பசுமைத்தாயகம் சார்பில் இலவச சுகாதார முகாம் :விழுப்புரம்

Friday, October 29, 2010

பசுமைத்தாயகம் -புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நோய்தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்துறையும் இணைந்து செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 14-10-2010 வியாழக்கிழமை காலை பத்துமணி முதல் மாலை 3.30 மணிவரை இலவச மருத்துவமுகாமை நடத்தின. இந நிகழ்ச்சிக்கு புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் இருதயநோய் பிரிவு துறை தலைவர் மருத்துவர் பாலச்சந்தர் தலைமைதாங்கினார் .  முன்னதாக அனைவரையும் வரவேற்றார் பசுமைத்தாயகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.முருகதாஸ் வரவேற்றார்.சமூகமருத்துவத்துரையின் பேராசிரியர்கள் மருத்துவர் கெளதம் ராய் , மருத்துவர் ஜெயலஷ்மி , செஞ்சி பேரூராட்சி தலைவர் கே,எஸ்.மஸ்தான் , செஞ்சி உதவிதொடக்ககல்வி அலுவலர் ஏ . கோவர்த்தனன்,கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கோ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மேல்மலையனூர் சட்டப்பேரவையின் உறுப்பினர் பா.செந்தமிழ்செல்வன் முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். முகாமில் பொதுமருத்துவம் ,கண்மருத்துவம்,எலும்பு நோய் மருத்துவம் , மனநல மருத்துவம்,பிசியோதெரபி மருத்துவம்,இருதயநோய் மருத்துவம்,மாதர்நோய் மற்றும் குடும்ப நலமருத்துவம்,காத்து,மூக்கு,தொண்டைநோய் மருத்துவம்  உள்ளிட்ட மருத்துவதுரைகலைஎர்ந்த துறை தலைவார்கள், மருத்துவ வல்லுனர்கள்,மருத்துவ அலுவலர்கள் இரத்த அழுத்தம்,ரத்தசர்க்கரை அளவு , இருதய சுருல்படம்,இருதய ஸ்கேன் உள்ளிட்ட பரிசொதனைகளைசெய்து மருந்துமாத்திரைகளை இலவசமாக வழங்கி சிகிச்சை அளித்தனர்.  முகாமில் 1100 பேர் கலந்துகொண்டுசிகிச்சைபெற்றனர் இதில் 659 மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இம்முகாமின் சிறப்பு பெண்கள்தொடர்பான நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் பெண்மருத்துவர்களை மட்டுமே கொண்டு சிகிச்சை அளித்தனர் .  இம்முகாமில் மூன்றாம் பருவ மருத்துவ மாணவர்கள் பொதுசுகாதாரம்,குடும்ப நலம்,மருத்துவமனைகளிழ்மட்டுமே பிரசவம் உள்ளிட்ட விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினார் .  முகாமில் மருத்துவர் பாலச்சந்தர் தலைமையில் 44 மருத்துவ வல்லுனர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்.  முகாமில் பேசிய மருத்துவர் பாலச்சந்தர் இந்த முகாம் வெறும் பரிசோதனை முகாம் அல்ல பரிசொதனைகளைதொடர்ந்து சிகிச்சை அளிக்கத்தக்க 1500 பேர் பயன்பெறும் வகையில் விலைஉயர்ந்த மாத்திரைகள் அளித்தும் அதிகதொந்தரவு உள்ளவர்களை புதுவை ஜிப்மரில் அழைத்துவந்து தொடர் சிகிச்சை அளித்துகுனப்படுத்தும் ஒரு சிறப்பு முகாம்,  இதற்கு ஏற்பாடுசெய்த பசுமைத்தாயகம் நிறுவனத்திற்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துகொள்கிறோம்   என்றார் .  முகாமின் நிறைவு நேரத்தில் பள்ளி மானவமானவிகளுக்கு கைகழுவுதல் உள்ளிட்ட பொதுசுகாதார செயல்களை விளக்கி பயிற்சி அளித்தனர். முடிவில் தலைமை ஆசிரியர் நன்றிகூறினார் .  .

இராஜாதேசிங் நினைவிடம் இன்றி: நினைவு நாள் அஞ்சலி

Monday, October 4, 2010

           கடந்தஞாயிறு அன்று செஞ்சி கோட்டையை ஆண்ட அரசன் ராஜாதேசிங்  அவர்களுக்கு நினைவிடத்தில் அந்த உரத்சியின் தலைவர் கே.எஸ்.மஸ்தான்,வட்டாட்சியர் உள்ளிட்ட பிரமுகர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

       செஞ்சிகொட்டை விழுப்புரம் மாவட்டத்தின் சின்னம் மிகப்பெரிய சுற்றுலாத்தளம் இதன் நிலை மிகவும் மோசமாக  உள்ளது எனநினைத்தால் இந்த கோட்டைக்கு ராஜாவாக இருந்து இந்த பகுதியை பரிபாலனம் செய்த ராஜ இறந்த இடத்தில் நினைவிடம் ஒன்றுகட்டவும் , இந்த கோட்டை சுற்றுலாவாசிகளுக்கு மகிழ்வைதரவும் ,பொழுதுபோக்கவும்  இங்குள்ள கோலத்தில் படகு சவாரி விடவும், ரோப்கார் வசதியை  ஏறபடுத்தவும் மேல்மலையனூர் சட்டமன்ற உறுப்பினர் பா.செந்தமிழ்செல்வன்  நான்காண்டுகளாக சட்டமன்றத்தில் கோரிக்கைவிடுத்தும், மாவட்டநிர்வாகத்திடம் கோரியும் வருகிறார் பலன் இல்லை , தமிழை காக்க, பழமைகளைகாக்க,புராதான சின்னங்களைக் காக்க நடவடிக்கை எடுத்துவரும் மத்திய மாநில அரசுகள் செஞ்சியை சீர்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு பொதுமக்களும் பகிரங்கமாக போராடவேண்டும்.
இராஜாதேசிங் நினைவிடம் இன்றி: நினைவு நாள் அஞ்சலி

India to have autonomous green police soon: Minister

Monday, September 27, 2010

Friday, June 05, 2009 8:04:11 PM by IANS ( Leave a comment )
Pratibha Patil New Delhi, June 5 (IANS) India will soon have an autonomous Environment Protection Authority (EPA) that will ensure industries comply with all the green laws of the country, Minister of State for Environment and Forests Jairam Ramesh said here Friday, as his ministry had “no way to ensure strict compliance”.
“Not enough is being done to monitor environmental compliance,” Ramesh said at the eighth corporate awards ceremony of The Energy and Resources Institute (TERI).
In a hard-hitting message to the Indian industry, the new minister said: “There has been an impression that the Ministry of Environment and Forests (MoE&F) has been delaying industrial clearances. Let me disabuse corporate India - we’re only implementing the laws of the land.
“Of course, they must be implemented in as transparent a manner as possible and we should see to it that it does not lead to delays, but I seriously contest the charge that we’re holding up progress. On the other hand, I think not enough is being done to monitor environmental compliance.
“Some have called EIA (environmental impact assessment, a mandatory requirement) anti-industry. I think it is anti-environment. We’re not fulfilling our environmental objectives.”
Ramesh said his ministry really had “no way to ensure strict compliance” with green laws, so the proposed EPA would do it “in a manner that is transparent and time-bound”.
The minister said he would go to parliament with the necessary legislation “within two months”, warning India Inc that “the time for a free ride is over” and the country would have a “fully empowered authority”.
Ramesh pointed out that the EPA in the US had a staff of 18,000 and an annual budget of $7 billion, whereas India’s Central Pollution Control Board had a staff of 150 and an annual budget of Rs.400 million.
“We’re going to get our EPA that is professionally staffed and fully funded. It’s going to be a professional, transparent, science-based regulatory system.
“This is my primary task and I have started on it already,” Ramesh said, adding that once the EPA was set up, his ministry would move to what it should be doing, making policy.
President Pratibha Patil, who gave away the awards at the function, called upon the industry to help clean India’s rivers and to focus on green research and development.
Welcoming everybody at the ceremony, TERI Director General Rajendra K. Pachauri said: “Each year, as we celebrate World Environment Day, things around us get worse.”
He warned that the “human footprint had crossed the earth’s carrying capacity in the early 1980s” and said “the time has now come for us to reverse and resuscitate the ecosystems.”
Pachauri said “merely to measure increase in GDP” was not the right way to measure growth, quoting Mahatma Gandhi to add: “Speed is irrelevant if you are going in the wrong direction.”
President Pratibha Patil gave the TERI corporate awards for environmental excellence to NHPC, Indian Farmers Fertilisers Cooperative, Orchid Chemicals and Pharmaceuticals, Aban Power and Ayurveda.
The awards for business response to HIV/AIDS went to Pepsico India and Tata Power.
GMR Infrastructure, Vikram Cement and Aditya Birla Group and Tata Refractories won the awards for corporate social responsibility.


