தமிழகத்தில் ஒரு போபால் கடலூர்? தேவை எச்சரிக்கை

Thursday, December 3, 2009


           மத்தியபிரதேசத்தின் தலைநகரான போபால் நகரில் உலகின் சுற்றுச்சூழல் பாதிப்பின் மிகப்பெரிய மைல்கல்லாக விளங்கியது கடந்த 1984 டிசம்பர் 3  நாள் நிகழ்ந்தஅமெரிக்க நாட்டின் யூனியன் கார்பைட் நிறுவனத்தின்  மிகப்பெரிய கோரவிபத்தின் மூலம் சம்பவ நிகழ்வான விழவாயு கழிந்ததால் சுமார் 20000  பேர் அந்த நேரத்திலேயே இறந்துபோனார்கள் இந்து லட்சத்திற்குமேலானவர்கள் தங்களது கண்,கை,கால்களை இழந்து ஊனமானார்கள்.
         இந்த நிகழ்வில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பத்திற்கும் , ஊனமான குடும்பத்திற்கும் இது வரை யூனியன் கார்பைட் நிறுவனம் எந்த விதமான நிவாரணமும் முறைப்படி வழங்கவில்லை என்பதுதான் வேதனை .  இந்த விழவாயு கசிவால் அந்த பகுதி உயிர்ச்சூழல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது , இன்றும் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஊனமாகவே பிறக்கிறதாக கூறப்படுகிறது. நமது மத்திய அரசு அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரநதையோ , மருத்துவ சிகிச்சையோ முழுவதும் வழங்காமல் அவர்களை மனதாலும் , உடலாலும் ஊனமாகவும் பிறக்கவும் வாழவும் வைத்திருக்கிறது என்பது தேசிய அளவில் அல்ல சர்வதேச அளவிலான அவமானம்.
           அமரிக்காவில் ஒருநிறுவனம் தொடங்க முறையான அனுமதி மட்டும் வாங்கிவிட்டால் பொது இழப்புகளை , பாதிப்புகளை காரணம் காட்டி நிறுவனத்தின்மீது  நடவடிக்கை எடுக்க , இழுத்துமூட கம்பனிகள் சட்டம் இல்லை என்று சொல்வது  கேட்கக்கூடியதாக இருக்கலாம் , ஆனால் இந்தியாவில் ஒருநிறுவனம் தொடங்க  அதன் சாதகம், பாதகம் காரணங்களை ஆய்ந்து அனுமதி தருவது வழக்கம் . மேலும் தொடங்கிவிட்ட பிறகு அது பொதுமக்களின் நலனுக்கு  பாதிப்பு என்று புகார் தெரிவித்தாலோ , பாதிப்புகள் ஏற்பட்டாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் , அந்த நிறுவனத்தை மூடவும் சட்டங்கள் இருக்கும்போது இதுவரை அந்த நிறுவன நிர்வாகி வாரன்ஆண்டர்சன் இதுவரை சி.பி.ஐ. அதிகாரியால் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறாரே தவிர இருபத்தைந்து ஆண்டுகளாக ஆகியும் இதுவரை அவரை கைதுசெயதபாடும் இல்லை அந்த பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நிவாரணம் கொடுத்தபாடும் இல்லை , ஒரு சர்வதேச கோர சம்பவத்திற்கே அரசு இப்படி மெத்தனம் காட்டினால் எப்படி ?  அமெரிக்காவின் கைக்கூலியாக மாறிவிட்டதா அமரிக்காவின் எந்த செயலுக்கும் இந்தியா மறுக்காமலும் , சீனா , பாகிஸ்தான் போன்ற வரம்பு மீறலுக்கும் கோபப்படாமல் இருக்கும் தேசம் தனது மக்களின் உணர்வுகளையோ , உயிரையோ, உடமைகலையோ ஒருபொருட்டாகவே மதிக்காமல் மெத்தனமாக இருப்பது வெட்கக்கேடான செயல் , பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், இனி பிறக்கும் குழந்தைகள் ஊனமின்றி பிறக்க சூழல் சாதகமாக நிலவ மருத்துவ , இயற்கை சூழல்களில் அக்கறை காட்ட முடிந்தாலே தவிர மற்றபடி மத்திய மாநில அரசுகள் வேடிக்கைப்பார்ப்பது முடிவுக்கு வரவேண்டும் என்பதே நமது விருப்பம்.
            இதுபோல் தமிழகத்தில் ஒரு போபாலாக கடலூர் இப்பவோ, அப்பவோ என நிலை உள்ளது , கிட்டத்தட்ட இருபதிற்கு மேற்பட்ட (ரெட் லேபல் குத்தப்பட்ட) நச்சு தன்மை உடைய அபாயகரமான நிறுவனங்கள் எனதேரிந்திருந்தும் அனுமதி கொடுக்கப்பட்டு அதனுடைய காலம் முடிவுட்ட்ற சில நிறுவனங்கள் இன்றும் செயல் பட்டுகொண்டிருப்பது பயத்திற்குல்லானதுதான் , இது என்றாவது ஒருநாள் இந்த நிறுவனங்கள் தனது சுய ரூபத்தை காட்டும் அதற்குள் சம்பந்தப்பட்ட அரசுகள் துயர சம்பவங்கள் நிகழும் முன்னமே தடுக்கவேண்டிய செயலில் இறங்க வேண்டிய தருணம் இதுதான் தவறினால் தமிழகத்தில் ஒரு போபால் இன்னொரு டிசம்பர் 3 சம்பவம் தாங்க முடியாது , உஷார் மாநில மத்திய அரசுகள்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger