கியோட்டோ ,கோபன் ஹெகன் உடன்படிக்கைகள் உலகை காக்குமா?

Friday, December 18, 2009

          கடந்த ஏழாம் நாள் டென்மார்க் நாட்டின் கோபன் ஹெகன் நகரில் 192 நாடுகளைச்சேர்ந்த அமைச்சர்கள் , தொண்டு நிறுவனங்கள் , பல்கலைக் கழகங்கள் என பிரமாண்டமாக மட்டுமல்ல உலக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கிய இந்த மாநாடு 1997 இல்  கொண்டுவரப்பட்டு 2008-2012 என்ற கால வரையறைக்குள் உலக நாடுகள் தாங்கள் ஏற்கனேவே வெளியிட்டுவரும் கரியமில வாயுவை 5.2 சதம் தலைகீழாக குறைத்துக்கொள்ளவேண்டும் இதன் மூலம் உலக கரியமில வாயு வெளியேற்றத்தை பாதியாகக்குறைக்க முடியும் ; காற்று மண்டலத்தில் 280ppm  கரியமில வாயு தற்போது 389ppm என்ற  அளவில் இருப்பதால் புவியிலிருந்து 15 கி .மீ முதல் -45 கி.மீ. வரையிலான காற்றுமண்டலபகுதியிலுள்ள ஓசோன் படலம் , புதைவடிவ எரிபொருட்களான பெட்ரோல்,டீசல் , தார், நிலக்கரி  இவைகளின் அளவுக்கதிக ஒப்யன்பாட்டல் வெளியாகும் கரியமில வாயு, குளிர்சாதன பொருட்களிலிருந்து வெளிவரும் குளோரோபுளோரோ  கார்பன் வாயுக்கள், விவசாய நிலங்களில் தேக்கப்படும் அளவுக்கதிக நீரால் உற்பத்தியாகும் மீத்தேன் வாயுக்கள் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களால் அழிவுற்று காற்று மண்டலத்தில் மூன்று மூலக்கூறுகளை கொண்ட ஆக்சிஜன் (ஓசோன்) வாயுக்கள் குறைந்து , சூரியனில் இருந்து வெளிவரும் சக்திவைந்த புரவூதக்கதிர்கள் புவியை தாக்கி சூடடைய செய்து துருவப்பகுதியிலும், இமய மலையிலும் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து அழகிய தீவுகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் வெகு அருகில் உள்ளது.
                    2004 டிசம்பர் 13 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலை கிட்டத்தட்ட 1,50,000 பேரை சுமித்ரா தீவிலும் தமிழகத்திலும் பலிவாங்கியது, ஏராளமான பொருளாதார சீரழிவை உண்டாக்கியது சுற்று சூழல் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக ஆகிப்போனது . இது போல அமரிக்காவிலும் பல அரிக்கன் சூறாவளிகளின் சீற்றத்தால் சில மாகாணங்களே புரட்டிப்போடபட்டது மறக்கமுடியாது , இந்தியாவிலும் குஜராத் நிலநடுக்கம், புயல், ஒரிஸ்ஸா புயல் என புயல், ஆழிப்பேரலை என புரட்டிபோடுவ்வது ஒருபுறம் கடுமையான வறட்சி மறுபுறம் என உலகை பல விதங்களில் பொருளாதார ரீதியாகவும் , மனித வள ரீதியாகவும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தியது நாம் யாவரும் மறக்கமுடியாத சம்பவங்கள்.
                     நடைமுறையில் உள்ள கியோட்டோ உடன்படிக்கை கையோப்பமிட்ட்ட அமரிக்க உடனே வெளியேறியது , உலக நாடுகள் வெளியிடும் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் பாதியளவு கரியமில வாயு வெளியேற்றத்தை செய்து கால நிலை மாற்ற குற்றத்தை செய்து உலகநாடுகளின் பேராபத்திற்கு அடிப்படை காரணமாக விளங்கியது அமரிக்க .
                    தற்போது நிறைவடையவுள்ள மாநாடு பசுமை இல்ல வாயுக்களின் சதவீதத்தை   25 வரை  குறைக்கவேண்டும் , இதில் வாளர்ந்த நாடுகள் வளர்ச்சியடைந்து வரும்  நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர் , இதை இந்தியா, சீனா , தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்கின்றனர் .
                   இன்று அமெரிக்கா , இந்தியா,சீனா நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் பிரதமர்கள் , ஜனாதிபதிகள் கலந்து கொள்ள உள்ளனர் . இதில் நல்ல முடிவெடுக்க வேண்டும் என எதிர்பார்கின்றனர் ஆனால் வழக்கமான அரசியல் சண்டையை அங்கும் அரங்கேற்றியுள்ளனர் இது மனித குலத்திற்கு மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற எடுக்கும் முடிவு என்பதை உலக தலைவர்கள் நினைவில் கொள்ளவேண்டும் , தற்பொழுது கொண்டுவரவுள்ள கோபென்ஹெகன் உடன்படிக்கை பழைய கியோட்டோ உடன்படிக்கையின் அம்சத்தையும் தழுவி கால மாற்றத்திரும், எதிர்கால மாற்றங்கள் , மனித குளத்தின் பாதுகாப்பு , பொருளாதார சவால்களை உள்ளடக்கியதாக இருக்கும் விதத்தில் அமையவேண்டும் இதில் வளர்ந்த நாடுகள் முக்கியத்துவம் எடுத்து வளர்ந்துவரும் நாடுகளின் நலனையும், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தீவுகள் பாதுகாப்பையும் நிலைத்தவலர்ச்சி உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் , நமக்கு இருப்பது ஒரு பூமி , நாம் பூமியை காப்ப்போம் , பூமி நம்மை காக்கும்.

ஜெயராம் ரமேஷ் கோமாளித்தனம்:கோபென் ஹெகன் மாநாடு

Monday, December 14, 2009

         கடந்த ஏழாம் தேதி டென்மார்க் கோபன் ஹெகன் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு தொடங்கியது இந்த மாநாடு வரும் பதினெட்டாம் தேதி வாரை நடைபெறுவதாக உள்ளது.
         இந்த மாநாட்டில் 192 நாடுகளை சேர்ந்த பிரதமர்கள் , குடியரசுத்தலைவர்கள், சுற்றுச்சூழல் அமைச்சர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு உலகம் வெப்பமயமாதலால் கடுமையான சூறாவளி, பேய்மழை , கடுமையான வறட்சி, நிலநடுக்கம், கடல்மட்டம் உயர்வு, சுனாமி எனப்படும் ஆழிப்பேரலைகள் இவைகளின் தாக்கம் மென்மேலும் அதிகரித்துக்கொண்டு வருகின்றன .  கடந்த நூறாண்டுகளாக மனித குளம் உலகை தொழில் மயமாக்கியது , அளவுக்கதிகமான புதைவடிவ பொருட்களான பெட்ரோல்,டீசல்,நிலக்கரி,தார் பயன்பாட்டால் கரியமிலவாயு வெளிஎரியதான் விளைவாக ஓசோன் மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு சூரியனின் புறஊதாக் கதிர்கள் புவியை தாக்கி புவியை வெப்பமாக்கியதால் பருவநிலைகள் மாற்றம்,புவியிலுள்ள உயிர்கள் புதிய வகை நோய்களால் பாதிப்பு, இயற்கையின் பேரிடர்களால் மனிதகுலம் பேரழிவை  உயிர்கள் மூலமும், பொருளாதார மூலமும் சந்தித்தது மறக்கக்கூடியதல்ல அனைத்தும் சூழல் வரலாற்றில் மெயில் கற்களாக மாறிப்போனது.
              இயற்கை மனிதனுக்கு எதிராக மாறிப்போனதை தடுக்க மனிதனால் முடியாததுதான் ஆனால் நிலை மேல்மேலும் தீவிரம் அடையாமல் நிலைமையை ஓரளவுக்கு மனித சக்தியால் சமாளிக்க , நிவாரணம் தேட கூடிய நிலையிலேயே வைத்திருக்கவேண்டியது ஒலகின் மனித சமூகத்தின் கடமை .
கோபென் ஹெகன் மாநாடு:
              கடந்த முறை  நடைபெற்ற  பாலி மாநாட்டில் 192 நாடுகளின் ஒப்புதலோடு கொண்டுவரப்பட்ட கியோட்டோ ஒப்பந்தம் புவியின் வெப்பத்தை குறைக்க உலக நாடுகள் தாங்கள் வெளியிட்டுள்ள கரியமில வாயுவின் அளவை 5.2 ஆக தலைகீழாக குறைக்க வேண்டும் என கொண்டுவரப்பட்டது இதன் காலம்  2008-2012 இடையேயானது இதில் கையொப்பமிட்ட அமெரிக்கா உள்ளிட்ட சில வளர்ச்சியடைந்த நாடுகள் உடன்படிக்கையை மதிக்காமல் வெளியேறின எனவே இந்த ஒப்பந்தம் உயிர்பெற மிகுந்த சிரமம் ஆகிப்போனது.  ஒலக நாடுகள் வெளியிடும் மொத்த கரியமில வாயுவில் அமெரிக்காவின் கரியமில வாயு வெளியிடும் அளவு பாதியாகும் எனவே அமெரிக்கா வெளி ஏறியதும் உடன்படிக்கை கோமா நிலையை அடைந்தது .  2012 முடிவுறும் க்யோட்டோ உடன்படிக்கையை செயல்படுத்த அதற்கான நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்கவேண்டிய தருணம் இது .
           கடந்த காலங்களில் ஏற்பட்ட  சுனாமி , புயல், ஆழிப்பேரலை,வரட்சி, வெள்ளபெரழிவு , பேய் மழை இவை எல்லாமே இந்தியா போன்ற வளரும் நாடுகளை மட்டுமல்ல சிறிய , வல்லரசுகளையுமே சின்னபின்னம்மாக்கியது மறந்துவிடமுடியாது அதை நினைவில் வைத்து வளர்ந்த நாடுகள் முன்வரவேண்டும்.
              டென்மார்க் கோபன் ஹெகன் நகரில் நடிபெரும் மாநாட்டில் அனைத்து வளரசுகள்,வளர்ந்துவரும் நாடுகள் , தொண்டு நிறுவனங்கள் , பல்கலைகழகங்கள் புவிவெப்பமயமாதளுக்கு காரணங்கள், தீர்வுகள் , மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளுக்கான வரைவு கருத்துருக்களையும் , தாங்கள் நாட்டின் செயல்பாடுகள் குறித்து கொள்கை விளக்க அறிக்கைகளை தாக்கல் செய்யப்படவேண்டும். பல வளர்ந்துவரும் நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளை குற்றம் சாட்டி அவர்களை பொறுப்பேற்க செய்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வகை செய்யவேண்டும் என்றும் , வல்லரசுகள் வளர்ச்சியடையும் நாடுகள் தங்கள் அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என பல வரைவு அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியாவின் அமைச்சர் கோமாளித்தனம்:
           இந்தியா சுற்று சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்தியாவின் சார்பில் சென்ற அரசு பிரதிநிதி, பசுமை தாயக தொண்டு நிறுவனத்தின் சார்பில் முன்னாள் மத்திய  அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவியும் பசுமை தாயகத்தின் தலைவரும் திருமதி.சௌமியா உள்ளிட்ட நபர்கள் கலந்துகொண்டனர் .
            இந்தியா அரசின் சார்பாக பேசிய சுற்றுசூழல் அமைச்சர் யய்ரம் ரமேஷ் புவி வெப்பமயமாதலுக்கும் , இமயமலை உருகுதலுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்து உலக நாடுகள் எதிர்ப்பும், கோபமும் கொண்டுள்ளது இந்தியர்களுக்கு ஒரு அவமானகரமான செயல் பிறகு இந்தியா வின்ஜாநிகளின் மீது பழிபோட்டு தப்ப முயற்சி செய்திருக்கிறார் தான் ஒரு சுற்று சூழல் நிபுணர் அல்ல என சக வாங்கி அவமானப்பட்டுல்லார். துறையினுடைய அமைச்சருக்கு அழகா இது .
               உலகமே புவி வெப்பமயமாதலால் துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது என ஆராய்ச்சியும் , அது தொடர்பான வீடியோ காட்சிகளுமே உலகில் விவாத பொருளாகி நாள் தோறும் கட்டுரைகளாக, கருத்தரங்குகளாக வெளிவந்துகொண்டிருக்க வேற்றுகிரகத்திளிருந்து வந்ததுபோல நாள்தோறும் பாநிபாரைகள் வளருகிறது என்றும், அதுவாக கரைகிறது என்றும் கூறி அவமானப்பட்டு நிற்கிறார்.
             ஓசோன் படலம் (O3)  மூன்று ஆக்சிஜன் மூலக் கூறுகளை கொண்டது,இந்த படலம் தொழிற் சாலைகளால் , வாகனங்களால் வெளியேற்றும் கரியமிலவாயு, குளோரோ ப்ளோரோ கார்பன்,, குளோரின் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களால் சிதைந்து, புவியில் இருந்து உற்பத்தியாகிற  ஆசிஜன்  (இரண்டுமூலக் கூறுகளை கொண்டது  ) பசுமை இல்ல வாயுக்களால் அழிவுற்று இரண்டு மூலக்கொருகளை கொண்ட அக்சிஜன்
அணுக்கள் மீண்டும் மூன்று அணுக்களை கொண்ட ஓசோன் படலமாக மாறி
வருவது இயற்கையாக நடைபெறுவதுவழக்கம் தான் என்றாலும் நாம் அளவுக்கதிகமாக புதை வடிவ எரிபொருகளை பயன்படுத்தி
கரியமிலவாயுவையும், குளிர்சாதன பொருட்களை பயன்படுத்திகுளோரோ புளோரோ கார்பன்களை  ,மற்றும் பசுமை இல்லவயுக்களான மற்ற வாயுக்களையும்
வெளியிடுவத்டை குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் நோக்கம் ,அதை எப்படி செய்வது என அறிக்கை தாக்கல் செய்யும்போது வளர்ந்த நாடுகளின் பங்குபற்றியும் , வளர்ந்துவரும் நாடுகளின் பங்கு பற்றியும் பேசவேண்டுமே தவிர முன்னுக்கு பின் முரனாகபேசி அவமானபடவா நமது தேசசுற்று சூழல் அமைச்சர் சென்றார் வெட்ககேடு.
              இந்தியாவில் கேட்பாரற்ற தமிழன் பிரச்சினையில் கோணங்கித்தனமாக பேசி
முல்லைபெரியார் அணை விவகாரத்தில் கேரளாவிற்கு சாதகமாக நடவடிக்கை செய்ததுபோல செய்ய அந்த மாநாடு என்ன இந்தியா அனைத்துக்கட்சி கூட்டமா அல்லது அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டமா?
            தீவிரவாதம், பொருளாதாரம்,வேலைவாய்ப்பு, சுற்றுசூழல் என எந்த ஒரு துறைக்கும் உருப்படியான தேர்ந்த அமைச்சர் இல்லை என்பது இந்தியா அளவில் இருந்தரகசியம் உலகறிய ஒவ்வொரு வைப்பு ஏற்படுத்திகொள்கிறது அரசு மாற்றப்படவேண்டும் அமைச்சர்கள் திறமையின் அடிப்படையில் இல்லையேல் திறமை உள்ளவர்களுக்கு தரவேண்டும் ஆட்சியை.

நவீன தொழில் நுட்ப முறைகள் முறைப்படுத்தவேண்டும்

Friday, December 11, 2009

          மீபத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவல்துறை கஸ்டடியில் வைத்து விசாரிக்க மூன்று நாட்கள் நீதி மன்றம் அனுமதியளித்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் காஞ்சிபுரம் கோவில் ஒன்றின் அர்ச்சகராக பணிபுரிந்த தேவநாதன் காம லீலைகள் .  தேவநாதன் பணிபுரியும் கோவிலுக்கு வரும் பெண்களிடம் நைசாக பேசி அவர்களின் மனநிலை, கழ்டங்கள் , குறைகள் என ஆதரவாக பேசுவதுபோல் பேசி பல பெண்களை விழச்செய்து கருவறையில் உறவு வைத்துக்கொண்டால் புண்ணியம் என சொல்லி புனிதமான் கடவுளின் கருவறையில் பலபெண்களின் திருமணமான , திருமணமாகாத பெண்கள் என இவன் லீலைகளை அரங்கேற்றியுள்ளான்.  இந்த கருமத்தை தன செல் போனில் படம் எடுத்துவைத்து ரசித்திருக்கிறான் இன்று அதை உலகம் முழுவதிலும் செல்போனிலும் , இணையதளத்திலும் வளம் வரும் இந்த கருவறை கருமங்கள் .
  பெண்களை சீரழிக்கும் நிலைக்கு காரணம் என்ன :
                  பெண்கள் பெரும்பாலும் தங்களது அழகு, நேர்த்திக்காக்கப்பட நினைப்பது இயல்பு. ஆனால் அவர்களின் போக்கு நமது கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஏற்றவகையில் இல்லாமல் சமீபத்தில்  ஏற்பட்டு அவற்றுடன் பழக்க வழக்கங்கள், நடை,உடை,பாவனைகள், சிந்தனைகள் படித்தவர்கழ்மட்டுமல்லாது, பாமர மக்களிடமும் ஏற்பட்டுவிட்டது தொலைக்காட்சிகள், பேஷன் டி.வி., சினிமாக்கலாச்சாரங்கள், இணையதள நடவடிக்கைகளின் தொடர்பால் நமது கலாச்சாரம், பாரம்பரியம் சலித்துப்போன ஒரு குறிப்பிட்ட செக்டர் பெண்கள் இப்படிப்பட்ட கலாச்சார சீரழிவில் ஈடுபடுகின்றனர்.
               பெரும்பாலும் பெண்களின் எண்ணங்கள் தங்கள் குடும்ப சஊழல், வருமானம், பெற்றோர், கணவர்,பிள்ளைகள் நிலை, குடும்ப நிலை இவைகளை உணர்ந்து இருந்தால் இவர்களுக்கு நிச்சயம் இப்படி நடக்க மனம் வரத்து, நடுத்தர வர்க்கத்தில் உயர்ரக வாழ்க்கை வாழ , உயர்ரக குடும்பத்தில் உறவுகள் சரியில்லாத நிலை , குடும்பத்தில் உறவினர்களுடன் உரையாடாத நிலை இவற்றில் விரக்தி, போன்ற பல காரணங்களால் பெண்கள் நயவஞ்சகர்களின் இச்சைக்கு ஆளாகின்றனர் , இவர்களுக்கும் பொறுப்பு இருந்திருக்கவேண்டும் .  
பிரேமானந்த சாமியார் , டாக்டர் .பிரகாஷ் உள்ளிட்ட பல மோசடிபெர்வழிகளின் கதை தெரிந்திரிந்தும் , அதுவும் ஆலயம் புனிதம் , தெய்வீகம் அறியாது அவன் சொன்ன வார்த்தை பொய் என உயர் நிலை குடும்ப பெண்கள் கூட பகுத்தறிய முற்படாதாதது வெட்ககேடு .
                இப்படிப்பட்ட பெண்கள் இருக்கும் வரை ஆயிரம் பிரேமானதாக்கள் , பிரகாஷ், தேவனாதன்கள் வரத்தான் செய்வார்கள். இன்று இவன் செல்போனில் பதிவு செய்து வைத்து ஆசைக்காக பார்பதற்கு என்று சொல்லிஉள்ளான் , ஆனால் இவன் போன்ற ஆட்கள் இதை வர்த்தக ரீதியாக பணம் பண்ண துணியும் பேர்வழிகள் இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை அறியவேண்டும் .
 சைபர் க்ரைம் :
சைபர் க்ரைம் என்று ஒரு அமைப்பு உள்ளது அது தன கடமையை செய்யவேண்டும் , இன்று பதிவு செய்து அனுப்பும் முறை நாளை 3G  spectrom waves முறைகள் நடைமுறைக்கு வந்தால் நேரடியாக இணைய தளங்களுக்கு அனுப்பிவிடும் வசதிகள் என உள்ள எதிர்காலத்தை நினைத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு களைய உரிய சட்டங்களை இயற்றவேண்டும். 

விபத்துகள் தானியங்கி தகவல் :விழுப்புரம் மாணவர்கள் கண்டுபிடிப்பு

Wednesday, December 9, 2009

           இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 114 கொடிகளை தொட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் மக்கள்தொகைக்கு ஏற்ப மட்டுமல்ல இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்களின் வாங்கும் சக்தி கூடுதல் என்பதைவிட வாகன விற்பனை நிறுவனங்கள் பல்வேறு வட்டிவீதங்களை அறிமுகப்படுத்தி ஏராளமான நிதி உதவி நிறுவனங்களின் உதவியோடு இந்தியா சாலைகளை டாடா நிறுவனத்தின் ஒரு லட்ச றுபாயின் நானோ கார் முதல் இளசுகள் விரும்புவதும் , ஏற்படும் விபத்திற்கு கூடுதல் காரணமான சில இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏழு கோடி வாகனங்களினால் ஆண்டிற்கு 4.5 லட்சம் விபத்துக்கள் நடக்கின்றன.
           இந்த விபத்துக்கள் வாகனங்களை இயக்கும் முறையற்ற தன்மைகளான மிக வேகம், குடித்துவிட்டு வாகனம் ஒட்டுதல் , மோசமான சாலைகள் , வாகனம் ஓட்டும்போது செல் போனில் பேசிக்கொண்டே ஒட்டுதல் என வாகனத்தை இயக்கும்போது சாலை விதிகளை பின்பற்றாமல் ஒட்டுவதால் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் ஆண்டிற்கு 16 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இறப்பதாக தகவல்கள் கூறுகிறது.
             விபத்து நடப்பது மோசமான சாலைகளிலும் மட்டுமல்ல சர்வதேச தரம்வாய்ந்த தங்க நாற்கர சாலைகளிலும் பேருந்துகள், கார்கள் என விபத்துகள் எதிர்பாராத விபத்துக்கள் வாகனங்களின் பழமைவாய்ந்த தன்மை, முறையான பராமரிப்பின்மை , ஓய்வின்றி வாகனங்களை ஒட்டுதல் என ஏராளமான காரன்களை சொல்லலாம். விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கவும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் நெடுஞ்சாலை ரோந்து வாகனகளையும், நெடுஞ்சாலை அவசர சிகிச்சை மையங்களையும் அரசு அமைத்துள்ளது.  இதில் பல நேரங்களில் இவர்களால் நேரத்திற்கு வர முடிவதில்லை .  இப்படிப்பட்ட நேரங்களில் விபத்துக்குள்ளான வாகனங்களில் யாருக்கும் சுயநினைவு இன்றி போனாலோ , வெளியில் வர முடியோது போனாலோ நிலமை சிக்கல்.
             இப்படி பட்ட சிக்கலான விபத்து நேரங்களில் அருகில் உள்ள மருத்துவமனைக்கும் ,  உறவினர்களுக்கும் தகவல் தர ஒரு தகவல் சிஸ்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம் காமராசர் அரசு நகராட்சி மேல்நிலை பள்ளி , விழுப்புரத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பார்வைக்காக வைத்திருந்தனர், விழுப்புரம் புனித இருதைய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களான எஸ்.லூசோ,ஸ்ரீ.தேவி , பாக்கியலட்சுமி , ஆனந்த் உள்ளிட்டவர்கள்.
  Accident detector system:
               ரூ.10,௦௦௦ 000  செலவிலான தங்களது படிப்பை விளக்கும் மாணவர்கள்  இந்த சிஸ்டத்தை காரின் ஏதேனும் ஒரு இடத்தில் பொருத்திவிட்டு காரின் ஓரங்களில் சிக்னல் ஒயர் முனைகளை பொருத்திவிட்டால் விபத்து நடந்ததும் குறிப்பிட்ட இடைவெளிக்குள் நாம் பதிவு செய்து வைத்துள்ள  நமது உறவினர்கள் எண்ணிற்கும், அருகில் உள்ள மருத்துவமணி அவசர எண்ணிற்கும் தகவல்களை கொடுத்துக்கொண்டே இருக்கும் என்பது இதன் சிறப்பு.
             இதற்கு எங்களை பதிவு செய்வதற்கும், தகவல் தொடர்பான நிகழ்வுகளுக்கும் புரோகிராம் செய்ய வசதியாக 8052 என்ற மைக்ரோ பிராசசர்(8052 micro processor)  ஒன்றும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை நாம் பதிவு செய்துள்ள எண்ணிற்கு தகவல்களை அனுப்ப காலைடைவேளியை நிர்ணயிக்க ஓர் டைமர் ( timer ckt) பயன்படுத்தவேண்டும், தகவல்களை அனுப்புவதற்கு ஒரு மோடம் (modam),  timer circuit  உள்ளிட்ட பொருட்களை பொருத்தி இயங்கவைக்க ஒரு கிட்(kid) இவற்றையெல்லாம் ஒரு அமைப்பாக காரின் ஏதாவது ஒரு இடத்தில் பொருத்தி விபத்து நடந்தவுடன் வாகனங்களிலிருந்தும், விபத்துகளிளிருந்தும் உடனடியாக மீட்க இந்த சிஸ்டம் உதவும்.
              இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பை மென்பொருள் நிறுவனகள் தங்கள் நிறுவங்களில் பணிபுரியும் பெண்கள் பாலியல் உள்ளிட்ட தாக்குதல்களில் இருந்த காக்க , நிறுவனத்தின் மீட்புக்குழு நடவடிக்கை எடுக்க வசதியாக கண்டுபிடிக்கப்பட்டது , அதிலிருந்து விபத்திற்காக ஒரு வித்தியாச கண்டுபிடிப்பை மாணவர்கள் படைத்திருக்கிறார்கள் இந்த படைப்பை மோட்டார் தொழிற்சாலைகளில் அங்கீகரித்தால் இந்தியா சாலைகளில் மட்டுமல்ல உலக சாலைகளிலும் உயிரிழப்பை தடுக்க முடியும்.

தமிழனை கை விட்டது மத்திய அரசு . தமிழனுக்கு தேவை தன்னாட்சி ?

Friday, December 4, 2009

            1987 இல் செப்டம்பர் மாதம் மத்திய அரசால் செயல் படுத்தப்பட்ட தேசிய நீர் செயல் திட்டம் நீர் பற்றா குறைவானபகுதிக்கு ,  நீர் மிகுதியான  பகுதியிலிருந்து தேவையான நீரை கொண்டு செல்வதுதான் முக்கிய நோக்கம்.
            நதிகள் இணைப்பை இமாலய நதிகள் இணைப்பு , தீபகற்ப நதிகள்  இணைப்பு என இருவகைகளாக பிரித்து செயல்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமே .
            இதில் தீபகற்ப நதிகளான காவிரி , பாலாறு, மகாநதி,பெண்ணார் , வைகை, அச்சன்கோவில் , கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளை ஒன்றாக இணைத்து தேவையான இடங்களில் அணைகளை கட்டி நேரை தேக்கி விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தவும் , இதன்மூலம் தேவையான மின்சாரத்தை தயாரித்துக்கொள்ளவும் முடியும் , அதுபோல அதிக வெள்ளபெருக்கு உள்ள இடங்களில் உள்ள நீரை வறட்சி மிகுந்த இடங்களுக்கு கொண்டுசெல்வதன் மூலம் வறட்சியினால் ஏற்படும் உயிரிஷப்புகள், பொருளாதார பட்ற்றக்குரைகள் உள்ளிட்ட இதர பிரச்சனைகளை தீர்க்கவும், வெள்ளப்பெருக்கு உள்ள இடங்களில் ஏற்படும் வெல்ல பேரழிவை தடுக்கவும் , ஆகமொத்தம் பேரிடர்களை சமாளிக்கும் அல்லது வருமுன்காக்கும் ,  வளங்களை பாதுகாக்கவும் பெருக்கவும் போடப்பட்ட மிகப்பெரிய உன்னத திட்டம் இதுதான் இதனை தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கிதான் இருந்தார்கள் கடந்த இருபத்தியொரு ஆண்டுகளாக காக்கவைத்து ஏமாற்றிவிட்டது காங்கிரஸ் ,
          சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் பொது செயலாளர் ராகு (ல் காந்தி ) காலம்(இவர் அதிகாரமையமாக உள்ள காலம் தமிழகத்திற்கு) நதிகள் இணைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் , நீண்ட செலவினை ஏற்படுத்தும் என்று சொல்லி இன்று நீர்வளத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் திட்டவட்டமாக அரசின் கொள்கைப்படி இத்திட்டம் கைவிடப்படுகிறது என அறிவித்திருப்பது, நீண்ட நாள் எப்படி சொல்வது என்ற தயக்கத்தை  ராகுல், சூழல் துறை அமைச்சர் ரமேஷ் உள்ளிட்டவர்களால் முன்மொஷியப்பட்டு பின் சம்பந்தப்பட்ட அமைச்சரால் அதிகாரப்போர்வமாக வழிமொழியப்பட்டிருக்கிறது .
            தமிழகத்தை பலவேறு தருணங்களில் ஏமாற்றிய அரசு யாதொரு எதிர்ப்பும் இல்லாத நிலையில் இந்த துரோகமும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது , இதற்கு சப்பை கட்டு கட்டும் விதமாக தீபகற்ப நதிகள் இணைப்பு நடைமுறைப்படுத்தபடும் என சொல்லி இருப்பது விதையிலும் விந்தை. ஏனெனில் எதற்கெல்லாம் லட்சக்கணக்கான கோடி செலவிடும் அரசு ஒரு மானில் குடிநீர் , பாசன வசதியை சரிசெய்ய செலவிட தயங்குவதாகக் கூறி செலவை காரணம் காட்டி திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.
              இதை தான் பாட்டாளி மக்க கட்சி நிறுவனர் மறித்துவர் ச.ராமதாஸ் பலமுறை நதிகள் இணைப்பிற்கு முன் நதிகளை தேச உடைமை என்று அறிவிக்க சொல்லி போராடி வந்தார் அது கிடப்பில் போட்டு தமிழ் மக்களை வஞ்சித்தது கர்நாடகா , கேரளா, ஆந்திரா மட்டுமல் அவர்களின் சட்ட மீறலுக்கு துனிச்ச்லூட்டியது மத்திய அரசு தான் என தெள்ள தெளிவாகிவிட்டது .
              இனி நதிகள் இணைப்பு என்ற படம் முடிவுக்கு வந்ததால் முதல்வர் நதிநீர் ஆணையம் என்ற ஒன்றை அமைத்து வாக்கு வங்கியை பலப்படுத்திவர முயல்கிறார் ஏனெனில் ஆணையம் மட்டுமே மக்களை ஏமாற்றும் எளிய வழி என்பதனை தமிழக அரசும் உணர்ந்துள்ளது தமிழக மக்களுக்கு என்ன வழி ? தீர்வு என்ன ? போருத்திர்ப்போம் என்பதா? பொங்கி எழுவோம் என்பதா? ......என மில்லியன் டாலர் கேள்விகள் யாருக்கும் எழலாம் மொத்தத்தில் தமிழன் அனாதையகிவருவது வெளிச்சமாகிறது வெட்கக்கேடு

