தாய்ப்பால் கொடுங்கள்

Tuesday, September 29, 2009



ஒவ்வோருஉயிரினமும் பிறக்கும்போது அதன் தாய் பாலை கொடுக்க வேண்டும் என்பதுதான் நியதி , உரிமையும் ஆகும்.இதை மனித இனம் மட்டுமே மீறுகிறது .  குழந்தை பிறந்த உடனே சீம்பால் எனப்படும் மஞ்சள் நிறப்பாலை கண்டிப்பாக தரவேண்டும். இதுதான் அந்த குழந்தையின் ஆரோகியத்தையும் ,நோய் எதிர்ப்புசக்தியையும் தருகிறது. நமது முன்னோர்கள் கிராமங்களில் நாங்கள் எல்லாம் அந்த காலத்தில எம்புள்ள நடக்கிற வரைக்கும் பால் கொடுப்போம். இப்ப இருக்கிற பெண்கள் புட்டில் கொடுக்குறாங்க கேட்டல் அழகு போய்டுது என்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால் அழகு கெடுவதில்லை எனழகுக்கு கரணம் என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துதான் என சமீபத்தில் மிஸ் சென்னை ஆக தேர்வான அழகி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. குழந்தையின் ஆரோக்கியம் கருதுபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் பசுவின் பால் கரைகிறவர்கள்  கையில் சிரங்கு இருந்தால் , பசுவின் மடியில் புன் இருந்தால் , கறக்கிற  பாத்திரம், பக்கெட்;செய்யப்படும;இடம் என பால் எங்கும் நஞ்சாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் தாய்ப்பால் மட்டுமே நூறு சதம் துய்மையான பாலாகும். காட்டில் புலி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் முதல் கடலில் உள்ள டால்பின், திமிங்கலம் உள்ளிட்ட மீன் வகைகள், வவ்வால் உள்ளிட்ட பிறவிகள் வரை அணைத்து உயிரினங்களும் தன் குட்டிகளுக்கு தன் பாளை மட்டுமே கொடுக்கிறது. மனித இனம் மட்டுமே தன் பாலை தராமல் பசும் பாலை தந்து பசுங்கன்றுக்கும் தீங்கு விளைவிக்கின்றனர்.

வெறி நாய்களை சுட்டு தள்ளுங்கள்

Monday, September 28, 2009


இன்று உலக வெறிநோய் தினம் விலங்குகள் மனிதர்களை கடிப்பதால் ஏற்படும் ஒரு கொடிய நோய் .  குறிப்பாக நாய் கடிப்பதால் இந்த நோய் தாக்குகிறது.  வெறி நோய் மனிதனின் மூளையும் , நரம்புமண்டலமும் தாக்கப்பட்டு கட்டாய மரணத்தை ஏற்படுத்திவிடுகிறது . உலகம் முழுவதும் ஆண்டுக்கு அறுபதாயிரம் பேர் வெறி நோயினால் சாகிறார்கள் .இதில் பாதிபேர் பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளாகவே உள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.   தற்பொழுது தமிழ்கத்திலும், புதுவையிலும் நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்து விடுவது நடைமுறைபடுதப்பட்டுள்ளது.குடும்பக்கட்டுப்பாடு செய்துவிடும் நாய்களை வெவ்வேறு எல்லைகளில் கொண்டுபோய்விடுவதால் புதிய நாய்களை ஏற்கனவே உள்ள நாய்கள் கடித்து குதரிவிடுகின்றன , இதனால் குடும்பக்கட்டுப்பாடு செய்த நாய்கள் வெறிபிடித்து மனிதர்களையும் ஆடுமாடுகளையும் கடிதுவிடுகின்றன. கிராமங்களிலும் நகரங்களிலும்  வெறிபிடித்து திரியும் நாய்களை பிடித்து வெறி நோய் தடுப்பு மருந்துகளை ஏற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மோசமான குணப்படுத்தமுடியாத நாய்கள்  அனைத்தையும் சுட்டு தள்ள வேண்டும்.  இதைதான் மகாத்மா அவர்கள் சுயநினைவின்றி துன்பப்படும் உயிர்களை கண்டு வேதனைபடுவதைவிட கொன்றுவிடுவதே மேல் என்று கூறியதை நினைவு கூறுகிறேன

மரனம் தரும் மருத்துவமனைகள்


மருத்துவமனைகள் என்றால் நோய் தீர்க்கும் கோயில் கள் அங்கு பணிபுரியும்  மருத்துவர்கள் நடமாடும் கடவுள்கள் என்பர்கள்.  மருத்துவமனைகளில் இறக்கும் நோயா  ளிகளில் பத்துசதவீதம் பேர் மருத்துவமனைகளில் உருவாகும் மருதுவக்கழிவுகளான ஒருமுறை பயன்படுத்தும் ஊசிகள் , கட்டு கட்டும் துணிகள் , பஞ்சு , அறுவைசிகிச்சைகளின்போதும் , பிரசவத்தின்போதும் உண்டாகும் திசுக்கழிவுகள் , இரத்தம் போன்றவற்றில் இருந்து வெளிவரும் நோய்கிருமிகளால் இறப்பதாக ஆய்வுகள்  கூறுகின்றன . அரசுமருதுவமனைகள் , தனியார் மருத்துவமனைகள் எங்கும்  இன்ஜினரடர் எனப்படும் மருதுவக்கழிவு மேலாண்மை திட்டம் செயல் படுத்தப்படவேண்டும் .

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Thursday, September 24, 2009


மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


விழுப்புரம் அருகே உள்ள கெடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை தாயகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 24-9-2009- இல்  நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு பசுமை தாயகம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.முருகதாஸ் தலைமை தாங்கினார். பசுமை தாயகத்தில் தலைவர் சௌமியா அன்புமணி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் கோ.தன்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் தலைமை ஆசிரியர்கள் பி.வடிவேலு, மார்க்ரெட், பசுமை தாயகத்தின் நிர்வாகிகள் சு.துரை, சி.சிவக்குமார், அரா.சசிகுமார், முருகன், சதாசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பசுமை தாயகம் - மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி -




 .விழுப்புரம் அருகே உள்ள மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை தாயகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 24-9-2009- இல்  நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு பசுமை தாயகம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.முருகதாஸ் தலைமை தாங்கினார். பசுமை தாயகத்தில் தலைவர் சௌமியா அன்புமணி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் கோ.தன்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் பசுமை தாயகத்தின் நிர்வாகிகள் சு.துரை, சி.சிவக்குமார், அரா.சசிகுமார், முருகன், சதாசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சுற்று சூழல்

Tuesday, September 22, 2009

சுற்று சூழல் தொடர்பான கட்டுரைகளை விரைவில் எங்கள் வலைப்பதிவில் எதிர்பாருங்கள்

பிரபாகரன்

Friday, September 18, 2009

பயத்தைவிடு இல்லையேல் லட்சியத்தைவிடு

சற்று பொறுத்திருங்கள்

எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சற்று நாள் பொறுத்திருங்கள்

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger