Friday, December 18, 2009
கடந்த ஏழாம் நாள் டென்மார்க் நாட்டின் கோபன் ஹெகன் நகரில் 192 நாடுகளைச்சேர்ந்த அமைச்சர்கள் , தொண்டு நிறுவனங்கள் , பல்கலைக் கழகங்கள் என பிரமாண்டமாக மட்டுமல்ல உலக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கிய இந்த மாநாடு 1997 இல் கொண்டுவரப்பட்டு 2008-2012 என்ற கால வரையறைக்குள் உலக நாடுகள் தாங்கள் ஏற்கனேவே வெளியிட்டுவரும் கரியமில வாயுவை 5.2 சதம் தலைகீழாக குறைத்துக்கொள்ளவேண்டும் இதன் மூலம் உலக கரியமில வாயு வெளியேற்றத்தை பாதியாகக்குறைக்க முடியும் ; காற்று மண்டலத்தில் 280ppm கரியமில வாயு தற்போது 389ppm என்ற அளவில் இருப்பதால் புவியிலிருந்து 15 கி .மீ முதல் -45 கி.மீ. வரையிலான காற்றுமண்டலபகுதியிலுள்ள ஓசோன் படலம் , புதைவடிவ எரிபொருட்களான பெட்ரோல்,டீசல் , தார், நிலக்கரி இவைகளின் அளவுக்கதிக ஒப்யன்பாட்டல் வெளியாகும் கரியமில வாயு, குளிர்சாதன பொருட்களிலிருந்து வெளிவரும் குளோரோபுளோரோ கார்பன் வாயுக்கள், விவசாய நிலங்களில் தேக்கப்படும் அளவுக்கதிக நீரால் உற்பத்தியாகும் மீத்தேன் வாயுக்கள் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களால் அழிவுற்று காற்று மண்டலத்தில் மூன்று மூலக்கூறுகளை கொண்ட ஆக்சிஜன் (ஓசோன்) வாயுக்கள் குறைந்து , சூரியனில் இருந்து வெளிவரும் சக்திவைந்த புரவூதக்கதிர்கள் புவியை தாக்கி சூடடைய செய்து துருவப்பகுதியிலும், இமய மலையிலும் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து அழகிய தீவுகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் வெகு அருகில் உள்ளது.
2004 டிசம்பர் 13 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலை கிட்டத்தட்ட 1,50,000 பேரை சுமித்ரா தீவிலும் தமிழகத்திலும் பலிவாங்கியது, ஏராளமான பொருளாதார சீரழிவை உண்டாக்கியது சுற்று சூழல் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக ஆகிப்போனது . இது போல அமரிக்காவிலும் பல அரிக்கன் சூறாவளிகளின் சீற்றத்தால் சில மாகாணங்களே புரட்டிப்போடபட்டது மறக்கமுடியாது , இந்தியாவிலும் குஜராத் நிலநடுக்கம், புயல், ஒரிஸ்ஸா புயல் என புயல், ஆழிப்பேரலை என புரட்டிபோடுவ்வது ஒருபுறம் கடுமையான வறட்சி மறுபுறம் என உலகை பல விதங்களில் பொருளாதார ரீதியாகவும் , மனித வள ரீதியாகவும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தியது நாம் யாவரும் மறக்கமுடியாத சம்பவங்கள்.
நடைமுறையில் உள்ள கியோட்டோ உடன்படிக்கை கையோப்பமிட்ட்ட அமரிக்க உடனே வெளியேறியது , உலக நாடுகள் வெளியிடும் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் பாதியளவு கரியமில வாயு வெளியேற்றத்தை செய்து கால நிலை மாற்ற குற்றத்தை செய்து உலகநாடுகளின் பேராபத்திற்கு அடிப்படை காரணமாக விளங்கியது அமரிக்க .
தற்போது நிறைவடையவுள்ள மாநாடு பசுமை இல்ல வாயுக்களின் சதவீதத்தை 25 வரை குறைக்கவேண்டும் , இதில் வாளர்ந்த நாடுகள் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர் , இதை இந்தியா, சீனா , தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்கின்றனர் .
இன்று அமெரிக்கா , இந்தியா,சீனா நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் பிரதமர்கள் , ஜனாதிபதிகள் கலந்து கொள்ள உள்ளனர் . இதில் நல்ல முடிவெடுக்க வேண்டும் என எதிர்பார்கின்றனர் ஆனால் வழக்கமான அரசியல் சண்டையை அங்கும் அரங்கேற்றியுள்ளனர் இது மனித குலத்திற்கு மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற எடுக்கும் முடிவு என்பதை உலக தலைவர்கள் நினைவில் கொள்ளவேண்டும் , தற்பொழுது கொண்டுவரவுள்ள கோபென்ஹெகன் உடன்படிக்கை பழைய கியோட்டோ உடன்படிக்கையின் அம்சத்தையும் தழுவி கால மாற்றத்திரும், எதிர்கால மாற்றங்கள் , மனித குளத்தின் பாதுகாப்பு , பொருளாதார சவால்களை உள்ளடக்கியதாக இருக்கும் விதத்தில் அமையவேண்டும் இதில் வளர்ந்த நாடுகள் முக்கியத்துவம் எடுத்து வளர்ந்துவரும் நாடுகளின் நலனையும், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தீவுகள் பாதுகாப்பையும் நிலைத்தவலர்ச்சி உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் , நமக்கு இருப்பது ஒரு பூமி , நாம் பூமியை காப்ப்போம் , பூமி நம்மை காக்கும்.
0 பின்னூட்டம்:
Post a Comment