தமிழகத்தில் ஒரு போபால் கடலூர்? தேவை எச்சரிக்கை

Thursday, December 3, 2009


           மத்தியபிரதேசத்தின் தலைநகரான போபால் நகரில் உலகின் சுற்றுச்சூழல் பாதிப்பின் மிகப்பெரிய மைல்கல்லாக விளங்கியது கடந்த 1984 டிசம்பர் 3  நாள் நிகழ்ந்தஅமெரிக்க நாட்டின் யூனியன் கார்பைட் நிறுவனத்தின்  மிகப்பெரிய கோரவிபத்தின் மூலம் சம்பவ நிகழ்வான விழவாயு கழிந்ததால் சுமார் 20000  பேர் அந்த நேரத்திலேயே இறந்துபோனார்கள் இந்து லட்சத்திற்குமேலானவர்கள் தங்களது கண்,கை,கால்களை இழந்து ஊனமானார்கள்.
         இந்த நிகழ்வில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பத்திற்கும் , ஊனமான குடும்பத்திற்கும் இது வரை யூனியன் கார்பைட் நிறுவனம் எந்த விதமான நிவாரணமும் முறைப்படி வழங்கவில்லை என்பதுதான் வேதனை .  இந்த விழவாயு கசிவால் அந்த பகுதி உயிர்ச்சூழல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது , இன்றும் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஊனமாகவே பிறக்கிறதாக கூறப்படுகிறது. நமது மத்திய அரசு அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரநதையோ , மருத்துவ சிகிச்சையோ முழுவதும் வழங்காமல் அவர்களை மனதாலும் , உடலாலும் ஊனமாகவும் பிறக்கவும் வாழவும் வைத்திருக்கிறது என்பது தேசிய அளவில் அல்ல சர்வதேச அளவிலான அவமானம்.
           அமரிக்காவில் ஒருநிறுவனம் தொடங்க முறையான அனுமதி மட்டும் வாங்கிவிட்டால் பொது இழப்புகளை , பாதிப்புகளை காரணம் காட்டி நிறுவனத்தின்மீது  நடவடிக்கை எடுக்க , இழுத்துமூட கம்பனிகள் சட்டம் இல்லை என்று சொல்வது  கேட்கக்கூடியதாக இருக்கலாம் , ஆனால் இந்தியாவில் ஒருநிறுவனம் தொடங்க  அதன் சாதகம், பாதகம் காரணங்களை ஆய்ந்து அனுமதி தருவது வழக்கம் . மேலும் தொடங்கிவிட்ட பிறகு அது பொதுமக்களின் நலனுக்கு  பாதிப்பு என்று புகார் தெரிவித்தாலோ , பாதிப்புகள் ஏற்பட்டாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் , அந்த நிறுவனத்தை மூடவும் சட்டங்கள் இருக்கும்போது இதுவரை அந்த நிறுவன நிர்வாகி வாரன்ஆண்டர்சன் இதுவரை சி.பி.ஐ. அதிகாரியால் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறாரே தவிர இருபத்தைந்து ஆண்டுகளாக ஆகியும் இதுவரை அவரை கைதுசெயதபாடும் இல்லை அந்த பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நிவாரணம் கொடுத்தபாடும் இல்லை , ஒரு சர்வதேச கோர சம்பவத்திற்கே அரசு இப்படி மெத்தனம் காட்டினால் எப்படி ?  அமெரிக்காவின் கைக்கூலியாக மாறிவிட்டதா அமரிக்காவின் எந்த செயலுக்கும் இந்தியா மறுக்காமலும் , சீனா , பாகிஸ்தான் போன்ற வரம்பு மீறலுக்கும் கோபப்படாமல் இருக்கும் தேசம் தனது மக்களின் உணர்வுகளையோ , உயிரையோ, உடமைகலையோ ஒருபொருட்டாகவே மதிக்காமல் மெத்தனமாக இருப்பது வெட்கக்கேடான செயல் , பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், இனி பிறக்கும் குழந்தைகள் ஊனமின்றி பிறக்க சூழல் சாதகமாக நிலவ மருத்துவ , இயற்கை சூழல்களில் அக்கறை காட்ட முடிந்தாலே தவிர மற்றபடி மத்திய மாநில அரசுகள் வேடிக்கைப்பார்ப்பது முடிவுக்கு வரவேண்டும் என்பதே நமது விருப்பம்.
            இதுபோல் தமிழகத்தில் ஒரு போபாலாக கடலூர் இப்பவோ, அப்பவோ என நிலை உள்ளது , கிட்டத்தட்ட இருபதிற்கு மேற்பட்ட (ரெட் லேபல் குத்தப்பட்ட) நச்சு தன்மை உடைய அபாயகரமான நிறுவனங்கள் எனதேரிந்திருந்தும் அனுமதி கொடுக்கப்பட்டு அதனுடைய காலம் முடிவுட்ட்ற சில நிறுவனங்கள் இன்றும் செயல் பட்டுகொண்டிருப்பது பயத்திற்குல்லானதுதான் , இது என்றாவது ஒருநாள் இந்த நிறுவனங்கள் தனது சுய ரூபத்தை காட்டும் அதற்குள் சம்பந்தப்பட்ட அரசுகள் துயர சம்பவங்கள் நிகழும் முன்னமே தடுக்கவேண்டிய செயலில் இறங்க வேண்டிய தருணம் இதுதான் தவறினால் தமிழகத்தில் ஒரு போபால் இன்னொரு டிசம்பர் 3 சம்பவம் தாங்க முடியாது , உஷார் மாநில மத்திய அரசுகள்.

மனித வளம் காக்க மன்னச்சநல்லூர் மாணவிகள்அசத்தல் கண்டுபிடிப்பு

Wednesday, December 2, 2009

           பெண்கள் என்றாலே மென்மையானவர்கள் அவர்கள் தங்கள் அழகிலும், ஆரோக்கியத்திலும் மிகுந்த கவலைப்படுபவர்கள் , அதற்காக எவ்வளவு நேரமானாலும்  எவ்வளவு முக்கிய நிகழ்வானாலும் கவலைப்படமாட்டார்கள் , அப்படித்தான் திருச்சி மாவட்டம்  மன்னச்சநல்லூர் அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த டி.டி.கே.லட்ச சந்தியா, பாக்கிய லட்சுமி என்ற இருபெண்கள் விழுப்புரம் காமராசர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அறிவியல் கண்காட்சியில் அறிவியலால் ஏற்பட்டுள்ள சூழல் கேடுகளை நிவர்த்தி செய்து அழகையும் , ஆரோக்கியத்தையும் காக்க ஒரு திட்டத்தை செயல் முறையில் விளக்கினார்கள் , இது அவர்கள் அழகை பாதுக்காக்க அல்ல உலகில் நாளும் அதிகரித்துவரும் கொசுத்தல்லையால் அன்றாடம் வீடுகள் தோறும் தரமட்ட்ற, நச்சுத் தன்மைவாய்ந்த கொசுவத்தி சுருள்களை கொளுத்தி குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகள் , அழகு கோளாறுகளை பற்றி கவலை பட்டிருக்கிறார்கள் .  வயதானவர்களுக்கும் சுவாசக் கோளாறு உள்ளிட்டட உயிர்கொல்லி நோயல்களிளிருந்து விடுபட குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்க மூலிகை கொசுவத்தியினை தயாரித்து மனித வளத்தை அழிவிலிருந்து காத்திட நகர ,பெருநகர , கிராம தாய்மார்கள் , குழந்தைகளுக்கு தாயன்புடன் ஆரோக்கிய பாதுகாப்பளித்திருக்கிரார்கள் இவர்கள்.
மூலிகை கொசுவத்தி பற்றி:
              தேவையான மூலிகைகள் :
வெப்ப இலைகள், நொச்சி இலைகள் , புதினா இல்லை, துளசி இல்லை,, வேப்பங்கொட்டை,ஆமானுக்கு விதை,ஆடாதோடை பௌடர் , கண்டங்கத்திரி பௌடர் , செவ்வரளிபட்டை போடி, மரத்தூள் , கரித்தூள் 
செய்யும் முறை :
   இந்த மூலிகைகளை அரைத்து பௌடராக வைத்துக்கொள்ளவேண்டும் , இவற்றை கொசுவத்திபோன்ற அச்சில் இட்டு எடுத்துக்கொள்ளவேண்டும் , அல்லது முருக்கு குழைக்குள் இட்டு கொசுவர்த்தி போன்று பிழிந்துகொள்ளவேண்டும், அல்லது கோன் வடிவத்தில் அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம் என அந்த மாணவிகள் கூறுகின்றனர், மேலும் அவற்றின் சிறப்புகள் பற்றி கூறும்போது ...
மூலிகை கொசுவர்த்தியின் சிறப்புகள் :
          இயற்கை
          மலிவுவிலை
         சுவாசக்கோளாறு இல்லை , குழந்தைகளுக்கு பாதிப்பு இல்லை, மாசு இல்லை 
இந்த மூலிகைகள் எல்லா கிராமங்கள் , நகரங்களிலும் கிடைக்கும் 
ஆண்களோடு போட்டி போட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏராளமான பெண்கள் செய்தாலும் மனித வள பாதுகாப்பு பற்றி கவலை பட்ட சகோதரிகள் படைப்புகள் புகழ்பெறவேண்டும் மேலும் அவர்களை அவர்களுக்கு பிடித்த இயற்கை பாதுகாப்பு வழியிலேயே சாதிக்க சம்பந்த பட்ட பெற்றோர்கள், மற்றும் கல்விநிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது விருப்பமும் . வாழ்த்துக்கள். 





