தண்ணீர் தேவையில் தன்னிறைவு எப்போது?

Friday, March 12, 2010

               புவி 29 சதவிகிதம் நிலப்பரப்பையும் 71 சதவிகிதம் நீர்பரப்பையும் கொண்டது .  புவியிலுள்ள நீர்பரப்பில் 97 சதவிகிதம் உப்புநீராகவும் மீதமுள்ள 3 சதவிகிதம் நன்நீராகவும் உள்ளது.  வீட்டு உபயோகத்திற்கும், விவசாயத்திற்கும்,தொழில் வளர்ச்சிக்கும்,சுற்றுச்சூழல் உள்ளிட்ட மனித வள மேம்பாட்டிற்கு  நன்னீர் தேவைப்படுகிறது .   நன்னீர் தட்டுப்பாடு , தேவையை காட்டிலும் பலமடங்கு அதிகரித்துவிட்டது .  ஆற்றுப்படுகை,ஏரிகள்,குளங்கள்,புவியின் அடிப்பரப்பு,துருவப்பகுதிகளில் உறைந்துள்ள பனிப்பாறைகளில் நன்னீர் உள்ளது.
நன்னீர் தட்டுப்பாடு தேவையைக்காட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது இதற்கு மக்கள் தொகை பெருக்கம் , தொழில் சாலைகள் பெருக்கத்தினால் அவைகளுக்கு தேவைப்படும் அளவுக்கதிக நன்னீர், பெருகி வரும் நகரமயம் ,நதிகளில் கலந்துவிடும் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகளால் அழிந்துவரும் நன்னீர் ; இவைகளால் நன்னீரின்  அளவு குறைந்து விடுகிறது.
உலக நன்னீர் நாள் :
           மார்ச் 22 உலக அளவிலான நன்னீர் நாளாக கடைபிடிக்கப்படுக்கியறது .  இதில் நன்னீரை  பாதுகாத்தல் ,மழை நீரை சேமித்தல் , தண்ணீர் சிக்கனம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.
           தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த ஒரு திரவப்பொருளாக  மட்டுமே பார்க்கக்கூடாது அது இப்புவியில் உயிர்கள் நிலைத்து வாழ அடிப்படை ஆதாரம், இதை பாதுகாப்பதும், சிக்கனமாக செலவிடுவதும் சாதாரண குடிமகன் முதல் முதன்மை குடிமகன் வரை ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல எதிர்கால சந்ததியினரின் தேவைகளை விட்டுசெல்லும் பொறுப்பும் ஆகும்.
 அரசின் கொள்கையும் மக்களின் தண்ணீர் தேவையும்:
              மக்களுக்கு விவசாயம்,குடிக்க உள்ளிட்ட வீட்டு தேவைகளுக்கு சுத்தமான , பாதுகாப்பான நன்னீரை தரவேண்டியது அரசின் கடமை என்பதனை அரசுகள் உணரவேண்டும் இதனை தேர்தல் நேர வாக்குறுதிகளாக மட்டுமே பயன்படுத்தாமல் ஆயுட்கால கடமையாக செய்யவேண்டும். பெரும்பாலும் நச்சு ரசாயனங்கள் பயன்படுத்தப்படும், நச்சு ரசாயனங்கள் உற்பத்திசெய்யப்படும் தொழிற்சாலைகள் முழுவதும் ஆற்றின் கரைகளிலேயே கட்டுவதற்கு அனுமதி கேட்கப்படும்பொழுது அதை அரசுகள் அனுமதிக்கப்படக்கூடாது , ஏற்கனவே செயல்பட்டுவரும் தொழிற்சாலைகள் தாங்கள் வெளியேற்றிவரும் நச்சுக்கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டபிறகு நீர்நிலைகளில் கலக்கவிடவேண்டும், அனுமதி முடிந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்க கூடாது.
பல்லுயிர் பெருக்க பேரழிவு:
             தொழிர்சாளைகளிலிருந்து வெளியேறும் நச்சுரசாயன கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் ஆறுகளில் கலக்கவிடுவதால் ஆற்றின் மூலம் கடலில் கலக்கும் பொது கடலிலுள்ள மீன்கள் ,டால்பின்கள், திமிங்கலங்கள் ,பவளப்பாறைகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான உயிர்கள் பாதிக்கப்படுகின்றன.  ஆறுகளில் கலக்கின்ற நச்சுரசாயனகழிவுகள் அருகில்(நதிக்கரை) உள்ளஏரிகள்,குளங்கள்,கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில்  கலப்பதால் மக்களின் குடிநீர் மாசடைந்து மனிதா வளமும், பிற உயிர்களும் பல்வேறு உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு அழிவையும் இதன்மூலம் புவியில் மனிதவளம் அழிவை சந்திக்கிறது.
              மனித வளம் நிலைத்தவளர்ச்சியடைய சுத்தமான நன்னீரை பாதுகாப்பதும், சேமிப்பதும் இன்றியமையாதது இதை அரசின் கொள்கையாகக் கொண்டு அதிக நிதி ஒதுக்கி நீர் தேவையை தன்னிறைவு செய்வதில் முனைப்பு காட்டிடல் வேண்டும்.

    

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger