சுத்தமான புதுவை , பசுமையான புதுவை :குப்பை புதுவை

Monday, November 23, 2009

         புதுவை யூனியன் பிரதேசம் இந்தியாவில் உள்ள ஏழு யூனியன் பிரதேசங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகம் போன்று அதிக மக்கள் தொகை , அதிக இடப்பரப்பு இல்லாததால் நிர்வாகம் செய்வதற்கு நல்ல வசதியாக இருந்துவந்தது.  கடந்த முறை முதல்வராக இருந்த ரங்கசாமி அரசுக்கு நெருக்கடிகொடுத்த வைத்தியலிங்கம் இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதலால் அரசு அதிகாரிகள் அதிகார தோரணையுடன் செயல்படதொடங்கிவிட்டனர். புதுவை அரசின் தூய்மையான புதுவை,பசுமையான புதுவை என்ற கொள்கையை அமல்படுத்த முனைந்ததால், பொதுமக்களின் கோரிக்கைகள், தொண்டுநிறுவனங்கள் வேண்டுகோளுக்கிணங்க கடந்த ஜூன் மாதம் ஒரு அரசாணையை புதுவை அரசு கொண்டுவந்தது (G.O.MS.NO.9\2009, ENVIT.DT.4.6.2009) .  இந்த சட்டம் 1986\5 (CENTRAL ACT 29 OF 1986) ஐ  நடைமுறைப்படுத்த புதுவை அரசு சுற்றுச்சூழல் சட்டத்தை கொண்டுவந்து கடந்த ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது , பிளாஸ்டிக் பண முதலைகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த சுற்றுச்சூழல் சட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  புதுவை அரசின் ஆளுகை குறுகிய பரப்பளவு என்பதால் நிர்வாகிப்பதற்கு வசதிதான் அதன் மக்கள்தொகைக்கு நாள்தோறும் உற்பத்தியாகும் நூற்றுக்கணக்கான மெட்ரிக் டன் குப்பைகளை வில்லியனூர் புறவழிசாலை ஓரம் எரித்து அப்பாகுதிமாக்கலுக்கும், அவழியே பயணம் செய்யும் பயணிகளுக்கும் பல்வேறு வகையான உயிர்கொல்லி நோய்களையும் , சூற்றுசூழளையும் கெடுக்கின்றனர், மேலும் புதுவை நகரில் உற்பத்தியாகும் குப்பைகளை சேகரித்து கடலூர் எல்லையிலும், விழப்புரம் மாவட்ட எல்லையிலும் கொட்டிவிட்டு வந்துவிடுகின்றனர், இதனால் அம்மாவட்ட மக்கள் போராட்டம், சாலைமறியல் என கொட்டிய குப்பைகளை மீண்டும் ஏற்றி அனுப்பிய சம்பவங்கள் நடந்துள்ளது.
             இதற்கு அந்த சுகாதார அமைச்சரான நமவச்சிவாயத்திடம்  கேட்டால் 49 கோடி ரூபாயில் உரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது என மழுப்புகிறார்.  அருமையான சட்டம் பிளாஸ்டிக் உற்பத்திக்கும் , விற்பனைக்கும் தடைவிதித்து இயற்கை கைவினைபோருட்களை ஊக்குவித்தாலே ஏராளமான மக்களுக்கும் வேலைகிடைக்கும் பசுமையான புதுவை, சுத்தமான புதுவை கனவு நனவாகும்.  மேலும் இயற்கை உரம் தரித்தாலே உரம் தட்டுப்பாடு நீங்கி, உரம் விற்பனை மூலம் அரசுக்கும் , பஞ்சாயத்திற்கும் நல்ல வருவாய் கிடைக்கும் , சுற்றுச்சூழல் கெடுவது தடுக்கப்படும். 
அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை சிறிதும் தாமதிக்காமல் உடனே நடைமுரைப்படுதினால் புதுவையில் உள்ள நகர கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு வருவாய் கிடைக்கும், குப்பைகளை எரிப்பதால் மனிதவளம் அழிக்கப்படுவது தடுக்கப்படும்,  அப்போதுதான் சுத்தமான புதுவை , பசுமையான புதுவை சாத்தியமாகும்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger