காவலுக்கு தேவை தன்னாட்சி கோவிலுக்கல்ல..

Monday, January 18, 2010

சமீபத்தில் நடுவணரசின் அமைச்சரவை கூட்டத்தில் தொல்லியல் துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு  தன்னாட்சி அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்.
          ஒரு துறை ஊழலில் சிக்கி தவிக்கும்போதும் , அதிகார துஷ்பிரயோகம் நடக்கும்போது ,அதன் முன்னேற்றம் கவலையளிக்கும் விதத்தில் இருந்தால் தன்னாட்சி வழங்குவது அவசியம் அப்படித்தான் தொல்லியல் துறையும் இருக்கிறது .  ஆலயங்களின் வருமானம் மட்டுமே அந்த துறைக்கு தேவைப்படும் அந்த ஆலையத்தின் செப்பனிடும் பணிகள் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் , பராமரிப்பு பணிகள் இவைகள் ஆலைய வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களின் கோரிக்கைகள் ,போராட்டங்கள் என எதற்கும் செவி சாய்க்கமாட்டர்கள்.  
           "கோவில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிட கூடாதென்று சொல்கிறேன் " என்ற பராசக்தி வசனத்தை கோவில் நிகழ்வுகள் அடிக்கடி நிஜப்படுத்திவிடுகின்றன. மத்திய அரசு தன்னாட்சி அதிகாரம் அளித்த பிறகாவது கோவில்களை பராமரிப்பது, குறிப்பிட்ட காலத்தில் திருவிழாக்கள் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் ,மற்றும் பாதுகாப்புடன் நடந்திட வழிவகை செய்திட வேண்டும் .
             மத்திய அரசு தொல்லிய துறை உள்ளிட்ட சில துறைகளை தன்னாட்சி அமைப்பாக மாற்றுவது வரவேற்க தக்கது , அதே நேரத்தில் 1977 இல் அமைத்ததை காவல் துறை ஆணையத்தின் அறிக்கை படி காவல் துறை காவலர்களின் பணி அமர்த்தம் , இடமாற்றம், பணி உயர்வு உள்ளிட்ட பணிகளில் அரசியல் குறுக்கீடுகள் உள்ளிட்டவை நாட்டு நலனுக்கு பொருத்தமில்லாத நிகழ்வுகளை களைய மத்திய அளவிலும், மாநில அளவிலும் ஆணையங்களை அமைத்து காவல் துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்ட பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த 22.09.2006 அன்று முக்கிய தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியதை இன்னும் நடைமுறைபடுத்த வில்லை , நாட்டில் நிகழும் கள்ளச்சாராய நிகழ்வுகள் , வன்முறைகள் , கற்பழிப்புகள், கூலிப்படைகளின் அட்டகாசம் , தீவிரவாதிகளுக்கு அரசியல்,முக்கிய பிரமுகர்களின் அஆதரவு,உதவி போன்ற விரும்பத்தகாத , நாட்டு நலனுக்கு பொருத்தமில்லாத நிகழ்வுகளை களைய காவல் துறையை தன்னாட்சி அமைப்பாக மாற்றாமல் அவசரமாக இந்த சில துறை தன்னாட்சி அவசியமட்ட்ற முடிவுகள் மத்திய அரசு நல்லமுடிவுகளை, துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் தயக்கம் கொள்வது வேதனை மட்டுமல்ல மக்கள் நலனுக்கு நல்லதல்ல.

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger