நீர்நிலைகளை காக்க ஆற்றில் மனுபோடும் போராட்டம்

Wednesday, February 2, 2011

                  இந்தியாவில் சிந்து,கங்கை ,பிரம்மபுத்திரா,காவேரி,பாலாறு,யமுனை,கோதாவரி,நர்மதா,தபதி,பெண்ணையாறு,கிருஷ்ணைள்ளிட்ட 14 பெரிய நதிகளும்,50 சிரியநதிகளும்,ஏராளமான சிற்றோடைகளும் உள்ளன .  இந்தியாவில் கிடைக்கின்ற நன்னீரில் 50 சதம் இந்த ஆறுகளின் மூலம் மட்டுமே சுழற்சியை நிகழ்த்துகிறது. இந்த நன்னீர் தான் மக்களின் குடிநீரையும் , விவசாயத்திற்கும்,கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களின் உயிர்வாழ்விற்கு ஆதாரமாகிறது.  நமது கலாச்சாரம் ,வழிபாட்டுமுறைகள் நதியில் குளித்தல்,துணிதுவைத்தல் போன்ற அவசிய தேவைகளுக்கு   தேவைப்படும் நன்னீர் இங்கிருந்தே பயன்படுத்துதல், கலாச்சார விழாக்களை இங்குதான் நடுத்துவது மரபு.  ஆக உயிர் காக்கும் நீரை பருகவும் , உணவுபொருட்களை உற்பத்திசெய்ய தேவையான நீரை நதிகளின் மூலமே பெறுகிறோம். சிறுவர்கள்முதல்,பெரியவர்கள் வரை தண்ணீர்வரத்து இல்லாத  காலங்களில் மணலில் விளையாடுதல் என நதிகள் புவியில் முளைவிடும் புள்,பூண்டு முதல் ஆடு,மாடு,புலி,சிங்கம் என உயிர்கள் பிறப்பு,வாழ்வு,சாவு என உயிர்களோடு இரண்டற கலந்து இயங்கசெய்வது தாயாக,தந்தையாக,கடவுளாக, ஆய்வுக்கான கல்விக்கடலாக விளங்கிவந்தது.
                செஞ்சி பேரூராட்சி திடக்கழிவுகளை தரம்பிரிக்காமல் சங்கராபரணி ஆற்றில் கொட்டி எரித்து காற்றையும் ,நீரையும்  , மண்ணையும் விஷமாக்கிவருகின்றனர் . 
  இது தொடர்பாக வட்டாட்சியர் , மாவட்டாட்சியர் ,மாசுகட்டுப்பாட்டுவாரிய பொறியாளர்,தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு மனுகொடுத்து இதுவரை நடவடிக்கை இல்லாததால் செஞ்சி பகுதி நீர்நிலைகள் , நிலத்தடிநீர் விஷமாகி உள்ளது.  எனவே சட்ட ரீதியாக எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்காதபோது , நதிகளையும்,ஏரிகளையும், நிலத்தடிநீர்ரையும் எங்களால் பாதுகாக்க முடியவில்லை எனவே உன்னை நீயே பாதுகாத்துக்கொள் என சங்கராபரணி நதியை பாதுகாக்க சங்கராபரணி நதியிடமே மனு கொடுக்க முடிவுசெய்து இன்று காலை பசுமைத்தாயக தொண்டர்கள் செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு செஞ்சி  சங்கராபரணி மேம்பாலத்தில் ஒரு அஞ்சல் பெட்டிவைத்து போட்டு அரசின் அலட்சியத்தை உணர்த்தினர்.  இதுகுறித்து நதியின்,ஏரிகளின்,நிலத்தடிநீரின் மாசுபாட்டை பொறுத்துக்கொள்ளாத பொதுமக்கள் சுமார் அரை மணிநேரம் செஞ்சி -திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் வட்டாட்சியர்,காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரிலும்,பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் பேரிலும் மறியல் கைவிடப்பட்டது. பேச்சு வார்த்தையில் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதில்லை எனவும் திடக்கழிவுகளை தரம்பிரித்து உரம்தயாரிக்கவும் சம்மதித்து பேரூராட்சி செயல் அலுவலர் , வட்டாட்சியர் முன்னிலையில் உறுதியளித்தார் .

             

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger