Wednesday, December 9, 2009
இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 114 கொடிகளை தொட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் மக்கள்தொகைக்கு ஏற்ப மட்டுமல்ல இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்களின் வாங்கும் சக்தி கூடுதல் என்பதைவிட வாகன விற்பனை நிறுவனங்கள் பல்வேறு வட்டிவீதங்களை அறிமுகப்படுத்தி ஏராளமான நிதி உதவி நிறுவனங்களின் உதவியோடு இந்தியா சாலைகளை டாடா நிறுவனத்தின் ஒரு லட்ச றுபாயின் நானோ கார் முதல் இளசுகள் விரும்புவதும் , ஏற்படும் விபத்திற்கு கூடுதல் காரணமான சில இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏழு கோடி வாகனங்களினால் ஆண்டிற்கு 4.5 லட்சம் விபத்துக்கள் நடக்கின்றன.
இந்த விபத்துக்கள் வாகனங்களை இயக்கும் முறையற்ற தன்மைகளான மிக வேகம், குடித்துவிட்டு வாகனம் ஒட்டுதல் , மோசமான சாலைகள் , வாகனம் ஓட்டும்போது செல் போனில் பேசிக்கொண்டே ஒட்டுதல் என வாகனத்தை இயக்கும்போது சாலை விதிகளை பின்பற்றாமல் ஒட்டுவதால் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் ஆண்டிற்கு 16 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இறப்பதாக தகவல்கள் கூறுகிறது.
விபத்து நடப்பது மோசமான சாலைகளிலும் மட்டுமல்ல சர்வதேச தரம்வாய்ந்த தங்க நாற்கர சாலைகளிலும் பேருந்துகள், கார்கள் என விபத்துகள் எதிர்பாராத விபத்துக்கள் வாகனங்களின் பழமைவாய்ந்த தன்மை, முறையான பராமரிப்பின்மை , ஓய்வின்றி வாகனங்களை ஒட்டுதல் என ஏராளமான காரன்களை சொல்லலாம். விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கவும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் நெடுஞ்சாலை ரோந்து வாகனகளையும், நெடுஞ்சாலை அவசர சிகிச்சை மையங்களையும் அரசு அமைத்துள்ளது. இதில் பல நேரங்களில் இவர்களால் நேரத்திற்கு வர முடிவதில்லை . இப்படிப்பட்ட நேரங்களில் விபத்துக்குள்ளான வாகனங்களில் யாருக்கும் சுயநினைவு இன்றி போனாலோ , வெளியில் வர முடியோது போனாலோ நிலமை சிக்கல்.
இப்படி பட்ட சிக்கலான விபத்து நேரங்களில் அருகில் உள்ள மருத்துவமனைக்கும் , உறவினர்களுக்கும் தகவல் தர ஒரு தகவல் சிஸ்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம் காமராசர் அரசு நகராட்சி மேல்நிலை பள்ளி , விழுப்புரத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பார்வைக்காக வைத்திருந்தனர், விழுப்புரம் புனித இருதைய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களான எஸ்.லூசோ,ஸ்ரீ.தேவி , பாக்கியலட்சுமி , ஆனந்த் உள்ளிட்டவர்கள்.
Accident detector system:
ரூ.10,௦௦௦ 000 செலவிலான தங்களது படிப்பை விளக்கும் மாணவர்கள் இந்த சிஸ்டத்தை காரின் ஏதேனும் ஒரு இடத்தில் பொருத்திவிட்டு காரின் ஓரங்களில் சிக்னல் ஒயர் முனைகளை பொருத்திவிட்டால் விபத்து நடந்ததும் குறிப்பிட்ட இடைவெளிக்குள் நாம் பதிவு செய்து வைத்துள்ள நமது உறவினர்கள் எண்ணிற்கும், அருகில் உள்ள மருத்துவமணி அவசர எண்ணிற்கும் தகவல்களை கொடுத்துக்கொண்டே இருக்கும் என்பது இதன் சிறப்பு.
இதற்கு எங்களை பதிவு செய்வதற்கும், தகவல் தொடர்பான நிகழ்வுகளுக்கும் புரோகிராம் செய்ய வசதியாக 8052 என்ற மைக்ரோ பிராசசர்(8052 micro processor) ஒன்றும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை நாம் பதிவு செய்துள்ள எண்ணிற்கு தகவல்களை அனுப்ப காலைடைவேளியை நிர்ணயிக்க ஓர் டைமர் ( timer ckt) பயன்படுத்தவேண்டும், தகவல்களை அனுப்புவதற்கு ஒரு மோடம் (modam), timer circuit உள்ளிட்ட பொருட்களை பொருத்தி இயங்கவைக்க ஒரு கிட்(kid) இவற்றையெல்லாம் ஒரு அமைப்பாக காரின் ஏதாவது ஒரு இடத்தில் பொருத்தி விபத்து நடந்தவுடன் வாகனங்களிலிருந்தும், விபத்துகளிளிருந்தும் உடனடியாக மீட்க இந்த சிஸ்டம் உதவும்.
இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பை மென்பொருள் நிறுவனகள் தங்கள் நிறுவங்களில் பணிபுரியும் பெண்கள் பாலியல் உள்ளிட்ட தாக்குதல்களில் இருந்த காக்க , நிறுவனத்தின் மீட்புக்குழு நடவடிக்கை எடுக்க வசதியாக கண்டுபிடிக்கப்பட்டது , அதிலிருந்து விபத்திற்காக ஒரு வித்தியாச கண்டுபிடிப்பை மாணவர்கள் படைத்திருக்கிறார்கள் இந்த படைப்பை மோட்டார் தொழிற்சாலைகளில் அங்கீகரித்தால் இந்தியா சாலைகளில் மட்டுமல்ல உலக சாலைகளிலும் உயிரிழப்பை தடுக்க முடியும்.
0 பின்னூட்டம்:
Post a Comment