Tuesday, September 29, 2009
ஒவ்வோருஉயிரினமும் பிறக்கும்போது அதன் தாய் பாலை கொடுக்க வேண்டும் என்பதுதான் நியதி , உரிமையும் ஆகும்.இதை மனித இனம் மட்டுமே மீறுகிறது . குழந்தை பிறந்த உடனே சீம்பால் எனப்படும் மஞ்சள் நிறப்பாலை கண்டிப்பாக தரவேண்டும். இதுதான் அந்த குழந்தையின் ஆரோகியத்தையும் ,நோய் எதிர்ப்புசக்தியையும் தருகிறது. நமது முன்னோர்கள் கிராமங்களில் நாங்கள் எல்லாம் அந்த காலத்தில எம்புள்ள நடக்கிற வரைக்கும் பால் கொடுப்போம். இப்ப இருக்கிற பெண்கள் புட்டில் கொடுக்குறாங்க கேட்டல் அழகு போய்டுது என்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால் அழகு கெடுவதில்லை எனழகுக்கு கரணம் என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துதான் என சமீபத்தில் மிஸ் சென்னை ஆக தேர்வான அழகி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. குழந்தையின் ஆரோக்கியம் கருதுபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் பசுவின் பால் கரைகிறவர்கள் கையில் சிரங்கு இருந்தால் , பசுவின் மடியில் புன் இருந்தால் , கறக்கிற பாத்திரம், பக்கெட்;செய்யப்படும;இடம் என பால் எங்கும் நஞ்சாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் தாய்ப்பால் மட்டுமே நூறு சதம் துய்மையான பாலாகும். காட்டில் புலி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் முதல் கடலில் உள்ள டால்பின், திமிங்கலம் உள்ளிட்ட மீன் வகைகள், வவ்வால் உள்ளிட்ட பிறவிகள் வரை அணைத்து உயிரினங்களும் தன் குட்டிகளுக்கு தன் பாளை மட்டுமே கொடுக்கிறது. மனித இனம் மட்டுமே தன் பாலை தராமல் பசும் பாலை தந்து பசுங்கன்றுக்கும் தீங்கு விளைவிக்கின்றனர்.
0 பின்னூட்டம்:
Post a Comment