பார்த்தீனியம் நச்சு செடிகளை அரசு அழிக்குமா?

Saturday, November 28, 2009


            விவசாயநிலங்களிலும் , சாலையோரங்கள்,வீட்டின் தோட்டங்கள் என எங்கு பார்த்தாலும் தக்காளிச்செடியைப்போன்ற தோற்றமுடைய , வெள்ளை நிறத்திலான பூக்களை பூக்கும் ஒரு நச்சு களைதான் பார்த்தீனியம் .  இதன் பிறப்பிடம் வட மற்றும் தென் அமெரிக்கா இந்த களை தானியங்களை இறக்குமதியின்போது வந்ததாக கூறப்படுகிறது.
பார்த்தீனியம் தீமைகள்:
பார்த்தீனியம் நச்சு செடிகள் செடி முளைத்த 4 முதல் 6 வாரங்களுக்குள்ளாக பூக்களை பூத்து அதன் மூலம் நச்சு வாயுக்களை காற்றில் பரவ விடுகிறது இதனால் மனிதர்களுக்கு சுவாசக்கொலாருகளையும், தோல் நோய்களையும் ஏற்படுத்துவதோடு , பிற உயிர்களுக்கும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது .
பார்த்தீனியம் பரவும்  முறைகள் :
           நீரின் மூலமாகவும் , கால்நடைகள் இதை தின்பதால் அவைகளின் சாணங்களின் மூலமாகவும் , இந்த செடிகளின் விதைகளை சுற்றி முட்கள் போல இருப்பதால் எளிதில் காற்றில் மூலம் பரவும் .
அழிக்கும் முறைகள் :
              இந்த செடிகளை பிடுங்கி ஒரு பள்ளம் வெட்டி அதில் போட்டு சோடியம் குளோரைட் என்ற சாதாரண உப்பை கரைத்து தெளித்தால் அழிந்துவிடும். அல்லது 24D , (gamaxin ) கிரமாக்சின் என்ற ரசாயனங்களை நீரில் லிட்டருக்கு 4 மி.கி.\மி.லி. கரைத்து தெளித்தால் அழிந்துவிடும்.  இந்த களை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இருப்பதால் நீண்ட காலமாக இருப்பதால் ஒரு முறை அழிப்பதால் எளிதில் அழிந்துவிடாது , மூன்று அலது நான்கு முறை அழித்தால் இவை அழிந்துவிடும் , இவற்றை பிடுங்கி அழித்தபின் கைகளை சொப்புபோட்டு நன்கு கழுவவும் , இவைகளை பிடுங்கி போட்டாலோ அல்லது எரித்தாலோ அழியாது . இவைகளை கிராமங்கள்தோறும் சுத்தமாக அழித்து இந்த கிராமம் பார்த்தீனியம் இல்லாத கிராமம் என அறிவிக்கவேண்டும் , இதை தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல பொது மக்களும் செய்யலாம். சுற்றுசூழலுக்கு மட்டுமல்ல மனித வளத்தையும் காத்திட இந்த கலைகள் அழிக்கப்படவேண்டும். இதற்கு அரசு சார்பிலான விவசாய துறைகள் வழிகாட்டல் வேண்டும் அரசு ரெக்கார்டுகளில்  மட்டுமே பார்தினியும் அழிக்கப்படுகிறது நிஜத்தில்  அல்ல .அரசின் விவசாயத்துறை அதன்
கடமையை செய்யவேண்டும்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger