இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி முக்கியமானது.உள்ல்கட்டமைப்புகளான சாலை,போக்குவரத்து ,குடிநீர் உள்ளிட்ட சிலவசதிகளை சிறப்பாக செய்துவருகிறது.புதுவை சுற்றுலாபயணிகளை கவர்ந்திழுக்க அழகுபடுத்துவதும்,அடிப்படைவசதிகளை செய்துதருவதில் புதுவை அரசு முக்கியத்துவம் தருகிறது. புதுவை பிரதேசத்தின் அழகு மேம்பாட்டிற்கு மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு தடையாக இருப்பது அன்றாடம் உற்பத்தியாகும் நூற்றுக்கணக்கான மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கலந்த குப்பைகள்தான். தினம் தினம் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் குவிந்துவிடுவதால் இடப்பற்றாக்குறையை போக்க நகராட்சி ஊழியர்கள் தீ வைத்து எரித்துவிடுகின்றனர் இதனால் கரியமிலவாயுவும் , டை ஆக்சினும் வெளியாகி பொதுமக்களுக்கு உயிர்கொல்லி நோய்களை உண்டாக்கியும் , சுற்றுசூழலையும் பாதித்துவிடுகிறது. இதனால் சுற்றுசூழல் ஆர்வலர்கள் , பசுமைத்தாயகம் உள்ளிட்ட அமைப்புகள் முதல்வருக்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும்(எறியும்) பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி வந்தனர். கடந்த ஜூலை மாதம் முதல் புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் புதுவையில் பிளாஸ்டிக் வைத்திருப்பதும் விற்பனைசெய்வதும்,பயன்படுத்துவதும் தடைசெய்யப்படுவதாக சொன்னார் இதை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்,விற்பனையாளர்கள் பேரணி நடத்தி கோரிக்கைவிடுத்தனர். இதனால் சிலமாதங்கள் தள்ளி வைத்தனர். மீண்டும் நடைமுறைப்படுத்தினர் (GO.MS.NO.9/2009,ENVIT DT.4.6.2009 / )(1986/5 central Act 29 of 1986) . கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் நமச்சிவாயம் 49 கோடி ரூபாய் செலவீட்டில் திடக்கழிவுமேலான்மை திட்டத்தை நடைமுறைப்படுத்தி உரம் தயாரிக்கப்படும் என அறிவித்தார் , ஆனால் புதுவையில் இன்னும் தூக்கிஎரியும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடந்துகொண்டும் , குப்பைகளை எரிப்பது நடந்துகொண்டும் உள்ளது.சட்டத்தை அமல் படுத்த அரசு என்ன செய்யபோகிறது என பொதுமக்களும் ,சூழல் ஆர்வலர்களும் எதிர்பார்கின்றனர். புதுவையில் புகையிலை சட்டம் ,பிளாஸ்டிக் தடைச்சட்டம் பல்வேறு சட்டங்கள் போன்று காற்றில் பறக்கிறது கவனிப்பது எப்போது?
1 பின்னூட்டம்:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment