Friday, November 20, 2009
இந்தியாவின் நான்கு தூண்களுக்கு அடுத்ததாக பத்திரிகை துறையை பெருமையுடன் சொல்லிக் கொள்வார்கள்வார்கள் ஏனெனில் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பாலமாக இருந்து அரசின் திட்டங்கள் , மக்களின் அடிப்படை வசதிகள் , தேவைகள் குறித்தும் மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அரசு இயந்திரம் செவ்வனே செயல்பட்டு மக்கள் நலமுடன் வாழ வகை செய்வது அதன் கடமை . ஆனால் இன்றைய சூழலில் அத்தகைய நிலையில் இருந்து சற்று விலகி மக்கள் நலனைவிட வர்த்தக ரீதியாக செயல்பட்டு வருமானம் பார்க்கவும் , தங்களது டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்துவதற்காக போட்டிபோட்டு வருகின்றவர்கள் ஏராளம் . ஒரு நடிகை பாய் பிரண்டு வைத்திருந்தாள் அதை இதை முதலில் படியுங்கள் என வண்ணப்படத்துடன் கோட்டை எழுத்துக்களில் போடுவார்கள் , ரஜினி நீலகலர் கொட்டு போட்டு அதில் வைலட்கலர் டைகட்டினார், சர்ரென்று வந்தார் விர்ரென்று போனார் என செய்திதாளின் தலைப்புச் செய்தியில் போடுவார்கள் இப்படியாகிவிட்டது ஈடுகளின் நிலைமை. அன்னைதெராசா முக்திபேறு பெற்றதற்காக விருது வழங்கியதை உள்பக்க செய்தியாகப்போட்டு நடிகை விபச்சார வழக்கில் கைதை முதல் பக்கசெய்தியாக போட்டது எவ்வளவுபெரிய கேவலம்(தினத்தந்தியில் மட்டும் அன்னைதெராசவிருது செய்தி தலைப்பு செய்தி) . ஒரு ஆண்டிற்கு புகையிலை பயன்பாட்டால் இந்தியாவில் பத்துலட்சம் பேரும் , உலகில் ஐம்பது லட்சம் பேரும் சாகடிக்கப்படுகிறார்கள் , எய்ட்ஸ் நோயால் ஆண்டிற்கு உலகில் முப்பத்தொரு லட்சம் பேரும் சாகிறார்கள் என்பதனை எந்த செய்தி ஊடகமும் , நாளேடும் முக்கியத்துவம் தருவதில்லை இதுதான் செய்தி தர்மமா யோசிக்கவேண்டும் சம்பந்தப்பட்டவர்கள் . விற்பனையை அதிகரிக்க சினிமாசெய்திகளையும், நடிகைகளின் கிசுகிசுக்களையும் போடுவதால் இன்றைய நிலையை பத்திரிகைகள் கொட்டருக்கும் , கோழி பிரியாணிக்கும் பாடுபட்டதாக சேற்றை வாரி இறைத்ததை மறக்கக்கூடாது இவர்கள். நாட்டின் ஆண்கவது,ஐந்தாவது என எந்த தூணாக இருந்தாலும் அப்பவிமக்களையும் , நாட்டின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டுமே தவிர தங்கள் துறைக்கும் , மக்களுக்கும் துரோகம் செய்யவோ, கெட்டபெயரை தேடி தர நினைக்கவோ கூடாது. வாழ்க பத்திரிகை தர்மம் வளர்ந்திடட்டும் அதன் சேவைகள்.
0 பின்னூட்டம்:
Post a Comment