கழிவு நீரை சுத்திகரித்து தூய்மை படுத்தும் முறை:புதிய கண்டுபிடிப்பு

          விழுப்புரம் காமராசர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் தங்களது படைப்புகளை (கண்டுபிடிப்புகளை)பார்வைக்காக வைத்திருந்தனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் உலகம் எதிர்நோக்கியுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான கண்டுபிடிப்பகளையே செய்திருந்தினர் .
         இதில் கம்பெனிகள் , வீடுகளில் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்கும் முறை நாட்டில் பேரும் சவாலாக உள்ளது , இதற்காக சாயப்பட்டறைகளை மூடுவதற்கு நீதிமன்றங்களே உத்தரவிடும் அளவிற்கு நிலைமை மோசம், உதாரணமாக ஒரத்தநாடு அணையில் கழிவுநீரை கலக்கவிடுவதால் சமீபத்தில் பெய்த மழையில் வந்த நீரை தேக்ககூடாது என அணையில் உள்ள நீரை திறந்து விட்டது வேதனை.  இது போல கழிவு நீரை சுத்திகரிக்க நிறுவனங்கள் அதிக பணம் செலவாவதை  காரணம் காட்டிகழிவுநீராக ஆறுகளில் , ஏரிகளில் கலப்பதை தவிர்க்க  குறைந்த செலவில் கழிவு நீரை சுத்திகரித்து நிறுவனங்களில் வளர்க்கப்படும் மரம், செடிகளுக்கு , அல்லது நிறுவனங்களின் மறுசுழற்சி பயன்பாட்டிற்காக இந்த கண்டுபிடிப்பை DRBCC மேல்நிலைப்பள்ளி சென்னை சேர்ந்த மாணவர்கள் ஹரிஷ்குமார்.எஸ்., மனிஷ் சுஜிர்த்த.வி., பாலு.வி. ஒரு அறிய கண்டுபிடிப்பை பார்வைக்கு செயல் முறையில் விளக்கினர்.
கழிவுநீரை சுத்திகரிக்கும் முறை:
           சுண்ணாம்பு,கரி,மணல் கலந்த கொள்கலனில் கழிவுநீரை செலுத்தினால் அதில் உள்ள ஹெவி மெட்டல்ஸ் ஐ சுண்ணாம்பு,கரி,மணல் ஈர்த்துக்கொண்டு அதில் தங்கவைத்துவிடுகிறது , அடுத்து இரண்டாவது நிலையில் சுழலும் மின்மொடோர் மூலம் துர்நாற்றங்களை அகற்றுகின்றனர் ,மொன்றாவது முறையில் இம்ப்ரரைஸ்  மெட்டல்ஸ் (zing,copper,iron,gold,dust) பிரித்தெடுக்கப்படுகிறது இதனை மீண்டும் மறுசுழற்சி செய்து பிறகு நான்கவதாக சோலார் ஹீட்டர் மூலம் தீமை செய்யும் பாக்டீரியாக்களை எரித்து அடுத்ததாக குளுகோஸ் , லைம் ஸ்டோன் உடன் சேர்த்து சவ்வூடு பரவல் முறையில் தூய நீரை தருகிறார்கள் இம்மாணவர்கள் .  இந்த முறை குறைந்த செலவில் கழிவுணீரை அருகில் உள்ள ஆறுகள், குளங்கள் , ஏரிகள், கடலில் கலந்து மனித குலத்தையும், நீர்வாழ் உயிரினங்களையும் அழிக்கும் முறைக்கு விடுதலை தரும் என்றே நம்புவோம் .  இந்த மாணவர்களின் படைப்புகளை நடைமுறைப்படுத்த சம்பந்த பட்ட கல்விநிறுவனம் உரிய நடவடிக்கையை எடுக்க அந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் நடவடிக்கையடுத்து அவர்களை உலகறிய செய்யவேண்டும். வாழ்த்துக்கள்.

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger