Tuesday, November 17, 2009
கடந்த முப்பது ஆண்டுகளாக பிறந்தமண்ணில் வேலைவாய்ப்பில்,கல்வியில்,அதிகாரத்தில் உள்ளிட்ட உரிமைகளுக்காக தமிழ் ஈழ விடுதலைபுலிகள் இயக்கத்தை நிறுவி போராடி வந்தார்கள் அந்த மண்ணின் மைந்தர்கள் இந்த போராட்டம் நியாயமானது நிச்ச்சயம் வெற்றிபெறும் என உலகில் வாழும் தமிழர்கள் , விடுதலை ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்தார்கள். எதிர்பார்த்த அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்தது.
இந்திய நாட்டின் தேர்தல் முடிவு காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என திட்டவட்டமான நிலையில் அங்கே விடுதலை புலிகள் தலைமையிலான விடுதலை இயக்கம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததுதான் தமிழர்களுக்கு எதிரானவர்களின் திட்டமிட்ட சதி. .
"சுரங்கப்பதையின் முடிவில்வெளிச்சம் கிடைக்கும், ஒவ்வொரு போராட்டத்தின்
முடிவில் நிச்சையம் வெற்றி கிடைக்கும்" என்பது புதுவை அன்னையின் வாக்கு. இந்த மிகப்பெரிய பின்ன்னடைவு விடுதலை மட்டுமல்ல அரசுக்கு எதிராக மக்கள் நலனுக்காக போராடும் போராளிகளுக்கு வரலாறு காணாத விரக்தியைத்தந்திருக்கும் என்பதில் மாற்றுக்குகருத்து இல்லை.
இப்படிப்பட்ட வரலாறு காணாத பின்னடைவுக்கு அவர்களின் (அரசின்) நடவடிக்கைமட்டும் காரணமல்ல உலக தமிழன் தாய்நாடு என்று எந்த தேசத்தை முழமையாக நம்பினானோ அந்த அரசுதான் பூகோள வரைபடத்தையும் , இரானுவ தளவாடங்களையும் ,ஆலோசனைகளையும், இராணுவ வீரர்களையும் அளித்து போரை நடத்தி தமிழ் இனத்தை அழித்தது சர்வதேச அவமானம். ஒவ்வொரு விசயத்திலும் உள்நாட்டு தமிழனுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை கிடைக்காமல் செய்யும் பிறமாநில அரசுகளுக்கு சாதக இருந்து வந்த மத்திய அரசு இப்போது தொப்புள் கொடி உறவுகளான ஈழ தமிழர்களை அழித்து , அங்குள்ள எஞ்சிய மக்களை நிர்வாணப்படுத்தி சுட்டுகொன்றும், தரையில் இவர்கள் செய்த கொடுமைகளை தண்ணீரில் சிங்கள வீரர்கள் தமிழ் வாலிபனை தடியால் அடித்து கொன்றது எந்த விதத்திலும் அங்கே தமிழன் எஞ்சி வாழ அவர்கள் விரும்பவில்லை எனத்தெரிகிறது . தமிழகத்திற்குகூட எந்தவிதத்திலும் ஈடாகாத ஒரு தீவு அங்கே சக குடிமகனான தமிழனை கொன்றுகுவித்த கொடுஞ்செயல் தமிழகத்தில் உள்ள தமிழ் தலைவர்களின் ஒற்றுமை இல்லாத சுயநல அரசியலால் சக உடன்பிறப்பை குழி தோண்டிபுதைப்பதை வேடிக்கை பார்த்த கேவலம் வேதனைதான்.
எஞ்சியுள்ள தமிழ்மக்களை மிருகங்களைக் காட்டிலும் படுகேவலமாக திறந்தவெளியில் பருவமழை தீவிரத்தின் போதும் அடைத்துவைத்து கொடுமைப்படுத்தியது கானகூடாத காட்சி. இவ்வளவு நடந்த பிறகு தமிழினத்தின் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதி அரசியல் நாகரிகத்தின் தவப்புதல்வன் என்று காட்டிக்கொல்லுபவர் இந்த அறிய வாய்ப்பில் சனநாயகத்தின் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் கூட்டணிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுப்பி சப்பக்கட்டை கட்டி அங்கே ஒரு இன்பச்சுற்றுலா நடத்தி பாராட்டு நட்பை சிங்கள என வெறியன் ராஜபக்ஷேவுடன் கைகோர்த்து,பொன்னாடைபோர்த்தி வந்தது பார்த்த தமிழன் நெஞ்சில் வேலைபைச்சியது. அடங்க மறு அத்து மீறு என்று தன இன இளைஞர்களை ரத்தம் கொதித்து வீறுகொண்டெழச் செய்த திருமாவளவன் அங்கே சென்றதும் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனதுதன் வேதனை . இங்கே வீதிகளில் மேடைபோட்டு காதுகளை கிழிக்கும் இவர் அங்கே இவர் பிரபாகரனுடன் இருந்திருந்தால் இன்று இருந்திருக்கமாட்டார் என நக்கலாக பெசியதைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்டதாக சொல்லிவிட்டு இங்கேவந்து வீராப்பாக பேசுவது ஆர்ப்பாட்டம் செய்வது இங்குள்ள தமிழர்களை கேனப்பயனாக நினைத்திருப்பதுதானோ எனத்தோன்றுகிறது . தமிழனுக்கு எந்தவிதத்திலும் உறவில்லாத நார்வே நாட்டு அரசு மனிதாபிமானத்தை காக்க பொரடியதிலும் நாம்காட்டாதது குறித்து வெட்கப்பட நமது தலைவர்கள் தயாரில்லை . இந்த நிலையில் நாடாளுமன்ற குழு இந்தியா திரும்பியதும் நான்கே நாளில் விடுதலை என போஸ்டர் அடித்தது வெட்ககேடானது . தமிழர்களுக்கு விடுதலை, தனி ஈழம் என பேசியவர்கள் முள்வேலியில் இருந்தவர்களை விடுதலை செய்யவேண்டி குழு அனுப்புவதும்,விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேசியதற்காக போஸ்டர் அடித்து விடுதலை வாங்கித்தந்ததாக விளம்பரம் செய்கின்ற கேவலநிலையில் போகின்ற தலை தமிழக தலைவர்களின் பார்வையும் உணர்வும் சுருங்கிப்போனது வீரம் செறிந்த தமிழனுக்கு தீராத அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
ஒருபோராளி இயக்கம் தோற்றுவிட்டதற்கு இன்னொரு போராளி இயக்கம் வருத்தப்பட்டது சிறிது ஆறுதல் அளிக்கிறது. மேற்கு வங்கம் , பிகார் போன்ற வடமாநிலங்களில் இயங்கிவரும் மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கம் அந்தபகுதி மக்களின் அடிப்படை தேவைகளைபூர்த்தி செய்யத அரசுக்கு எதிராகப் போராடிவருபவர்கள் இனவிடுதலையில் பின்னடைவை சந்தித்த விடுதலைபுலிகளுக்கு aayuthangal சப்பளை செய்வோம் எனவும் அவர்களின் விடுதலைக்கு தேவையான உதவிகளை யார்தடுத்தாலும் செய்வோம் என அறிவித்திருப்பது மகிழ்ச்சியானது ஏனெனில் ஒரு இயக்கத்தின் முயற்சி தோற்றால் அதைவைத்து அனைத்து விடுதலை மற்றும் அரசுக்கு எதிரான நியாயமான போராட்டங்களை தோல்வியடைய செய்துவிடுவது வாடிக்கையாகிவிடும் .
0 பின்னூட்டம்:
Post a Comment