Sunday, November 22, 2009
கடந்த நவம்பர் 26 ம் நாள் மும்பை நகரத்தை தீவிரவாதிகள் அதிரடித்தாக்குதலில் மும்பை மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப்படை தலைவர் ஹேமந்த கர்கரே உள்பட தேசபாதுகாப்புபடை அதிகாரிகள் , பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பத்து முறை தீவிரவாதிகளின் பட்டியலை இந்தியா அளித்தும் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடமும் ஒப்படைக்கவில்லை , நடவடிக்கையும் எடுக்கவில்லை , நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமெரிக்கா நடவடிக்கையை எடுக்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அளித்த உறுதிமொழியும் நிறைவேற்ற இந்தியா யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை , சம்பந்த பட்ட அமைச்சர்களும் கிருஷ்ணா, சிதம்பரம் போன்றவர்கள் எக்ஸ்குளுசிவ் பெட்டி கொடுத்து ஓராண்டை கடத்திவிட்டார்கள் , உள்நாட்டு தீவிரவாதிகளான மாவோயிஸ்ட் நல்வழிப்படுத்த முடியாத அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் தீவிரவாத வழிக்கு செல்கிறார்கள் , இதுகுறித்து அரசு மத்திய படைகளை கொண்டு ஒடுக்கும் எனவும், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போம் எனவும் கூறி ஏமாற்றுகிறவர்கள், அல் குவைதா தீவிரவாதிகளின் செயலுக்கு திடமான இந்தியா அரசின் நடவடிக்கை மட்டுமே தீர்வாகுமே தவிர பெட்டிகளும், அந்நிய நாட்டவரின் உதவி எதிர்பார்ப்பு பலனை தராது , எப்போது துணிச்சல் வருவது சிதம்பரத்திற்கு இல்லையேல் திறமையான நபரை அமர்த்தவேண்டியது அரசின் கடமை. இந்தியா அரசு மும்பை மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியா மக்களுக்கு என்ன தீர்வு சொல்லபோகிறது.
...
0 பின்னூட்டம்:
Post a Comment