திறந்தவெளி கழிப்பறை 15 லட்சம் பேர் சாவு

Saturday, November 28, 2009

       இந்தியாவில் சுமார் 66.5 கோடிபேர் கழிவறை வசதி இல்லாமல் ஏரிகள் , குளங்கள், சாலை ஓரங்கள் , தெரு       ஓரங்கள் ,வயல்வெளிகள்,கண்மாய்கள் போன்ற இடங்களை தங்களது அன்றாட காலை கடன்களை (கழிப்பறைகளாக) கழித்திடும் இடங்களாக தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையே உள்ளது.  இதனால் வயிற்றோட்ட நோய்கள் உள்ளிட்ட நோய்களால் 15 லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள். இந்தியா அரசு 1999 இல் 11 கோடியே 98 லட்சம் கழிப்பறைகள் 2012 க்குள் கட்டிமுடிக்கப்படவேண்டும் என நிர்ணயித்தது.கடந்த பத்து ஆண்டுகளாக 5.95 கோடி கழிப்பறைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மீதமுள்ள 6.03  கோடி கழிப்பறைகளை மீதமுள்ள இரண்டாண்டுகளில் செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க முடியுமா.  ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டிக்கொள்ள ரூ.500 மானியம்  வழங்க அரசு கூறியது ஆனால் இத உறுதிப்படுத்த முடியாத அரசு இன்னும்  ஐம்பது சதவிதம் கூட நாம் எட்டமுடியவில்லை அடிப்படை வசதிகளை அரசு செய்து தந்தாலே நோயவர வாய்ப்புள்ள காரணிகள் அழிக்கப்படும்.கழிப்பறைகள் கிராமங்கள்தோறும் குழந்தைகள் , பெண்களுக்காக கட்டப்பட்டுள்ளவைகள் செயல் வடிவத்திற்கு வராத நிலையிலேயே உள்ளது, தண்ணீர் வசதிக இல்லை, பாதுகாப்பு அல்லது ஊரை விட்டு நீண்ட தொலைவு போன்ற காரணங்களால் சுகாதார கழிப்பறைகள் பாழடைந்த நிலையிலேயே பெரும்பாலான கிராமங்களில் உள்ளது இவைகள் அரசியல்வாதிகள் டெண்டர்  வேலைகள் முடித்து பர்சண்டேஜ் கொடுத்து பில்  பாஸ் செய்து பணம் பெற்று கொள்ளை லாபம் சம்பாதித்ததொடு முடிந்தது சுகாதார கழிப்பறைகள் கிராமங்களில் ஆரோக்கியமாக இல்லை வெட்கக்கேடான அரசியல் நமது நாட்டில் நிலைமை சுடுகாட்டில், கழிப்பறை, சாலைகள்,மருத்துவம் போன்ற அவசியதேவையான அடிப்படை வசதிகள் பேரும் ஊழலில் சிக்கிதவிப்பதால் நிலை மக்களுக்கு பயனின்றி உள்ளது. சட்டம் மட்டுமல்ல மனசாட்சிப்படியும் பணிகள் நடக்கவகைசெய்யுமா அரசு.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger