Monday, November 23, 2009
தமிழக ஆன்மீக தளங்களில் புகழ்பெற்ற சிவாலய மலைவளம் வரும் இந்தியா அளவில் பக்தர்களை கொண்டுள்ளதுதான் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தை சுற்றி பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் மலைவலப்பாதை உள்ளது . இந்தப்பதையை சுற்றிலும் ஒவ்வொருமாதமும் பக்தர்கள் வளம் வருவதுதான் இந்த ஆழத்தின் சிறப்பு இந்த மலை வலத்தின் பொது மலையில் உள்ள ஆயிரக்கணக்கான இயற்கை மூலிகை தன்மைகொண்ட காற்று தம்மீது படுவதால் தம்முடைய நோயல்கள் குனமாகின்றது, உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கின்றது . மேலும் கடவுள் அனுகிரகத்தையும் நாடி தமிழகத்திளுமிருந்து மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இலச்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த மலை வலப்பாதையில் ஆனாய்பிறந்தான், அடி அண்ணாமலை , வேங்கிக்கால்,அத்தியந்தால் ஊராட்சிகளும் , திருவண்ணாமலை நகராட்சியும் இருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான மக்கள் போட்டுசெல்லும் பிளாஸ்டிக் குப்பைகள் ,நகராட்சிகுப்பைகள் என நூற்றுக்கணக்கான மெற்றிக் டன் குப்பைகளை தரம் பிரிக்காமல் கிரிவல்;அப்பதையிலும் , ஈசானிய லிங்க ஆலயத்தின் அருகேயுள்ள ஈசன்யத்தில் கொட்டி எரித்துவிடுகின்றனர்.
இதனால் டயாக்சின் விழ வாயுவும் , கரியமில வாயுவும் உற்பத்தியாகிறது. இந்த குப்பை எரிக்கும் இடம் தி..மலை பேருந்து நிலையத்தின் அருகேயும் , வேலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்திலும் உள்ளதால் மலை வளம் வருகின்ற பக்தர்களுக்கு நன்மை பயப்பதைக் காட்டிலும் பெரிய அளவில் உயிர் கொல்லி நோய்கள் வந்து மிகபெரிய கேடுகள் விளைவிக்கின்றன.
தடை செய்யப்பட்ட டயாக்சின் வாயுவால் ஆண்மைக்குறைவு,பெண்தன்மை குறைவு , மலட்டுத்தன்மை , குளோரின் சம்பந்தப்பட்ட நோய்கள் , மயிர்ச்சருமா நோய்கள், நரம்பு மண்டலம் பாதிப்புக்கள் , கொழுப்புசத்து குறைபட்டு நோய்கள், தோல் நிறம் பற்றிய நோய்கள் , பிறவி ஊனங்கள் , உடல் உறவில் குறைந்த நாட்டம் உள்ளிட்ட ஏராளமான உயிர் கொல்லி நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கரியமில வாயுவால் ஓசோன் மண்டலம் பாதிக்கப்படுவதால் புவி வெப்பமடைதல் , பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்தல், சூரியனின் அதிகப்படியான புற ஊதாக்கதிர்களின்
தாக்கத்தால் புவியில் உள்ள பல்லுயிர்கள் பாதிப்புகள் , மனிதர்களுக்கு தோல்நோய்கள்
உள்ளிட்ட புதியவகை நோய்கள் ஏற்பட்டு மிகப்பெர்யா அழிவை உண்டாக்குகிறது.
திருவண்ணாமலை தீபத்திருவிழா வருடாவருடம் கார்த்திகை மாதம் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இதில் பல லச்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபாட்டு மலை வளம் வருவது சிறப்பு , இந்த நிகழ்வு வரும் டிசம்பர் முதல் தேதியில் நடைபெற உள்ளது அந்த தினத்தில் இந்த குப்பைகள் எரிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், திருவண்ணாமலை நகராட்சி திடக்கழிவுகளை தரம் பிரித்து இயற்கை உரம் தரித்து நகராட்சிக்கு வருமானத்தை அதிகரிக்கவும், அழிந்து வரும் மனித வளத்தை காத்திடவும் நிரந்தர தீர்வு காண வழிவகை செய்தால் மட்டுமே திருவண்ணாமலை ஆண்மீகத்தளம் இல்லையேல் ஆண்மை அழிக்கும் தளமாகும் , இதுகுறித்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஒருவிழிப்புனர்வுக்க்காகமட்டும் இல்லை ஆன்மீகத்திற்கு எப்போதும் வரலாற்றில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே நம் நோக்கம்.
0 பின்னூட்டம்:
Post a Comment