Saturday, March 27, 2010
சமீபத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை போலி மற்றும் காலாவதியான மருந்துகளை பதுக்கிவைத்து விற்பனைசெய்துவந்த அங்கிகரிக்கப்பட்ட மருந்துமொத்த விற்பனை ஏஜென்சி கையும் களவுமாக மாட்டி இருப்பதுதான். தமிழகத்தில் மருத்துவத்துறையில் போலியான மருத்துவ்வர்கள்,போலிமருந்துகள்,காலாவதியான மருந்துகள் விற்பனை குறித்து நீண்டநாட்களாக சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பதும்,போலிமருத்துவர்களை மீதான நடவடிக்கைகோரி கடலூர் மாவட்ட மருத்துவர்கள் போராட்டமே நடத்தி முடித்தார்கள் இதற்காக அரசு செவிசாக்கவில்லை என்பது வேதனைதான்.கொடுங்கையூர் காலாவதியான மற்றும் போலியான மருந்துகள் பதுக்கி விற்ற மொத்த மருந்து விற்பனை நிறுவனத்தின் செயல் வெளிஉலகத்திற்கு தெரிய வந்ததும் இந்த கொலை பாதக செயலில் இருக்கும் பிற நிறுவனங்கள் உஷாராக அரசின் தீவிர நடவடிக்கையை கண்டதும் காலாவதி மற்றும் போலி மருந்துகளை குப்பைமேட்டிலும் , ரோட்டின் ஓரத்திலும் கொட்டிவிட்டு செல்வதை அன்றாட செய்தி ஊடகங்கள் வழியாக காணமுடிகிறது. நகராட்சி குப்பையுடன் கொட்டி எரிப்பதுவும் சில இடங்களில் நடக்கிறது.
மருத்துவக்கழிவுகள் அழிக்கும் முறைகள்:காலாவதியான மருந்துகளை அழிக்கவும் போலிகளை ஒழிக்கவும் உலக சுகாதார நிறுவனம் மருத்துவ துறைக்கு அறிவுரைகள், விதிகள் வகுத்து வைத்துள்ளது பணத்திற்காக ஆசைப்பட்ட ஓநாய்கள் தரமில்லாத மருந்துகளை வாங்க மருத்துவகல்லுரிகளுக்கும் , மருந்துகடைகளுக்கும் சிபாரிசு செய்து மக்களை பலி ஆக்க தங்களது அறிவை ஆக்கபூர்வமற்ற முறையில் செலுத்துகின்றனர். மருந்து விற்பனையாளர்கள் மட்டுமல்ல சிபாரிசு செய்யும் அதிகாரிகள் , மருத்துவ அலுவலர்கள் நிச்சையம் கண்கானிக்கப்படவேண்டியவர்கள். சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் இறப்பவர்கள் தரப்பில் மருத்துவர்கள் மீது தொடரப்படும் வழக்குகளால் அவர்கள் துணிந்து அறுவை சிகிச்சை செய்யமுடியாது என கூறியுள்ளது. ஒரு சில சமயங்களில் மட்டுமே அவ்வாறு நிகழ்கிறது . போலிகளாலும் தொழில் தெரியாமலும் , சரியான மருந்துகள் இல்லாமல், உரிய கவனம் இல்லாமல் நிகழும் உயிரிழப்புகளுக்கு நிச்சையம் தண்டனைகள் வழங்கமுன்வந்தாலே குற்றங்கள் குறைந்து மருத்துவத்துறையில் மனம் கமழும் உயிர்களும் வாழ முடியும்.
காலாவதியான மருந்துகளும் போலி மருந்துகளும் :
உணவும், மருந்துகளும் உயிர்காக்கும் உன்னத வேலையை செய்கிறது காலாவதியான மருந்துகளும்,உணவுபொருட்களும் விஷமாகி உயிர்பறிக்கும் வேலையை செய்கிறது. காலாவதியான மருந்துகளினால் குழந்தைகள்,முதியோர்கள் ,பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் உயிரிழக்கியற கோரமான நிலை ஏற்படுகிறது. மருத்துவமனையில் உற்பத்தியாகும் திசுக்கழிவுகள்,மருந்துகழிவுகள் இவற்றை முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்காவிடில் இன்பெகசியன் நோயால் இறந்துபோவார்கள். உலகில் பத்து சதம் பேர் மருத்துவக்கழிவுகளால் இறக்கின்றனர். இதேபோல் போலி மற்றும் காலாவதி மருந்துகளால் எத்தனை உயிர்கள் துடிதுடித்து இறக்க இந்த கயவர்கள் பல கோடிகளுக்கு ஏராளமான குழந்தைகள், முதியவர்கள் என கத்தி இன்றி ரத்தமின்றி தமிழகத்தினை கொலைக்களமாக்கியுள்ளனர்.சத்தமின்றி இப்படி ஒரு உயிர்கொல்லி புற்றுநோயிருக்க காரணமான அரசு அதிகாரிகள்,இந்த திட்டத்திற்கு துணைபோன அத்தனைபேரையும் கண்டிப்பாக தூக்கில் போடவேண்டும் ஏனெனில் இவர்கள் கணக்கில்லாத கொலைகளை செய்துள்ளனர். தண்டனைகள் கடுமையாகாத பட்ச்சத்தில் இப்படிப்பட்ட கொலைபாதக செயல்கள் நிறுத்த முடியாது. தமிழக முதல்வர் கருணாநிதி மருந்து இல்லாமலோ, மருத்துவர் இல்லாமலோ ஒரு உயிர் போனால் அதற்காக வெட்கப்படுவேன் என்று கூறியுள்ளார். போலிமருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளாலும், போலி மருத்துவர்களாலும் ஏற்படுகிற உயிரிழப்புகளுக்கு அவமானப்படுவார ? நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் என்ற திருவள்ளுவரின் வாக்கின்படி தமிழகத்தில் நோய்க்கு ஏற்ற மருந்து எது என கணிக்க தெரியாத மருத்துவர்களும் , உயிர்பறிக்கும் போலி,காலாவதியான மருந்துகளுமே தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறது. இந்த வெட்கக்கேட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு அறுவை சிகிச்சை செய்து குனப்படுத்தவேண்டியது தமிழக அரசின் கடமை . சட்டம் தன் கடமையை செய்யுமா?
0 பின்னூட்டம்:
Post a Comment