Saturday, March 13, 2010
தமிழகத்தில் உள்ள தருமபுரிமாவட்டத்தில் பென்னாகரம் தொகுதியின் இடைத்தேர்தல் வரும் இருபத்திஏழாம் தேதி நடைபெற உள்ளது. இங்கு தி.மு.க., ஆ.தி.மு.க., பா.ம.க. தே.மு.தி.க.வேட்பாளர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனுக்கள் ஏற்கப்பாட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளனர்.
கடந்த முறை தேர்தல் தேதி அறிவித்தவுடனே தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக முடிக்கிவிடப்பட்டு தனியாத்துப்போட்டி என அதிரடியாக அறிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் . தி.மு.க.வேட்பாளராக மறைந்த எம்.ல்.ஏ. மகன் இன்பசேகரன் அறிவிக்கப்பட்டு கடுமையான வறட்சி வேலையின்மை காரனகளால் அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூர் பகுதிகளில் வசித்துவரும் சுமார் 25,000 வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டியதாக செய்தி .பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் மணியின் மகன் தமிழ் குமரன் , ஆ.தி.மு.க. வேட்பாளராக அன்பழகன்,தே.மு.தி.க.வேட்பாளராக பாட்டளிமக்கள் கட்சியிலிருந்து விலகி சென்ற வழக்கறிஞர் போட்டியிட்டாலும் பென்னகரத்தை போருத்தவாரை ஆளும் கட்சியின் இன்பசேகரனும், பாட்டளிமக்கள் கட்சியின் தமிழ் குமரனும் களத்தில் சரிநிகர் போட்டியாளர்கள்.
ஆளும் கட்சியின் வேட்பாளர் இன்பசேகரன் ஆளும் அதிகாரம்,பணம் இவைகளை நம்பியும் , பா.ம .க.வின் வேட்பாளர் தமிழ்குமரன் தனது தந்தையின் சாதனைகள்,சாதி ஓட்டுக்கள் இவைகளை நம்பி நிற்கிறார்.
தொகுதியில் நடைபெறும் சம்பவங்கள் சில:
கடந்த இரண்டுமாதங்களாக ராமதாஸ் ஆதரவாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் வீடு வீடாக சென்று வெற்றிலை பக்கு வைத்து , அங்குள்ள மக்களின் வேலைகளை பகிர்ந்து ஒட்டுவேட்டையாடிவருகின்றனர். கடந்த இருமாதங்களாக அமைதிகாத்து கடந்த இருவாரங்களாக சிலிர்த்தெழுந்த ஆளும் திமுக. சேலைகள் , சாக்கெட்டுகள் , வேட்டிகள் என இனாம் பொருட்கள் கொடுத்தான் , பிரியாணி, கலர் சாராயம் என விருந்து வைத்தும் தொகுதியில் குக்கிராமங்கள் விடாது கலக்கி விட்டு காவலர்கள் ஏவிவிட்டு சோதனை சாவடிகளை அமைத்து விட்டு ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன் ஆரம்பித்த மக்களுக்கான பணப்பட்டுவாடா ஒரு ஓட்டுக்கு ஆயிரம் என இரவு பகலாக நடந்து முடிந்தது.கடந்த இரு திங்களுக்கு களத்தில் சுறுசுறுப்பாக ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆதிமுக.வினர் நகர பகுதிகளில் மட்டும் வளம் வருகின்றனர்.
இடைத்தேர்தலின் சனநாயகம்:
இடைதேர்தல் என்றால் ஆளும் கட்சி மட்டுமே வெற்றிபெறும் நிலை இன்று உள்ளது. இடைதேர்தல் என்பது ஆளும் ,எதிர் கட்சிகளுக்கு மக்கள் மனநிலை அறிய உதவும் தேர்தல்.ஆனால் கடந்த ஆதிமுக காலத்தில் அரக்கோணம்,சைதாபேட்டை என தமிழகத்தின் பல இடைத்தேர்தலில் அதிமுக. வென்றது ஆனால் பொது தேர்தலில் தோல்வியடைந்தது. அதற்கு காரணம் அதிகார துஷ்பிரயோகம் செய்து வென்றதுதான்.அதேநிலை தற்போதும் தொடருகிறது. சோதனை சாவடிகளில் உள்ள காவலர்கள் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளை சோதனை செய்வதும், ஆளும் தரப்பின் தேர்தல்விதி மீறல்களை கண்டுகொள்ளாமல் விடுவது என்ன ஜனநாயகம். எதிர்கட்சிகளின் புகார்கள் மீதான நடவடிக்கைகளை முடிக்கிவிட தேர்தல் ஆணையம் முனைப்புகட்டிடவேண்டும் அப்போதுதான் ஆளும் தரப்பின் வரம்புமீறல் கட்டுக்குள் வரும் . இதே நிலை பொது தேர்தலிலும் தொடரவேண்டிய நிலைக்கு மக்கள் மனநிலை தள்ளப்ப்படுமானால் நாட்டில் நல்ல மக்கள் பிரதிநிதிகள் இன்றி ஊழல் பேர்வழிகளிடம் நாடு சிக்கினால் மக்கள் பேராபத்தில் சிக்குண்டு வறுமையும் , வேலைவைப்புமின்றி அவதியுறும் நிலைக்கு ஆளாவார்கள் . வாழ்க ஜனநாயகம் . வெல்லட்டும் மக்கள் எண்ணங்கள்.
0 பின்னூட்டம்:
Post a Comment