதுகாப்பளித்திருக்கிரார்கள் இவர்கள்.
மூலிகை கொசுவத்தி பற்றி:
தேவையான மூலிகைகள் :
வெப்ப இலைகள், நொச்சி இலைகள் , புதினா இல்லை, துளசி இல்லை,, வேப்பங்கொட்டை,ஆமானுக்கு விதை,ஆடாதோடை பௌடர் , கண்டங்கத்திரி பௌடர் , செவ்வரளிபட்டை போடி, மரத்தூள் , கரித்தூள்
செய்யும் முறை :
இந்த மூலிகைகளை அரைத்து பௌடராக வைத்துக்கொள்ளவேண்டும் , இவற்றை கொசுவத்திபோன்ற அச்சில் இட்டு எடுத்துக்கொள்ளவேண்டும் , அல்லது முருக்கு குழைக்குள் இட்டு கொசுவர்த்தி போன்று பிழிந்துகொள்ளவேண்டும், அல்லது கோன் வடிவத்தில் அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம் என அந்த மாணவிகள் கூறுகின்றனர், மேலும் அவற்றின் சிறப்புகள் பற்றி கூறும்போது ...
மூலிகை கொசுவர்த்தியின் சிறப்புகள் :
இயற்கை
மலிவுவிலை
சுவாசக்கோளாறு இல்லை , குழந்தைகளுக்கு பாதிப்பு இல்லை, மாசு இல்லை
இந்த மூலிகைகள் எல்லா கிராமங்கள் , நகரங்களிலும் கிடைக்கும்
ஆண்களோடு போட்டி போட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏராளமான பெண்கள் செய்தாலும் மனித வள பாதுகாப்பு பற்றி கவலை பட்ட சகோதரிகள் படைப்புகள் புகழ்பெறவேண்டும் மேலும் அவர்களை அவர்களுக்கு பிடித்த இயற்கை பாதுகாப்பு வழியிலேயே சாதிக்க சம்பந்த பட்ட பெற்றோர்கள், மற்றும் கல்விநிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது விருப்பமும் . வாழ்த்துக்கள்.
0 பின்னூட்டம்:
Post a Comment