Wednesday, September 8, 2010
தமிழகத்தில் பிரதான தொழில் விவசாயம் மூன்றுபோகமும் நெல்விளையும் மாடுகட்டிபோரடித்தால் மாளாது யானைகட்டி போரடிக்கும் உலகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை தரணியை கொண்டதில் பெருமைகொண்டதமிழ்நாடு. உலக மனிதகுலத்திற்கு உணவுபடைக்கும் தஞ்சை தரணி சோழர்கால ஆட்சியின்போதே சோறும் நீரும் விற்பனைக்கு அல்ல என தண்ணீர் பந்தல் அமைத்து வழி நெடுங்கிலும் சோறும் நீரும் வழங்கிவந்தனர் இது தற்போது ஏட்டு தகவல் ஆகிப்போனது. உலகம் எழுபத்தியொரு சதம் நீரை கொண்டிருந்தாலும் 2.7% நன்னீரை மட்டுமே கொண்டுள்ளது இது ஆறுகள் குளங்கள் ,ஏரிகள் நிலத்தடி நீர்மட்ட்டம் என 1.7% மட்டுமே உள்ளது மீதம் ஒரு சதம் திண்ம நிலையில் பனிபாறைகளாக உள்ளது.97.3% நீர் உப்பு நீராக கடலில் உள்ளது.தமிழர்கள் தங்கள் உழைப்பு நேரம்போக மீதிநேரத்தை பக்திபரவசத்திலும், நாடகங்களிலும் பொழுதை கழித்து மகிழ்வுற்றனர். இந்த நாடங்கங்கள் தங்கள் முன்னோர்கள் வீரம், தியாகம்,இலக்கியவரலாறு,ராமாயணம்,மகாபாரதம் உள்ளிட்ட நீதியை ஒழுக்கத்தை வலியுறுத்தும் கதைக்கலங்களைகொண்டதாக இருந்துவந்துள்ளது. தங்கள் கொண்டாடும் திருவிழாக்களான பொங்கல் , விஜயதசமி,விநாயகர் சதுர்த்தி ,தீபாவளி போன்றவை கழிவுகளற்ற , மாசற்ற முறையில் புத்தாடைகளுடன் , இனிப்புகள்,தேங்காய் பழங்கள் கொண்ட வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் உற்சாக இயற்கை நட்போடு இருந்தது.
நவ நாகரிகம் வளர்ந்து விட்டதன் விளைவு பிரம்மாண்ட சிலைகள் வழிபாடு ,ஒழி,சூழல் மாசுபாடு ,நச்சு ரசாயனங்களை நீரில் கரைப்பதால் நீர் மாசுபாடு போன்றவைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி என்பது இந்தியாமுழுவதும் அனைத்து மக்களாலும் இன மொழிவேற்றுமையற்ற விழா டெல்லி,மும்பை , கல்கத்தா,புதுவை ,சென்னை உள்ளிட்ட நகரங்களிலி பிரபலமாக நடத்துவது வழக்கம். மற்றபகுதிகளில் களிமண்ணால் ஆனா சிலைகளை வழிபாட்டு நீரில் கரைப்பது வழக்கம். அது நாளடைவில் கிராமங்களிலும் பிரம்மாண்டங்கள் பரவ அனைத்து இடங்களிலும் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் நச்சு ரசசாயன சிலைகள் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
இதனால் நீர்மாசடைந்து கடல் வாழ் உயிரினங்கள் அழிவதன்மூலம் 75% கடல் உணவை நம்பிவாழும் மனித குளம் புதியியவகை நோய்களுக்கும், பேரிடர்களுக்கும் ஆளாகவேண்டியநிலை ஏற்படுகிறது. சொற்ப நன்னெறுள்ள புவியில் ஆறுகளில் , குளம்,ஏறி,நிலத்தடிநீரும் பாதிக்கப்பட்டுவிடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதால் நிலம் மாசடைவதால் உணவு உற்பத்தியும் , குடிநீரும் வீழ்ச்சியடைகிறது இதனால் மனித இனமும், கால்நடைகளும் பாதிப்படைகிறது. வணிகநோக்கோடு இல்லாமல் இயற்கை நண்பனாக வணிகர்களும், பொதுமக்களும் பொறுப்போடு இயற்கை முறையில் வழ்கிபட்டாலே அறனும் நலன்பயக்கும்,வாரத்திற்கும் வாய்ப்பு.
0 பின்னூட்டம்:
Post a Comment