Sunday, October 11, 2009
இந்திய அரசு 1977 ஆம் ஆண்டு நவம்பர் பதினைந்தாம் நாள் சட்டத்தை நிலை நிறுத்தவும் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் ஆண் ஒரு அமைப்பாக காவல்துறை இயங்குவதை பற்றி ஒரு விரிவான ஆய்வு நடத்த ஒரு ஆணையத்தை நியமித்தது . இந்த ஆணையம் தனது அறிக்கைகளை 1979 பிப்ரவை முதல் 1985 மே வரை அரசுக்கு அளித்தது . கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த அறிக்கை மேல் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி பிரகாஷ் சிங் உள்ளிட்ட சிலரும் உச்ச நீதிமன்றதில் மத்திய அரசு காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுரிப்படுத்த கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 22.9.2006 அன்று மிக முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது . அதில் காவல் துரையின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளுக்கு பெரும்பாலான காரணம் மிகையான , நாட்டு நலனுக்கு போருதமில்ல்லாத வெவ்வேறு மட்டத்திலான அரசியல் குறுக்கீடுகளே (An overdose of unhealthy and petty political interferance) என்பதே மக்கள் கருத்தாக நாடுமுழுவதும் உள்ளது . இந்த குறிக்கீடுகள் காவலர்களின் பணி மாறுதல்களில் இரிந்து தொடக்கி கட்சி நலனுக்காக காவல்துறையை பயன்படுத்துவது மற்றும் ஊழல் அலுவலர்களுக்கு அரசியல் பாதுகாப்பு அளிப்பது வரை உள்ளது. மைய அளவிலும் மாநில அளவிலும் மாநில பாதுகாப்பு ஆணையம் ( State SecurityCommission) அமைக்கப்படவேண்டும் . இந்த ஆணையம் காவல்துறை மேல் மாநில
அரசு முறையற்ற அழுத்தத்தையோ தாக்கத்தையோ கொடுக்காமல் (Unwarranted influnce or pressure) காவல் துரை அரசியல் அமைப்புசட்டம் படியும், இதர சட்டபடியும் செயலாற்ற வழிவகை செய்யும் பொருட்டு தக்க வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும்.இந்த ஆணியத்தின் தலைவராக முதல்வரோ அல்லது உள்துறை அமைச்சரோ இருப்பர், மாநில காவல் துரை தலைவர் செயலாளராக இருப்பார் . அரசின் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக இயங்கும் வகையில் இந்த ஆணையத்தின் இதர உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவர்,இதற்காக மாநில அரசு மனித உரிமை ஆணையம் ,ரிபெரோ குழு , சோரப்ஜி குழு ஆகியவை பரிந்துரைத்த குழுக்களில் இரூந்து ஒன்றை தேர்வு செய்யலாம்.. மாநில காவல் துரை இய்யக்குனர் பதவிக்கு துரை அலுவலர்களின் பனிக்காலம் , அனுபவம், பணியின் தரம் ஆகியவைகளின் அடிப்பாடையில் மைய தேர்வனையத்தின் பரிந்துரைப்பட்டியலில் இறந்து மூன்று மூத்த அலுவலர்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும். அவர் இரண்டாண்டுகள் குறைந்தபட்சம் பணியில் இருக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு கீழ் உள்ள பதவிகளுக்கான் நியமனம் மாறுதல், பதவி உயர்வு,மற்றும் இதர பணிகளுக்காக நிர்வாக நலவாரியம் அமைக்கப்படவேண்டும். இந்தவரியம் மேல்முறையீடுகளை ஏற்று தீர்பளிக்கும் வாரியமாக செய்யல்படும். மாவட்ட அளவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு கீழ் உள்ள அலுவலர் களின் மீதான் புகார்களை விசாரிக்க புகார் குழுமம் நியமிக்க்கப்ப்படவேண்டும், அதற்கு மேல் உள்ளவர்கள் மீதான புகார்களை விசாரிக்க மாநில அளவில் தனி குழுமம் அளிக்காப்படவேண்டும்.. மாவட்ட குழுவிற்கு தலைவராக நீதிபதியும், மாநில குழுவிற்கு தலைவராக உயர் அல்லது உச்ச நீதிமன்ற நீதி பதியும் இருக்கவேண்டும், மேற்கண்ட வழிகாட்டுதல்கள் மைய, மாநில அரசுகளால் 31.12.2006 குள்நடைமுரைபடுதவேண்டும், இந்த புதிய அமைப்புகள் 1.1-2007 முதல் செயல்பட வேண்டும். இதற்கான பிரமான பத்திரத்தை மத்திய அமைச்சரவை செயலாளர், மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் 3-1-2007-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இதுவரை உச்சநீதிமன்ற உத்தரவுகள் இதுவரை நடைமுறை படுதாததுதான் நாட்டில் ஊழல்களும், குற்றங்களும் பெருகியதற்கு காரணம்.
0 பின்னூட்டம்:
Post a Comment