Tuesday, October 6, 2009
இரத்ததானம், கண்தானம், உடல்தானம், அன்னதானம் என பிற உயிர்களை காப்பதில் மனித இனம் சமீபத்தில் மிகுந்த அளவில் விழிப்புணர்வு அடைந்துள்ளது மகிழ்ச்சியான ஒன்றுதான் . ஆனால் தாய்பால் கொடுக்கும் விசயத்தில் இன்னும் மனித இனம் முதிர்வு பெறவில்லை என்பதுதான் வருத்தம். ஏனெனில் தாய்பால் குறித்து மூன்று மணிநேரம் பேசுபவர்கள் கூட அதை பின்பற்றுவதில்லை. தாய்பால் மட்டுமே ஆரோக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் அதை குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்ற நிலையிலும் அழகு கெட்டுபோய்விடும் என்றெண்ணம், வறுமை உள்ளிட்ட காரணங்களால் தாய்பால் கிடைக்காத நிலையை தொடர்ந்து தற்போது தாய்பால் வங்கி தொடங்கி வருகின்றனர். இதில் தாய்மார்களிடம் இருந்து சேகரித்த தாய்பாலை சில்வர் பாத்திரத்தில் சேகரித்து வைத்தால் கெடாது என மருத்துவர்கள் கூறி வருகின்றனர் . தாய்பாலை சீசாவில் கொடுக்கவேண்டும் என நினைப்பவர்கள் வழக்கமாக தரும் பசும்பால் போன்றவற்றையே தரலாம் ஏனெனில் பசும்பால் சேகரிக்கும் முறை சுத்தமனதாக இருக்கும்படி பார்த்தாலே சிறப்புதான். தாய்பாலை கருவிகள் மூலம் உறிஞ்சி சேகரித்து பாதுகாப்பதிலும் சில ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம், ஒருவேளை இல்லை என நிருபிதலும் இதில தாய்க்கும் குழைந்தைக்குமான பிணைப்பு குறைத்துவிடும். மேலும் இதனால் வறுமைகள் உள்ள தாய்மார்கள் தன் குழந்தைக்கு பால் தருவதை தவிர்த்து வருமயை போக்க பாலை விற்பது அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு உயிரின் தாய்பால் அதன் குழந்தைகளுக்கு சேர்வதற்கு உண்டான உரிமையை பாதுகாக்க வேண்டிய நாம் மனித இனத்தின் தாய் பாலையாவது வணிக பொருள் ஆவதை ஊக்குவிக்க வேண்டாம். எனவே ரத்தவங்கி போன்று தாய் பால் வங்கி திறப்பது மனிதகுலத்தில் எஞ்சியுள்ள பாசபினைப்பை வேரறுக்கும் செயல் ஆகும்.வேண்டாம் தாய்பால் வங்கி
0 பின்னூட்டம்:
Post a Comment