பசுமைத்தாயகம் -புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நோய்தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்துறையும் இணைந்து செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 14-10-2010 வியாழக்கிழமை காலை பத்துமணி முதல் மாலை 3.30 மணிவரை இலவச மருத்துவமுகாமை நடத்தின. இந நிகழ்ச்சிக்கு புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் இருதயநோய் பிரிவு துறை தலைவர் மருத்துவர் பாலச்சந்தர் தலைமைதாங்கினார் . முன்னதாக அனைவரையும் வரவேற்றார் பசுமைத்தாயகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.முருகதாஸ் வரவேற்றார்.சமூகமருத்துவத்துரையின் பேராசிரியர்கள் மருத்துவர் கெளதம் ராய் , மருத்துவர் ஜெயலஷ்மி , செஞ்சி பேரூராட்சி தலைவர் கே,எஸ்.மஸ்தான் , செஞ்சி உதவிதொடக்ககல்வி அலுவலர் ஏ . கோவர்த்தனன்,கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கோ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்மலையனூர் சட்டப்பேரவையின் உறுப்பினர் பா.செந்தமிழ்செல்வன் முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். முகாமில் பொதுமருத்துவம் ,கண்மருத்துவம்,எலும்பு நோய் மருத்துவம் , மனநல மருத்துவம்,பிசியோதெரபி மருத்துவம்,இருதயநோய் மருத்துவம்,மாதர்நோய் மற்றும் குடும்ப நலமருத்துவம்,காத்து,மூக்கு,தொண்டைநோய் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவதுரைகலைஎர்ந்த துறை தலைவார்கள், மருத்துவ வல்லுனர்கள்,மருத்துவ அலுவலர்கள் இரத்த அழுத்தம்,ரத்தசர்க்கரை அளவு , இருதய சுருல்படம்,இருதய ஸ்கேன் உள்ளிட்ட பரிசொதனைகளைசெய்து மருந்துமாத்திரைகளை இலவசமாக வழங்கி சிகிச்சை அளித்தனர். முகாமில் 1100 பேர் கலந்துகொண்டுசிகிச்சைபெற்றனர் இதில் 659 மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இம்முகாமின் சிறப்பு பெண்கள்தொடர்பான நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் பெண்மருத்துவர்களை மட்டுமே கொண்டு சிகிச்சை அளித்தனர் . இம்முகாமில் மூன்றாம் பருவ மருத்துவ மாணவர்கள் பொதுசுகாதாரம்,குடும்ப நலம்,மருத்துவமனைகளிழ்மட்டுமே பிரசவம் உள்ளிட்ட விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினார் . முகாமில் மருத்துவர் பாலச்சந்தர் தலைமையில் 44 மருத்துவ வல்லுனர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். முகாமில் பேசிய மருத்துவர் பாலச்சந்தர் இந்த முகாம் வெறும் பரிசோதனை முகாம் அல்ல பரிசொதனைகளைதொடர்ந்து சிகிச்சை அளிக்கத்தக்க 1500 பேர் பயன்பெறும் வகையில் விலைஉயர்ந்த மாத்திரைகள் அளித்தும் அதிகதொந்தரவு உள்ளவர்களை புதுவை ஜிப்மரில் அழைத்துவந்து தொடர் சிகிச்சை அளித்துகுனப்படுத்தும் ஒரு சிறப்பு முகாம், இதற்கு ஏற்பாடுசெய்த பசுமைத்தாயகம் நிறுவனத்திற்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துகொள்கிறோம் என்றார் . முகாமின் நிறைவு நேரத்தில் பள்ளி மானவமானவிகளுக்கு கைகழுவுதல் உள்ளிட்ட பொதுசுகாதார செயல்களை விளக்கி பயிற்சி அளித்தனர். முடிவில் தலைமை ஆசிரியர் நன்றிகூறினார் . .
0 பின்னூட்டம்:
Post a Comment