Friday, February 12, 2010
தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்த காலம் ஒன்று அது மகாத்மா காந்தி அவர்களின் எண்ணப்படி நள்ளிரவில் கூட பெண்கள் தனியாக நடமாடமுடியும் ஆனால் இன்று ஆண்கள் கூட சொந்த வீட்டில் நிம்மதியாக கண்மூடி தூங்கமுடியாத நிலை.அது யாராக இருந்தாலும் சரி ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். என பெரிய அளவில் இருந்தாலும் கூலிப்படைகள் குடும்பத்துடன் தீர்த்துக்கட்டிவிடுகிரார்கள். அதிகார போட்டி, வணிக அறீதியான போட்டி என ஏதேனும் ஒருவிதத்தில் சாதாரண பகை முதல் பெரிய அளவிலான பகைக்கும் தீர்வு கொலை மட்டுமே என இன்றைய நிலை உள்ளது. இதற்கு காரணம் கள்ள சாராயம் காச்சுதல்,கஞ்ச,கேட்டமைன்விற்றல் என ஏதேனும் ஒரு சட்டவிரோத நிகழ்வில் ஈடுபட்டால் பணத்தை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவது பிறகு அரசியல் ,பெரிய அளவிலான கடத்தல் ,கட்டபஞ்சாயத்து என அரசியல் பலத்துடன் நிற்கும்பொழுது காவல்துறை சாதாரண விசாரணை என்றால் கூட யோசிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இவர்கள் பல கற்பழிப்புகள் ,பெண்களை கடத்தல், குழந்தைகளை கடத்தல்,கொலைகள், ரியல் எஸ்டேட் , முறையற்ற விதத்தில் நிலங்களை பலரிடம் விற்பது போன்று பொதுமக்கள் ஏராளமாக பாதிக்கப்பட்டு ஒன்றுகூடி போராடும்போழுதோ? அல்லது பெரிய அளவிலான புள்ளிகள் இவர்களால் பாதிக்கப்பட்டாலோ இவர்கள் மீது சட்டம் பாயும் அதுவும் நமது நாட்டின் சட்ட ஓட்டைகளை காவல் துறையைவிட நேர்த்தியாக குற்றவாளிகள் பயன்படுத்துவதால் சவாலான ஒன்றாக இருக்கும் கட்டுக்கடங்காத நிலையில் காவல் கடைசியில் துப்பாக்கி எடுத்து போராடவேண்டிய நிலை வளர்த்துவிட்ட காக்கிகளையே காவுகேட்கும் கூலிப்படை.
இப்படி தமிழகம் முழுவதும் கூலிப்படைகளை வைத்து செயல்பட்ட திண்டுக்கல் பாண்டி சமீபத்தில் காவல் அதுரையினரின் அசத்தலான நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலுமுள்ள கூலிப்படையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . குற்றம் சிறியதோ பெரியதோ அதற்கேற்றார்போல தண்டனைகள் இருந்தால்தான் தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் அமைதி ஏற்படும் , அதற்கு காவல் துறை தயக்கம் காட்டக்கூடாது .
..
0 பின்னூட்டம்:
Post a Comment