தனிநாடு கேட்கும் பால் தாக்ரே....

Friday, February 5, 2010

           இந்தியாவின் மிகப்பெரிய மாநகரங்கள் (metrocorporation-Mcity) மும்பை , கொல்கத்தா , டெல்லி , சென்னை இவற்றில் மும்பை அவ்வப்போது தீவிரவாத தாக்குதல், வன்முறை, இறையாண்மைக் கெதிரான  பேச்சுக்கள் இவைகல்லால் பரபரப்படைவது வாடிக்கை. சமீபத்தில் சிவசேன கட்சியின் தலைவர் பால்தாக்ரே மும்பை மராட்டியர்களுக்கு மட்டும்தான் சொந்தம் வட இந்தியர்களுக்கு அல்ல என வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது பேரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.  இவரது பேச்சுகளுக்கு அவ்வப்போது சில பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம் இந்த முறை பிரபல கிரிக்கெட் வீரரும் மும்பை மண்ணின் மைந்தருமான சச்சின் டெண்டுல்கர் இந்தியா இந்தியர் அனைவருக்கும் சொந்தம் என பேசி ஒருமைப்பாட்டுக்கு வலுசேர்த்து உள்ளார் ஆனால் சிவசேன தலைவர் பால்தாக்கரே எதிர்ப்பை தேடிக்கொண்டுள்ளார்.இந்த வரிசையில் இந்தி நடிகர் ஷாருக்கான் ,காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி , மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்ட பலரும் பால்தாக்கரே கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததால் அவர் கோபமடைந்து , ஷாருக்கான் திரை படங்கள் பாதிப்படைந்தால் நாங்கள் பொறுப்பல்ல என பேசி வன்முறைக்கு அழைப்புவிட்டிருக்கிறார் .
இந்தியாவின் நுழைவுவாயில் 
           கேரளா மண்ணின் மைந்தர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேநீர் கடைகளையும், வணிக நிறுவனங்களையும் , அரசு பணிகளையும் செய்து வாழ்கின்றனர், அதேபோல் மும்பை , கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநில மக்களும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணிபுரிகின்றனர் அதற்கு நமது அரசியல் சட்டம் வழிவகை செய்கிறது .  ஏன் வெளிநாடுகளில் கூட சென்று பணிபுரிய புலம் பெயர் சர்வதேச தொழிலாளர் சட்டம் வழிவகைசெயகிறது.  நமது நாடு பல மொழிகள் பேசுகின்ற மக்கள் வாழ்வதால் அவர்களின் விருப்பப்படி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது .   ஆனால் பிரமாநிலத்தவர்கள் பணிபுரியக்கூடாது என கர்நாடக, மும்பை போன்ற மாநிலங்களில் மட்டுமே சில அரைவேக்காட்டு அரசியல் வாதிகள் மிரட்டுகின்றனர்.  முதலில் அந்த மாநில மக்களின் புலம்பெயர்தலையோ , பிறமாநில அரசுவேலை,(மத்திய அரசு பணி) , மின்சாரம் உள்ளிட்ட தேவைகளை புறக்கணித்தால் இது நியாயமானது.  நெய்வேலி அனல்மின்னிளையத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கர்நாடக, மராட்டியர்கள் பணிபுரியலாம், கர்நாடகாவிற்கு மின்சாரம் தேவைப்படுகிறது; ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது  என்பது வெட்கமாக இல்லையா? இந்தியா என்ற ஜனநாயக நாடு அனைத்து மொழிகளை பேசுகின்ற அனைத்து மக்களும் எங்கு வேண்டுமானாலும் வசிக்க , பணிபுரிய , எந்த மதத்தையும் சார்ந்திருக்க வழிவகை செய்கிறது.  மராட்டிய இந்தியாவில் ஒரு மாநிலம் தானே தவிர தனி நாடு அல்ல என்பதை உணரவேண்டும் மராட்டியர்களுக்கு மட்டுமே மும்பை சொந்தம் என வன்முறையை தூண்டிவிடுவது இந்தியாவிலிருந்தும் இந்தியா மக்களிடமிருந்தும் மராடியர்களையும், மராட்டிய மாநிலத்தையும் தனிமைப்படுத்தும் ஒரு துர்பாக்கிய நிலையை மட்டுமல்ல சர்வதேச அளவில் வளர்ந்துவரும் பெரு நகரங்களில் புகழ்பெற்றுவரும் மும்பை அந்த வாய்ப்பை இழக்கவேண்டிவரும் . அந்த மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிராக பால்தாக்கரே மட்டுமல்ல வேறு யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில , மத்திய அரசுகள் தயங்கினால் சம்பந்தப்பட்ட மாநில மக்கள் பிற மாநிலங்களுக்கு செல்ல, வசிக்க, பணிபுரிய வேண்டிய வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் , எனவே இறையாண்மை மீது அக்கறை செலுத்திவரும் காங்கிரஸ் அரசு உடனே அவர்களை தேசப்பதுகப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் . 


.









0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger