Tuesday, February 2, 2010
விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாககொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது நாடு , ஆனால் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை இல்லாத நாடு . கிட்டத்தட்ட 50 நதிகள் சீறிப்பாய்ந்து வளமாக்கிய நேரம் ஒருகாலம். சிந்து, கங்கை , பிரம்மா புத்திரா,நர்மத,தபதி, மகாநதி, தாமிரபரணி உள்ளிட்ட 14 பெரிய நதிகளையும் இதர சிறிய நதிகளையும் கொண்டது. ஜன நாயக நாடு என்பதாலோ என்னவோ நாட்டின் வளங்களை யார் வேண்டுமானாலும் சுரண்டலாம் என்ற எழுதப்படாத விதியை வைத்துக்கொண்டு நாட்டை வளம் கொழிக்கவைத்து எழில்கொஞ்சும் இயற்கை வளங்களால் அன்னியதேசத்தினரை கவர்ந்திழுத்த நதிகளின் நதிநீரை தனியாருக்கு தாரைவார்த்து , சட்டவிதிகளுக்கு மாறாக நதிகளில் மணல் கொள்ளை பல மீட்டர்களுக்கு தோண்டி பல கிராம நகரங்களுக்கு கிடைக்கும் கூட்ட குடிநீர் திட்டத்திற்கு வேட்டுவைத்து நதிகளை முள்புதர்கள் மண்டி அதன் போக்கை மாற்றி வெள்ளம் ஊருக்குள் சென்றும்,நிலங்களுக்குள் புகுந்து உயிர்,பொருளாதார பேரழிவை ஏற்படுத்துகின்றன. சரஸ்வதி போன்ற நதிகள் புவிக்குள் ஓடும் நாதிகளாகிப்போனது. தென்பெண்ணை போன்ற பல நதிகள் அழிவைத்தேடிகொண்டிருக்கின்றது.அரசு மணல் குவாரியை ஏற்ற பின்னும் மணல் சுரண்டல் , கொள்ளை தொடருவது தமிழகத்தில் வெட்ககேடானது.
அரசின் நடவடிக்கையும், பொதுமக்கள் போராட்டமும்:
இன்று இயற்கை வளங்களை மட்டுமல்ல மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களையும் அரசியல் வாதிகள் , குண்டார்கள் என பலரும் சுரண்டவும் கடத்தவும் செய்கிறார்கள் இதற்கு மக்கள் ஒன்றாக இணைந்து போராடவும் , எதிர்க்கவும் முன்வரவேண்டும். போராட்டங்கள் நிறைந்த உலகில் நமது தேவைகளுக்கும் , நமது வளங்களை பாதுகாப்பதற்கும் போராடவேண்டும். ஏனெனில் இயற்கை வளங்களில் தான் நமது பொருளாதாரமும், வாழ்வின் ஆதாரமும் உள்ளது. அரசு நதிகளை மட்டுமல்ல நீர்மூலங்களை பாதுகாக்கவேண்டியது அவசியமும் கடமையும் ஆகும். ஏரிகள் தூர்வாரப்படும் , புதிய ஏரிகள் வெட்டப்படு என அறிவித்துவிட்டு ஏரிகளில் அலுவலகங்கள் , பேருந்துநிலையங்கள் , கல்லூரிகள் என சட்டத்தை மதிக்காமல் அரசே ஏரிகளை ஆக்கிரமித்து செயல்படுவது மானக்கேடு மட்டுமல்ல ஜனநாயக படுகொலை அரசு இத்தகைய செயல்களை கைவிடவேண்டும் .
மத்திய அரசும் நீர்வள ஆணையம்:
நதிகள் செல்லும் மாநில அரசுகள் நதிகளை எண்ணற்ற அணைகளை கட்டி திருப்பி விடுகின்றனர், இது நதிகள் பாதுகாப்பு சட்டத்திற்கு முரணானது பிறமாநில மக்களுக்கு குடிக்க , விவசாயத்திற்கு தண்ணீர் தர மறுப்பது இந்தியா இறையாண்மையை பதிக்கும்செயல் இது உல் நாட்டு கலவரங்களை தூண்டிவிடும் செயல் . ஒற்றுமையுள்ள நாட்டில் நீரினால் பிரிவினைகள் ஏற்படுவதை தடுக்க நடுவணரசு நதிகளை தேசமயமாக்கவேண்டும் , அணைகட்டும் மாநில அரசு சட்டப்படி அடுத்த மாநிலத்தின் அதாவது கடைமடை விவசாயிகளின் அரசை அணுகி ஆட்சேபனை இல்லை ஒப்புதல் பெற்று அணைகட்ட அறிவுறுத்தவேண்டும். அப்போதுதான் பிறமாநில மக்கள் உரிமை மட்டுமல்ல நலனும் பாதுகாக்கப்படும் . மத்தியஅரசு முதலில் நதிகளை தேசமயமாக்கி, அனைத்து நதிகளையும் தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு மணல்கொல்லைகள் தடுக்கப்பட்டாலே நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். அனைத்து நதிகளும் அனைத்து இந்தியருக்கும் சொந்தம் என்ற நிலை ஏற்பட்டாலே ஒக்கேனக்கல் திட்டங்கள் எளிதில் நிறைவேறும்.
0 பின்னூட்டம்:
Post a Comment