More at : India to have autonomous green police soon: Minister http://www.thaindian.com/newsportal/business/india-to-have-autonomous-green-police-soon-minister_100201372.html#ixzz10jDwr7Hi
 
 

Wednesday, September 8, 2010

          தமிழகத்தில் பிரதான தொழில் விவசாயம் மூன்றுபோகமும் நெல்விளையும் மாடுகட்டிபோரடித்தால் மாளாது யானைகட்டி போரடிக்கும் உலகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை தரணியை கொண்டதில் பெருமைகொண்டதமிழ்நாடு.  உலக மனிதகுலத்திற்கு உணவுபடைக்கும் தஞ்சை தரணி சோழர்கால ஆட்சியின்போதே சோறும் நீரும் விற்பனைக்கு அல்ல என தண்ணீர் பந்தல் அமைத்து வழி நெடுங்கிலும் சோறும் நீரும் வழங்கிவந்தனர் இது தற்போது ஏட்டு தகவல் ஆகிப்போனது.  உலகம் எழுபத்தியொரு சதம் நீரை கொண்டிருந்தாலும் 2.7% நன்னீரை மட்டுமே கொண்டுள்ளது இது ஆறுகள் குளங்கள்  ,ஏரிகள் நிலத்தடி நீர்மட்ட்டம் என 1.7% மட்டுமே உள்ளது மீதம் ஒரு சதம் திண்ம நிலையில்  பனிபாறைகளாக  உள்ளது.97.3% நீர் உப்பு நீராக கடலில் உள்ளது.
           தமிழர்கள் தங்கள் உழைப்பு நேரம்போக மீதிநேரத்தை பக்திபரவசத்திலும், நாடகங்களிலும் பொழுதை கழித்து மகிழ்வுற்றனர். இந்த நாடங்கங்கள் தங்கள் முன்னோர்கள் வீரம், தியாகம்,இலக்கியவரலாறு,ராமாயணம்,மகாபாரதம் உள்ளிட்ட நீதியை ஒழுக்கத்தை வலியுறுத்தும் கதைக்கலங்களைகொண்டதாக இருந்துவந்துள்ளது.   தங்கள் கொண்டாடும் திருவிழாக்களான பொங்கல் , விஜயதசமி,விநாயகர் சதுர்த்தி ,தீபாவளி போன்றவை கழிவுகளற்ற , மாசற்ற முறையில் புத்தாடைகளுடன் , இனிப்புகள்,தேங்காய் பழங்கள் கொண்ட வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் உற்சாக இயற்கை நட்போடு இருந்தது.
              நவ நாகரிகம் வளர்ந்து விட்டதன் விளைவு பிரம்மாண்ட சிலைகள் வழிபாடு ,ஒழி,சூழல் மாசுபாடு ,நச்சு ரசாயனங்களை நீரில் கரைப்பதால் நீர் மாசுபாடு போன்றவைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
               விநாயகர் சதுர்த்தி என்பது இந்தியாமுழுவதும் அனைத்து மக்களாலும் இன மொழிவேற்றுமையற்ற விழா டெல்லி,மும்பை , கல்கத்தா,புதுவை ,சென்னை உள்ளிட்ட நகரங்களிலி பிரபலமாக நடத்துவது வழக்கம். மற்றபகுதிகளில் களிமண்ணால் ஆனா சிலைகளை வழிபாட்டு நீரில் கரைப்பது வழக்கம்.  அது நாளடைவில் கிராமங்களிலும் பிரம்மாண்டங்கள் பரவ அனைத்து இடங்களிலும் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் நச்சு ரசசாயன சிலைகள் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
             இதனால் நீர்மாசடைந்து கடல் வாழ் உயிரினங்கள் அழிவதன்மூலம் 75% கடல் உணவை நம்பிவாழும் மனித குளம் புதியியவகை நோய்களுக்கும், பேரிடர்களுக்கும் ஆளாகவேண்டியநிலை ஏற்படுகிறது. சொற்ப நன்னெறுள்ள புவியில் ஆறுகளில் , குளம்,ஏறி,நிலத்தடிநீரும் பாதிக்கப்பட்டுவிடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதால் நிலம் மாசடைவதால் உணவு உற்பத்தியும் , குடிநீரும் வீழ்ச்சியடைகிறது இதனால் மனித இனமும்,  கால்நடைகளும் பாதிப்படைகிறது.  வணிகநோக்கோடு இல்லாமல் இயற்கை நண்பனாக வணிகர்களும், பொதுமக்களும் பொறுப்போடு இயற்கை முறையில் வழ்கிபட்டாலே அறனும் நலன்பயக்கும்,வாரத்திற்கும் வாய்ப்பு.

சமூகநீதியின் தந்தை ராமதாஸ்.

Monday, August 16, 2010






சமூகத்தில் ஏற்றதாழ்வுகள் இல்லாமல் அனைவருக்கும்
சமவாய்ப்பு சம அந்தஸ்த்து  கிடைக்கவேண்டும்,
மூடபழக்கவழக்கங்கள்
அறவே ஒழிக்கப்படவேண்டும் என அயராது பாடுபட்டவர்
 ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற ஈரோட்டுபெரியார்.  பெண்ணடிமைத்தனம்,மூடபழக்கவழக்கங்கள் போன்ற புரையோடிப்போன சமூக அவலங்களுக்கு
சிகிச்சையளித்து வெற்றியும் கண்டார்.  சமூக நீதி
குறித்த சமவாய்ப்பு, சம அந்தஸ்த்து பிற்பட்ட,மிகபிற்பட்ட மக்களுக்கு கிடைக்காததால்
அவரின் சமூக நீதி கனவு கனவாகவேபோனது.  அதனை நிறைவேற்றவேண்டிய பொறுப்பில் அவருடைய தம்பிமார்களான பேரறிஞர் அண்ணா,
நெடுஞ்செழியன் , கருணாநிதி போன்றவர்கள்
அதுகுறித்த முயற்ச்சியில் ஈடுபடவே இல்லை
 என்பதுதான் பெரியாருடைய
ஆத்மாவிற்கேவருத்தமானதாகும்.  
              உண்மையான கனவும், இலட்சியமும்
என்றாவது ஒருநாள்
 நிச்சையம் வெற்றிபெறும் என்பதுபோல பெரியாரின்
கனவுகள் 1980 வன்னியர் சங்கத்தை நிறுவிய திண்டிவனம் அருகே உள்ள கீழ்சிவிரி கிராமத்தில் குற்றப்பரம்பரை
என்று இருந்த வன்னியர் சமூகத்தில்  பிறந்த ச.ராமதாஸ்  என்ற மருத்துவர்.  தன் சமூகத்தின் அவலநிலைகளை கண்டு வேதனை
 அடைந்து சமூக மக்களை ஒன்றுதிரட்டி இட ஒதுக்கீடு கெட்டு போராடதொடங்கினார், அரசின் மேத்தனபோக்கினால் 17.9.1987-23.9.1987  ஒருவாரம்
 தமிழகம் இயக்கமில்லா நிலைக்கு    போராட்டம்
தீவிரமடைந்துபோனாலும்
 அரசின் அடக்குமுறைக்கு வன்னியர் சங்கத்தின் போராளிகள் முன்னறிவிப்பில்லாத
துப்பாக்கி சூட்டில் 21 உயிர்களை பலிகொடுத்த
 மருத்துவர் விடாது அரசை நெருக்கடிகொடுக்க
 முதல்வராக இருந்த மு.கருணாநிதி (தற்பொழுதும்)
தன்சமூகத்தினையும் ,  வன்னியர் சமூகத்தினையும்
சேர்த்து 108 சாதிகளுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு
வழங்கினார்.
              1989 இல்  பா.ம.க. என்ற அரசியல் கட்சியை பொதுசெயலாளர் ஆதிதிராவிடர்,தலைவர்
வன்னியர்,பொருளாளர் இஸ்லாமியர்,என சமநிலை
 அந்தஸ்தில் இயக்கத்தை தொடங்கினார் மருத்துவர்.  மக்களின் பிரச்சினைகள்,தேவைகள் எனதேரிந்துகொண்ட
 மருத்துவர் ராமதாஸ் அவைகளை தீர்க்க தினம் தினம்
போராடி அரசின் கவனத்திற்கு கொண்டுபோனார் அதில்
வெற்றியும் கண்டார். எந்தொரு அரசியல் கட்சியும் ஆளும் கட்சியாக இருக்கும்போது மட்டுமே
 மக்களுக்கு நல்லது செய்யமுடியும் என கருதும்போது எதிர்கட்சியாக இருக்கும்போதும் மக்களுக்காக போராடவேண்டியது ஜனநாயகத்தில் ஆரோக்கியம் என போராடுகிறார்.
               108  சமூகங்களை இணைத்து கொடுத்த ஒதுக்கீடு மிகப்பெரும்பான்மையான சமூகத்திற்கு கல்வி,வேலைவாய்ப்பில் தன்னிறைவடைவது முடியவில்லை எனவே தனி இடஒதுக்கீடு வேண்டுமென கோரினார்.  முன்னதாக இந்தியாவில் மத்தியஅரசின் கல்வி, வேலைவாய்ப்பு பெற பிறபிற்பட்ட சமூக மக்களுக்கு
  27 இடஒதுக்கீடு பெற இந்தியாவின் சாமூக அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு சென்ற பொது வன்னியர்களைபோல இந்தியாவில் பெரும்பான்மை சமூகங்கள் முறையான இடஒதுக்கீட்டில் அந்தந்த மாநிலத்தில் கல்வி,வேலைவாய்ப்பில் தன்னிறைவடைந்து பொருளாதார மேம்பாடடையும்போது இங்குமட்டும் ஏன் இப்படி ஏன் வேதனைப்பட்டார்.  அதற்கு ஒரே வழி இந்தியாவில் நடிபரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தி சமூக மக்களின் எண்ணிக்கைக்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்கலாம் என போராடினார் இதற்காக இந்தாண்டுமுதல் நடைபெறும் கணக்கெடுப்பில் சாதிவாரியாக கணக்கெடுக்க பிரனாப்முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழுவினரின் கடிதத்திற்கு அரசியல் கட்சியினரின் ஆதரவினால் இந்தியாவில் சாதிவாரியான கணக்கெடுப்பு என்பது நம்பிக்கை அளிக்கிறது பிற்பட்ட மிகப்பிற்பட்ட மக்களுக்கு. 
            இப்படி சமூக நீதிக்காக மிகப்பெரிய அளவில் இந்தியாவில் போராடிய அறிவியல் ரீதியாகவும்,மனிதாபிமானரீதியாகவும் ஆய்வுசெய்து வென்று வருகின்ற மருத்துவர் தந்தைபெரியாரின் கனவுகளை உயிரூட்டிவருவதன் மூலம் பெரியாரின் ஆத்மாவிற்கு சாந்திதந்திருக்கிறார்.  சாமூகநிதியை புதுமையானவிதத்தில் ஆய்வுசெய்து அரசு ஏற்கும் விதத்தில் அறவழியில் போராடி வென்றதன்மூலம் இவர் சமூகநீதியின் தந்தை என அழைப்பது  மிகப்போருத்தமே.

திசைதிருப்பும் காங்கிரஸ்.

Monday, August 9, 2010

     நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய தீர்மானங்களான வறுமை ஒழிப்பு ,ஊழல் ஒழிப்பு , புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட பல நல்ல பல திட்டங்களுடன் வெளிப்படையான நிர்வாகம் ,தகவல் அறியும் சட்டம் என நல்லாட்சி தருவதற்கான தோரணையுடன் தொடங்கியது.  இதில் சுகாதார அமைச்சர் மருத்துவரின் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் மூலம் நூறு சதம் மருத்துவமனைகளில் பிரசவம் , தாய் சேய் நலன் என தொடங்கி பதினான்கு மாநிலங்களில் அவசரவூர்த்தி மருத்துவர் , செவிளியர்களுடன் விபத்து நடந்த இடத்திலிருந்தே 108  தொலைபேசியில் அழைத்தால் பத்து நிமிடத்தில் விரைந்து  வந்து நிகழ்விடத்திளிருந்து நோயாளியை மீட்டு சிகிச்சையை தொடங்கி அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு  கொண்டுசேர்த்து நிலைய மருத்துவரிடம் ஒப்பம்பெற்று திரும்புவது , மருத்துவம் படித்து இறுதியாக ஓராண்டு கிராமத்தில் பணிபுரிய வேண்டும் என தான் பதவியேற்ற நாளில் உறுதியேற்ற தைபோன்று முதல் குடிமகன் பெரும் சுகாதார வசதியை சாதாரண சலவைதொழிலாளியும்,கூளிக்காரவிவசாயியும் பெரும் வண்ணம் கிராமப்புற சுகாதார நிலையங்களை சிறிய மருத்துவமனைகளைபோன்று நவீன வசதிகொண்ட நிலையங்களாகவும் வட்டாரத்திற்கு ஒரு 30  படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளை உருவாக்கினார். இதில் அரசியல் காழ்புனர்ச்சிகளால் மருத்துவமாணவர்கள் தூண்டப்பட்டு போராட்டத்தை நடத்தி ஓராண்டுகால  கிராமப்புற வேலை கனவாகப்போனதேதவிர துணை சுகாதார செவிலியர்கள், பிரசவிக்கும் தாய்மார்கள் சிரமமின்றி குளிக்க ஷவர்வசதிகள் , நோயாளிகள் அமர இருக்கைகள் என பிடல் காஸ்ட்ரோ வின் க்யுபா போன்று குறுகிய காலத்தில் 24 மணிநேர பிரசவவிடுதிகளாக கிராம சுகாதார நிலையங்கள் மாறிவிட்டது மட்டுமே ஒருசாதனை. 
              புகையிலை ஒழிப்பு , எய்ட்ஸ் ,போலியோ ஒழிப்பு போன்ற சுகாதார இயக்கம் மட்டுமே தவிர வேறொன்றும் சொல்லவதற்கில்லை. 
              அடுத்து வந்த முறையில் திறமைவைந்த நபர்கள் யாருமே இல்லாததால் ஊழல்,தீவிரவாதம், விலைவாசி உயர்வு  என நாட்டின் பிரச்சினைகள் நாளுக்க் நாள் பெருகிக்கொண்டே போகிறதே தவிர இதை தீர்க்க அரசு எந்திரம் செயலற்றுபோய்விட்டது.
               மும்ம்பை,ஆந்திரா,குஜராத் போன்ற பல மாநிலங்களில்  குண்டுவெடிப்பு , உள்நாட்டு கலவரங்கள் , நக்சல்கள்,மொவோயிஸ்ட் என ஊழல்கள்,வேலையின்மை, அடிப்படைவசதிகள் இன்மை என மக்களே போராடுகின்ற நிலை இதில் பாதுகப்புபடைகளை கொண்டு ஒடுக்க பாதுகப்புபடைவீரர்கள் கொலை என தீராத தலைவலியில் சிக்கிக்கொண்ட அரசு  பிரச்சினையை திசை திருப்ப பா.ஜ.க. வின் கர்நாடக உள்துறை அமைச்சர் ரோடியோருவன் கொலைவழக்கில் தொடர்புடையவர் என சி.பி.ஐ . விசாரணைக்கு உத்தரவிட  தலைமையின் உத்தரவிற்கு கட்டுப்பட்ட அமித்ஷா பதவியை துறந்து தான் கரைபட்டவன் அல்ல என சட்டரீதியில் நிருபிக்க முடிவெடுத்துள்ளார்.  உள்துறை அமைச்சர் மீது காட்டும் அவசரத்தை பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டு பல ஆண்டுகளாக ஆகியும் தண்டனை நிறைவேற்றாமல் ஒட்டு எலும்பு பொறுக்க பாராளுமன்ற தாக்குதல் நிகழ்வில் பாதுகாப்பு படைஅதிகாரிகள் செய்த உயிர்த்தியாகம் அவமானத்திற்குள்ளாக,கேளிக்கூத்தாகியுள்ளது.  மன்னிக்குமா அவர்கள் ஆவி தாளியிழந்த இந்திய அதிகாரிகளின் சாபம் சோனியாவின் குடும்பத்தை வேரறுக்குமா? காலம் பதில் சொல்லும் .  தியாகங்கள் தோற்பதில்லை .  அப்சல் குறு தூக்கா? சோனியாவின் தமிழ்விரோத செயலுக்கு திதியா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

காற்றில் பறக்கும் தடை சட்டம்

Monday, April 5, 2010

            இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி முக்கியமானது.உள்ல்கட்டமைப்புகளான சாலை,போக்குவரத்து ,குடிநீர் உள்ளிட்ட சிலவசதிகளை சிறப்பாக செய்துவருகிறது.புதுவை  சுற்றுலாபயணிகளை கவர்ந்திழுக்க அழகுபடுத்துவதும்,அடிப்படைவசதிகளை செய்துதருவதில் புதுவை அரசு முக்கியத்துவம் தருகிறது. புதுவை பிரதேசத்தின் அழகு மேம்பாட்டிற்கு மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு தடையாக இருப்பது அன்றாடம் உற்பத்தியாகும் நூற்றுக்கணக்கான மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கலந்த குப்பைகள்தான்.  தினம் தினம் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் குவிந்துவிடுவதால் இடப்பற்றாக்குறையை போக்க நகராட்சி ஊழியர்கள் தீ வைத்து எரித்துவிடுகின்றனர் இதனால் கரியமிலவாயுவும் , டை ஆக்சினும் வெளியாகி பொதுமக்களுக்கு உயிர்கொல்லி நோய்களை உண்டாக்கியும்  , சுற்றுசூழலையும் பாதித்துவிடுகிறது. இதனால் சுற்றுசூழல் ஆர்வலர்கள் , பசுமைத்தாயகம் உள்ளிட்ட அமைப்புகள் முதல்வருக்கு  ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும்(எறியும்) பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி வந்தனர்.  கடந்த ஜூலை மாதம் முதல் புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் புதுவையில் பிளாஸ்டிக் வைத்திருப்பதும் விற்பனைசெய்வதும்,பயன்படுத்துவதும் தடைசெய்யப்படுவதாக சொன்னார் இதை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்,விற்பனையாளர்கள் பேரணி நடத்தி கோரிக்கைவிடுத்தனர். இதனால் சிலமாதங்கள் தள்ளி வைத்தனர். மீண்டும் நடைமுறைப்படுத்தினர்  (GO.MS.NO.9/2009,ENVIT DT.4.6.2009 / )(1986/5 central Act 29 of 1986) .   கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் நமச்சிவாயம் 49  கோடி ரூபாய் செலவீட்டில் திடக்கழிவுமேலான்மை திட்டத்தை நடைமுறைப்படுத்தி உரம் தயாரிக்கப்படும் என அறிவித்தார் , ஆனால் புதுவையில் இன்னும் தூக்கிஎரியும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடந்துகொண்டும் , குப்பைகளை எரிப்பது நடந்துகொண்டும் உள்ளது.சட்டத்தை அமல் படுத்த அரசு என்ன செய்யபோகிறது என பொதுமக்களும் ,சூழல் ஆர்வலர்களும் எதிர்பார்கின்றனர்.  புதுவையில் புகையிலை சட்டம் ,பிளாஸ்டிக் தடைச்சட்டம் பல்வேறு சட்டங்கள் போன்று காற்றில் பறக்கிறது கவனிப்பது எப்போது?

போலிகளை ஒழிக்க வெட்கப்படும் தமிழக அரசு

Saturday, March 27, 2010

          சமீபத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை போலி மற்றும் காலாவதியான மருந்துகளை பதுக்கிவைத்து விற்பனைசெய்துவந்த அங்கிகரிக்கப்பட்ட மருந்துமொத்த விற்பனை ஏஜென்சி கையும் களவுமாக மாட்டி இருப்பதுதான்.   தமிழகத்தில் மருத்துவத்துறையில் போலியான மருத்துவ்வர்கள்,போலிமருந்துகள்,காலாவதியான மருந்துகள் விற்பனை குறித்து நீண்டநாட்களாக சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பதும்,போலிமருத்துவர்களை மீதான நடவடிக்கைகோரி கடலூர் மாவட்ட மருத்துவர்கள் போராட்டமே நடத்தி முடித்தார்கள் இதற்காக அரசு செவிசாக்கவில்லை என்பது வேதனைதான்.
கொடுங்கையூர் காலாவதியான மற்றும் போலியான மருந்துகள் பதுக்கி விற்ற மொத்த மருந்து விற்பனை நிறுவனத்தின் செயல் வெளிஉலகத்திற்கு தெரிய வந்ததும் இந்த கொலை பாதக செயலில் இருக்கும் பிற நிறுவனங்கள் உஷாராக அரசின் தீவிர நடவடிக்கையை கண்டதும் காலாவதி மற்றும் போலி மருந்துகளை குப்பைமேட்டிலும் , ரோட்டின் ஓரத்திலும் கொட்டிவிட்டு செல்வதை அன்றாட செய்தி ஊடகங்கள் வழியாக காணமுடிகிறது. நகராட்சி குப்பையுடன் கொட்டி எரிப்பதுவும் சில இடங்களில் நடக்கிறது.
மருத்துவக்கழிவுகள் அழிக்கும் முறைகள்:
        காலாவதியான மருந்துகளை அழிக்கவும் போலிகளை ஒழிக்கவும் உலக சுகாதார நிறுவனம் மருத்துவ துறைக்கு அறிவுரைகள், விதிகள் வகுத்து வைத்துள்ளது பணத்திற்காக ஆசைப்பட்ட  ஓநாய்கள் தரமில்லாத மருந்துகளை வாங்க மருத்துவகல்லுரிகளுக்கும் , மருந்துகடைகளுக்கும் சிபாரிசு செய்து மக்களை பலி ஆக்க தங்களது அறிவை ஆக்கபூர்வமற்ற முறையில் செலுத்துகின்றனர். மருந்து விற்பனையாளர்கள் மட்டுமல்ல சிபாரிசு செய்யும் அதிகாரிகள் , மருத்துவ அலுவலர்கள் நிச்சையம் கண்கானிக்கப்படவேண்டியவர்கள்.  சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் இறப்பவர்கள் தரப்பில் மருத்துவர்கள் மீது தொடரப்படும் வழக்குகளால் அவர்கள் துணிந்து அறுவை சிகிச்சை செய்யமுடியாது என கூறியுள்ளது.  ஒரு சில சமயங்களில் மட்டுமே அவ்வாறு நிகழ்கிறது .   போலிகளாலும் தொழில் தெரியாமலும் ,  சரியான மருந்துகள் இல்லாமல், உரிய கவனம் இல்லாமல் நிகழும் உயிரிழப்புகளுக்கு நிச்சையம் தண்டனைகள் வழங்கமுன்வந்தாலே குற்றங்கள் குறைந்து மருத்துவத்துறையில் மனம் கமழும் உயிர்களும் வாழ முடியும்.
காலாவதியான மருந்துகளும் போலி மருந்துகளும் :  
          உணவும், மருந்துகளும் உயிர்காக்கும் உன்னத வேலையை செய்கிறது காலாவதியான  மருந்துகளும்,உணவுபொருட்களும் விஷமாகி  உயிர்பறிக்கும் வேலையை செய்கிறது.   காலாவதியான மருந்துகளினால் குழந்தைகள்,முதியோர்கள் ,பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் உயிரிழக்கியற கோரமான நிலை ஏற்படுகிறது. மருத்துவமனையில் உற்பத்தியாகும் திசுக்கழிவுகள்,மருந்துகழிவுகள் இவற்றை முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்காவிடில்  இன்பெகசியன் நோயால் இறந்துபோவார்கள். உலகில் பத்து சதம் பேர் மருத்துவக்கழிவுகளால் இறக்கின்றனர்.  இதேபோல் போலி மற்றும் காலாவதி மருந்துகளால் எத்தனை உயிர்கள் துடிதுடித்து இறக்க இந்த கயவர்கள் பல கோடிகளுக்கு ஏராளமான குழந்தைகள், முதியவர்கள் என கத்தி இன்றி ரத்தமின்றி தமிழகத்தினை கொலைக்களமாக்கியுள்ளனர்.சத்தமின்றி இப்படி ஒரு உயிர்கொல்லி புற்றுநோயிருக்க காரணமான அரசு அதிகாரிகள்,இந்த திட்டத்திற்கு  துணைபோன அத்தனைபேரையும் கண்டிப்பாக தூக்கில் போடவேண்டும் ஏனெனில் இவர்கள் கணக்கில்லாத கொலைகளை செய்துள்ளனர். தண்டனைகள் கடுமையாகாத பட்ச்சத்தில் இப்படிப்பட்ட கொலைபாதக செயல்கள் நிறுத்த முடியாது.  தமிழக முதல்வர் கருணாநிதி மருந்து இல்லாமலோ, மருத்துவர் இல்லாமலோ ஒரு உயிர் போனால் அதற்காக வெட்கப்படுவேன் என்று கூறியுள்ளார்.  போலிமருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளாலும், போலி மருத்துவர்களாலும் ஏற்படுகிற உயிரிழப்புகளுக்கு அவமானப்படுவார ?  நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் என்ற திருவள்ளுவரின் வாக்கின்படி தமிழகத்தில் நோய்க்கு ஏற்ற மருந்து எது என கணிக்க தெரியாத மருத்துவர்களும் , உயிர்பறிக்கும் போலி,காலாவதியான மருந்துகளுமே தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறது. இந்த வெட்கக்கேட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு அறுவை சிகிச்சை செய்து குனப்படுத்தவேண்டியது தமிழக அரசின் கடமை . சட்டம் தன் கடமையை செய்யுமா?

அதிசய மரம்

Saturday, March 13, 2010


       இப்புவியிலுள்ள மரங்களில் அதிசிய மரம் என அழைக்க தகுதியுடைய மரம் பனை. ஆம் இதன் மரத்தின் தண்டு முதல் பனை ஓலை, மட்டை,கிழங்கு , நுங்கு,நார் என யாதன் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒருவகையில் பயன் தருகின்றது.
         இதன் சிறப்பம்சம் தீராத வறட்சி காலங்களில் கூட காய்ந்துவிடாமல் வளரும் தன்மைகொண்டது .  அதேசமயம் பனையால் நாடார் என்ற சமூகம் இன்று வாழ்ந்துவருவதற்கும் , பொருளாதார நிலையில் முன்னேற்றத்திற்கும் பேருதவியாக இருந்துவந்தது , இருக்கின்றது.  இந்த புவியில் கடுமையான வறட்சியால் சுற்றுசூழல் சமநிலைக்கு யாதன் பங்கும் முக்கியமானது.
     இப்படி கள் என்ற பானம் தயாரிப்பதிலிருந்து , வெள்ளம் தயாரிப்பது, நுங்கு, கிழங்கு என உணவுப்பொருளாகவும், கட்டுமானத்திற்கு தேவையான மரம், நார், அழகு மற்றும்  குழந்தைகள் விளையாட்டு பொருளாகவும் , படுத்துறங்கும் பாய் முடையவும் பயன்படுகிறது. இப்படிப்பட்ட அதிசயத்தக்க மரம் அதிசய மரம்தானே?

அரங்கேறும் பணநாயகம் குழப்பத்தில் மக்கள்

           தமிழகத்தில் உள்ள தருமபுரிமாவட்டத்தில் பென்னாகரம் தொகுதியின் இடைத்தேர்தல் வரும் இருபத்திஏழாம் தேதி நடைபெற உள்ளது.  இங்கு தி.மு.க., ஆ.தி.மு.க., பா.ம.க. தே.மு.தி.க.வேட்பாளர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனுக்கள் ஏற்கப்பாட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளனர்.
            கடந்த முறை தேர்தல் தேதி அறிவித்தவுடனே தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக முடிக்கிவிடப்பட்டு தனியாத்துப்போட்டி என அதிரடியாக அறிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் .  தி.மு.க.வேட்பாளராக மறைந்த எம்.ல்.ஏ. மகன் இன்பசேகரன் அறிவிக்கப்பட்டு கடுமையான வறட்சி வேலையின்மை காரனகளால் அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூர் பகுதிகளில் வசித்துவரும் சுமார் 25,000  வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டியதாக செய்தி .பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் மணியின் மகன் தமிழ் குமரன் , ஆ.தி.மு.க. வேட்பாளராக அன்பழகன்,தே.மு.தி.க.வேட்பாளராக பாட்டளிமக்கள் கட்சியிலிருந்து விலகி சென்ற வழக்கறிஞர் போட்டியிட்டாலும் பென்னகரத்தை போருத்தவாரை ஆளும் கட்சியின் இன்பசேகரனும், பாட்டளிமக்கள் கட்சியின் தமிழ் குமரனும் களத்தில் சரிநிகர் போட்டியாளர்கள்.
          ஆளும் கட்சியின் வேட்பாளர் இன்பசேகரன் ஆளும் அதிகாரம்,பணம் இவைகளை நம்பியும் , பா.ம .க.வின் வேட்பாளர் தமிழ்குமரன் தனது தந்தையின் சாதனைகள்,சாதி ஓட்டுக்கள் இவைகளை நம்பி நிற்கிறார்.
தொகுதியில் நடைபெறும் சம்பவங்கள் சில:
           கடந்த இரண்டுமாதங்களாக ராமதாஸ் ஆதரவாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் வீடு வீடாக சென்று வெற்றிலை பக்கு வைத்து , அங்குள்ள மக்களின் வேலைகளை பகிர்ந்து ஒட்டுவேட்டையாடிவருகின்றனர். கடந்த இருமாதங்களாக அமைதிகாத்து கடந்த இருவாரங்களாக சிலிர்த்தெழுந்த ஆளும் திமுக. சேலைகள் , சாக்கெட்டுகள் , வேட்டிகள் என இனாம் பொருட்கள் கொடுத்தான் , பிரியாணி, கலர் சாராயம் என விருந்து வைத்தும் தொகுதியில் குக்கிராமங்கள் விடாது கலக்கி விட்டு காவலர்கள் ஏவிவிட்டு சோதனை சாவடிகளை அமைத்து விட்டு ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.
              கடந்த ஐந்து நாட்களுக்கு முன் ஆரம்பித்த மக்களுக்கான பணப்பட்டுவாடா ஒரு ஓட்டுக்கு ஆயிரம் என இரவு பகலாக நடந்து முடிந்தது.கடந்த இரு திங்களுக்கு களத்தில் சுறுசுறுப்பாக ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆதிமுக.வினர் நகர பகுதிகளில் மட்டும் வளம் வருகின்றனர்.
இடைத்தேர்தலின் சனநாயகம்:
              இடைதேர்தல் என்றால் ஆளும் கட்சி மட்டுமே வெற்றிபெறும் நிலை இன்று உள்ளது. இடைதேர்தல் என்பது ஆளும் ,எதிர் கட்சிகளுக்கு மக்கள் மனநிலை அறிய உதவும் தேர்தல்.ஆனால் கடந்த ஆதிமுக காலத்தில் அரக்கோணம்,சைதாபேட்டை என தமிழகத்தின் பல இடைத்தேர்தலில் அதிமுக. வென்றது ஆனால் பொது தேர்தலில் தோல்வியடைந்தது.  அதற்கு காரணம் அதிகார துஷ்பிரயோகம் செய்து வென்றதுதான்.அதேநிலை தற்போதும் தொடருகிறது.  சோதனை சாவடிகளில் உள்ள காவலர்கள் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளை சோதனை செய்வதும், ஆளும் தரப்பின் தேர்தல்விதி மீறல்களை கண்டுகொள்ளாமல் விடுவது என்ன ஜனநாயகம்.  எதிர்கட்சிகளின் புகார்கள் மீதான நடவடிக்கைகளை முடிக்கிவிட தேர்தல் ஆணையம் முனைப்புகட்டிடவேண்டும் அப்போதுதான் ஆளும் தரப்பின் வரம்புமீறல் கட்டுக்குள் வரும் .  இதே நிலை பொது தேர்தலிலும் தொடரவேண்டிய நிலைக்கு மக்கள் மனநிலை தள்ளப்ப்படுமானால் நாட்டில் நல்ல மக்கள் பிரதிநிதிகள் இன்றி ஊழல் பேர்வழிகளிடம் நாடு சிக்கினால் மக்கள் பேராபத்தில் சிக்குண்டு வறுமையும் , வேலைவைப்புமின்றி அவதியுறும் நிலைக்கு ஆளாவார்கள் . வாழ்க ஜனநாயகம் . வெல்லட்டும் மக்கள் எண்ணங்கள்.

தண்ணீர் தேவையில் தன்னிறைவு எப்போது?

Friday, March 12, 2010

               புவி 29 சதவிகிதம் நிலப்பரப்பையும் 71 சதவிகிதம் நீர்பரப்பையும் கொண்டது .  புவியிலுள்ள நீர்பரப்பில் 97 சதவிகிதம் உப்புநீராகவும் மீதமுள்ள 3 சதவிகிதம் நன்நீராகவும் உள்ளது.  வீட்டு உபயோகத்திற்கும், விவசாயத்திற்கும்,தொழில் வளர்ச்சிக்கும்,சுற்றுச்சூழல் உள்ளிட்ட மனித வள மேம்பாட்டிற்கு  நன்னீர் தேவைப்படுகிறது .   நன்னீர் தட்டுப்பாடு , தேவையை காட்டிலும் பலமடங்கு அதிகரித்துவிட்டது .  ஆற்றுப்படுகை,ஏரிகள்,குளங்கள்,புவியின் அடிப்பரப்பு,துருவப்பகுதிகளில் உறைந்துள்ள பனிப்பாறைகளில் நன்னீர் உள்ளது.
நன்னீர் தட்டுப்பாடு தேவையைக்காட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது இதற்கு மக்கள் தொகை பெருக்கம் , தொழில் சாலைகள் பெருக்கத்தினால் அவைகளுக்கு தேவைப்படும் அளவுக்கதிக நன்னீர், பெருகி வரும் நகரமயம் ,நதிகளில் கலந்துவிடும் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகளால் அழிந்துவரும் நன்னீர் ; இவைகளால் நன்னீரின்  அளவு குறைந்து விடுகிறது.
உலக நன்னீர் நாள் :
           மார்ச் 22 உலக அளவிலான நன்னீர் நாளாக கடைபிடிக்கப்படுக்கியறது .  இதில் நன்னீரை  பாதுகாத்தல் ,மழை நீரை சேமித்தல் , தண்ணீர் சிக்கனம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.
           தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த ஒரு திரவப்பொருளாக  மட்டுமே பார்க்கக்கூடாது அது இப்புவியில் உயிர்கள் நிலைத்து வாழ அடிப்படை ஆதாரம், இதை பாதுகாப்பதும், சிக்கனமாக செலவிடுவதும் சாதாரண குடிமகன் முதல் முதன்மை குடிமகன் வரை ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல எதிர்கால சந்ததியினரின் தேவைகளை விட்டுசெல்லும் பொறுப்பும் ஆகும்.
 அரசின் கொள்கையும் மக்களின் தண்ணீர் தேவையும்:
              மக்களுக்கு விவசாயம்,குடிக்க உள்ளிட்ட வீட்டு தேவைகளுக்கு சுத்தமான , பாதுகாப்பான நன்னீரை தரவேண்டியது அரசின் கடமை என்பதனை அரசுகள் உணரவேண்டும் இதனை தேர்தல் நேர வாக்குறுதிகளாக மட்டுமே பயன்படுத்தாமல் ஆயுட்கால கடமையாக செய்யவேண்டும். பெரும்பாலும் நச்சு ரசாயனங்கள் பயன்படுத்தப்படும், நச்சு ரசாயனங்கள் உற்பத்திசெய்யப்படும் தொழிற்சாலைகள் முழுவதும் ஆற்றின் கரைகளிலேயே கட்டுவதற்கு அனுமதி கேட்கப்படும்பொழுது அதை அரசுகள் அனுமதிக்கப்படக்கூடாது , ஏற்கனவே செயல்பட்டுவரும் தொழிற்சாலைகள் தாங்கள் வெளியேற்றிவரும் நச்சுக்கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டபிறகு நீர்நிலைகளில் கலக்கவிடவேண்டும், அனுமதி முடிந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்க கூடாது.
பல்லுயிர் பெருக்க பேரழிவு:
             தொழிர்சாளைகளிலிருந்து வெளியேறும் நச்சுரசாயன கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் ஆறுகளில் கலக்கவிடுவதால் ஆற்றின் மூலம் கடலில் கலக்கும் பொது கடலிலுள்ள மீன்கள் ,டால்பின்கள், திமிங்கலங்கள் ,பவளப்பாறைகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான உயிர்கள் பாதிக்கப்படுகின்றன.  ஆறுகளில் கலக்கின்ற நச்சுரசாயனகழிவுகள் அருகில்(நதிக்கரை) உள்ளஏரிகள்,குளங்கள்,கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில்  கலப்பதால் மக்களின் குடிநீர் மாசடைந்து மனிதா வளமும், பிற உயிர்களும் பல்வேறு உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு அழிவையும் இதன்மூலம் புவியில் மனிதவளம் அழிவை சந்திக்கிறது.
              மனித வளம் நிலைத்தவளர்ச்சியடைய சுத்தமான நன்னீரை பாதுகாப்பதும், சேமிப்பதும் இன்றியமையாதது இதை அரசின் கொள்கையாகக் கொண்டு அதிக நிதி ஒதுக்கி நீர் தேவையை தன்னிறைவு செய்வதில் முனைப்பு காட்டிடல் வேண்டும்.

    

நித்தியானந்தா கம்பிகள் எண்ணட்டும் புத்திகள் வரட்டும்

Sunday, March 7, 2010


            "பெற்ற தாயாக இருந்தாலும் நள்ளி
ரவில் சந்திக்காதே " இது ஆண்மீகப்பநிகளில் சிறப்புற தன்னை அரநித்து தன்னைப்போலவே உன்னத சீடரை வளர்த்து திருமணத்திற்கு வற்புறுத்தியும் திருமணம் செய்துகொள்ளாமலே எந்தவித களங்கமுமின்றி இந்தியாவின் சாராம்சத்தையும், இந்துமதத்தின் சாராம்சத்தையும்,பாரம்பரியத்தினையும் உலகரியச்செய்து வாழ்ந்து மறைந்த விவேகானந்தர் போன்ற ஆண்மீகத்துரவிகள் வாழ்ந்து மறைந்த புண்ணிய பூமி நமது இந்திய பூமி.
              சமீப காலமாக கடவுளின் அடிமைகள் என்று ஆண்மீகப்பனிகளில் ஈடுபடும் ஆசாமிகள் பணத்தின்மீதும்,புகழின்மீதும் மோகம்கொள்ளும் நிலைக்கு மீறி கள்ள உறவுகளில்  ஈடுபட்டு ஆன்மீகத்திற்கும் இந்த மண்ணின் பண்பாட்டிற்கும் ஊறுவிளைவித்து வருவது பிரேமானந்த ,கல்கி, போன்ற சாமியார்களும் , தேவநாதன் போன்ற குருக்கல்களும் இறைவன் இருக்கும் கருவறை , இறைவனாக தங்களை வணங்கும் பீடங்களில் தங்களது குறைகளை சொல்லி நிவர்த்தி செய்துகொள்ள வரும் பக்தர்களை பொய்யான வாக்குறுதிகளை சொல்லி அப்பாவி பெண்களின் கற்பை சூறையாடி கடவுளின் கற்பகிரகத்தின் புனிதத்தை கெடுத்து , யாதுமறியாத பெண்களையும் பாவசெயலுக்கு ஆளாக்கி வருவது நீண்டகாலமாக நடந்துவருகிறது. தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் இவர்களின் லீலைகள் அம்பலமாகிவருகிறது.
கொடியவர்களின் கூடாரமாகிவிட்ட கோவில்கள்:
                "கோவில்கள் வேண்டாமென்று சொல்லவில்லை ,கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது" என்ற பராசக்தி படத்தின் வசனத்திற்கு வக்காலத்து வாங்கும் நிலை ஏற்பட்டு நெடுநாளாகிவிட்டது.
தலைப்பாகை கட்டியவனெல்லாம்:
        புலியைப்பார்த்து பூனை சூடபோட்ட கதையாகிவிட்டது திருவண்ணாமலையை சொந்த ஊராகக்கொண்ட நித்தியானந்தா நிலை.   இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீக தலம் திருவண்ணாமலை , இங்கு மலைவடிவாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மக்களை காக்கிறார் பரம்பொருளான அருணாச்சல ஈசுவரர்.  இவரின் லிங்கத்தையும் விவேகானந்தரின் மாதிரி தலைப்பாகை இவற்றை வைத்து  தியான மடங்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் பணம், கடவுளாக தன்னை சித்தரித்து வானலாவபுகழ், ஏராளமான சொத்துக்களை , லட்சக்கணக்கான அப்பாவிமக்களை நம்பவைத்து சராசரி மனிதனைவிட கேவலமான முறையில் தன் அந்தரங்க லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளது சமீபத்தில் சபை அறிந்தது  ஒரு தனியார் தொலைக்காட்சிகளின் மூலம்.
ஆன்மீகமும் ஆகமவிதிகளும்:
                    
ஆன்மீகத்தின் பெயரால் சிலர் இந்தியாவின் சிறப்புகளை உலகறியசெய்ததன் மூலம் இறந்தும் வாழ்ந்துகொண்டிருப்பதன் காரணம் போலிகள் உருவாக நேர்ந்தது. அப்பாவி மக்கள் ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குமேல் செல்ல அனுமதி மறுப்பது , குறிப்பிட்ட நபர்கள் கடவுள் சிலைகளை தொடுவதற்கும்  பல்வேறு நிலைகளில் ஆகம விதிகள் ஆழ்டாரம் , அனுழ்டாரம் என்றெல்லாம் சொல்லி வந்தவர்கள் பெண்களை கடவுளுக்கருகில் துகிலுரிந்து நாசம் செய்து இச்சை தீர்த்துள்ளனர்.   கடந்த இரண்டாம் நாள் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பான செய்திகளில் நித்தியானந்தா நாடிகள் ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருந்துள்ளார் மேலும் பல நடிகைகளை தம் வலையில் வீழ்த்தி இச்சை தீர்த்துள்ளார் .  
சட்டம் தன் கடமையை செய்யட்டும்:
             கடவுள் பெயரால் ஆண்மேகத்தினையும், மக்கள் நம்பிக்கையையும் பாழ்படுத்தி வரும் போலிகளை , போலி நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் .  நித்தியானந்தா , ரஞ்சிதா உள்ளிட்ட புகாரில் தொடர்புடையவர்களை கைது செய்து தண்டிக்க சட்டம் தயக்கம் காட்டிடவேண்டாம். இப்படிப்பட்ட கயவர்களெல்லாம் கம்பிகள்  எண்ணட்டும் புத்திகள் வரட்டும்.

தமிழகத்திற்குள் பவானி இனி பவனி வருமா

Friday, February 26, 2010


       நீலகிரி மலையின் உச்சியிலிருந்து உற்பத்தியாகி தமிழ்நாடு,கேரளா ,கர்நாடக மாநிலங்களில் பயணிக்கிற நதிதான் பவானி.217 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நதி தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதியாகும் .  நதியின் நீளத்தில்
        தமிழகத்தில் 87 சதவீதமும்,கேரளாவில் 9 சதவீதமும்,கர்நாடகாவில் 4 சதவீதமும் ஓடுகின்ற இந்த ஜீவனதியை ஜீவனமில்லாமல் செய்ய கேரளா முயற்ச்சிக்கிறது.
       பவானி நதி தமிழகத்தில் பாசனத்திற்காக ,குடிநீருக்காக பெரும்பங்கேற்கும் மாவட்டங்கள் கோவை,ஈரோடு ஆகிய மாவட்டங்கள் . பயன்பெறும் முக்கிய நகரங்கள் முக்காலி,ஆதிக்கடவு,கூடப்பட்டி,மேட்டுப்பாளையம்,பவானிசாகர்,சத்தியமங்கலம்,ஆப்பகூடல்,ஆவூடையப்பாரி ,பவானி.
இந்த முக்கிய நகரங்கள்,கிராமங்கள்  உள்ளிட்ட ஏராளமான மக்கள் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியுள்ளனர் இவர்களின் அடிப்படை வாழ்வாதாரமான குடிநீர் தேவையை நிறுத்த கேரளா அரசு அதன் எல்லையில் புதிய அனைகட்டிதடுத்திட முயல்கிறது .   சம்பந்தப்பட்ட தமிழக மக்களை ஏமாற்ற முயலும் கேரளாவை தடுத்து நிறுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கைஎடுக்காமல் ஏற்கனவே புதிய அணையை முல்லைபெரியார் அணைக்கு கூடுதலாக கட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பினை மீறி வருகிறது.  இந்நிலையில் பவானியும் இனி தமிழகத்திற்குள் பவனி வருமா தமிழகத்தின் மேற்குமாவட்ட மக்களை காக்குமா என்பது கேள்விக்குறிதான். சம்பந்தப்பட்ட மாநில மக்களின் அல்லது அரசின் ஒப்புதலின்றி அணைகட்டும் கேரளா அரசின் நடவடிக்கை நீர்வளபாதுகப்பு சட்டம் (மத்திய அரசு) ,உச்சநீதிம்ற உத்திரவு மீறல் இவற்றிற்கெல்லாம் தமிழக அரசின் முடியாதனம் மக்களுக்கு விடியளைத்தருவது காலத்தின் கையில்.

?














      

கொள்கையற்ற அரசியலால் விலைவாசிஉயர்வும்,வறுமையும்


          நாட்டின் பொதுமக்களை சமீபகாலமாக வாட்டிவதைக்கிற விஷயம் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம் விஷம் போல கட்டுக்கடங்காமல் ஏறிவருவதுதான்.  குழந்தைகளுக்கு தரும் பால் சமையலுக்கு பயன்படும் உப்பு ,காய்கறி , பருப்பு,சர்க்கரை,அரிசி,எண்ணெய் போன்றவைகளின் விளைஎற்றாம் நடுத்தர குடும்பங்கள் , ஏழைக்குடும்பங்கள் என ஒட்டுமொத்தமாக பாதித்துள்ளது.  உணவகங்களில் சாப்பிட சாதாரண ஓட்டல்களில் ரூ.25-35, பெரிய ஓட்டல்களில் 50 ரூபாய் முதல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற நிலையில்.   ஏழை நடுத்தர குடும்பங்கள் மூன்று வேலை நல்ல சத்தான சாப்பாட்டை சினிமாக்களில் காணவேண்டிய நிலையாகிவிடும் என தோன்றுகிறது. வசதிபடைத்த  பணக்கார மனிதர்கள் ஒருகார் வாங்கினால் இன்னொரு காரை வாங்கும் நிலை நாட்டில் வளர்கிறது.  ஆனால் ஏழை இன்னும் ஏழையாகவே கீழிறங்கும் நிலை நிலவுகிறது.
                 இந்தியாவில் சில வருடங்களாக விலைவாசி ஏற்றம் குறித்த பல கருத்துக்கள் உலா வருகிறது.  ஆனால் அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் வர்த்தகமாகிவிட்டதால் ,வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி,கடத்தல் ,பதுக்கல் உள்ளிட்ட செயல்களால் விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறிவருகிறது.   இதை தடுக்க பொதுவழங்கள்துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசு தவறியது விளைஎற்றத்திற்கும் வறுமை அதிகரிப்பிற்கும் காரணமாக அமைந்தது.
கொள்கையற்ற வறுமை ஒழிப்பு திட்டம் தோல்வி:
            மத்திய ,மாநில அரசுகள் வறுமை ஒழிப்பிற்கு வாக்குறுதிகள் ,திட்டங்களை பொதுமக்களுக்கு அளிப்பார்கள் ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கான நிலையான திடனான கொள்கையை நடைமுறைப்படுத்த்தும்வரை  விலைவாசி உயர்வும்,வறுமையும் தீவிரமடியும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.  


.புத்தரை தகர்த்த வன்முறையின் நினைவுதினம்

Thursday, February 25, 2010


" ஆசையே அனைத்து துன்பத்திற்கும் காரணம்" இந்த இரத்தின சுருக்க வாசகத்தால் மட்டுமல்ல தன் வாழ் நாளிலும் கடைபிடித்ததால் உலக உயிர்களிடத்தில் அன்புசெலுத்தி வாழ்ந்த இராகுலன் என்ற கௌதம புத்தர் உலகில் அமைதியை விரும்பும் உயிர்களால் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு ஆலயங்கள் எழுப்பி வழிபட்டனர். ஆனால் உலக உயிர்களிடத்தில் அன்புசெளுத்திய நாள் வரை இவ்வுலகில் அமைதி இருந்துவந்தது கால மாற்றங்களால் மதநல்லிணக்கம் சிதையதொடங்கியது, உயிர்கள் வதைக்கப்படுவது அரங்கேரத்தொடங்கியது கோரத்தின் உச்சம் மக்களிடம் இருந்து கடவுள்கள் வரை பிரிவினையை மனிதா குளம் வரையறுத்தது . இதன் விளைவாக வன்முறை,தீவிரவாதம் தலை தூக்காரம்பித்தது .

உயிர்களை நேசிக்க சொன்ன தன்னை கொள்ளவந்த மனிதனை தன்சீடனாக ஏற்ற புத்தகடவுளின் சிலைகளை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் டைனமைட் குண்டுகளை வைத்து கடந்த 2001 பிப்ரவரி 26 நாளன்று தகர்த்து உலக அரங்கில் தங்களது கடவுளான அல்லவே ஏற்காத தீமையை செய்தனர்.



அதேபோல் புத்தமதத்தை பின்பற்றி வாழ்ந்துவரும் துறவிகளும் , மக்களும் நிறைந்த புத்தமத நாடு என்ற பெயர் பெற்ற இலங்கை தேசத்தில் தமிழ்மக்கள் இறக்க்கமற்றமுரையில் கொன்று குவிக்கப்பட்ட துயர நிகழ்வு கொள்கைமுரண்பாடுமட்டுமல்ல , மனிதநேயமற்ற நிலை இதற்கு புத்தமத துறவிகள் துரவரம்பூண்டும் பிரையிர்களிடத்தில் அன்புசெலுத்த சொன்ன புத்தரின்வாக்கு பிரையிரின் இரத்த்த்தைக்குடிக்கின்ற வெறியாக உருவெடுத்தது உலகில் புத்தமதம் துரவிகளுக்குமட்டுமல்ல பின்பற்றுகிறவர்களுக்கும் நல்லதல்ல . புத்தம் சரணம் கச்சாமி அல்ல புத்தம் மரணம் கச்சாமி.





  

மரபுவழி விவசாயத்தை அழிக்கவேண்டாம் -ரமேஷ்

Thursday, February 18, 2010





           இந்திய அரசு சுற்றுசூழல் துறை மரபணுமாற்றம் செய்யப்பட பயிர்களை அனுமதிக்க சம்மதம் தெரிவித்து நெல்,பருத்தி பயிர்களை சோதனை முறையில் இந்திய வயல்வெளிகளில் வளர்ந்தநேரத்தில் அதன் தீமைகள் குறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் ,இயற்கை  விவசாய அறிவியலார்கள் இந்த செயலுக்கு காரணமான அமெரிக்காவின் மான்சாண்டோ,மகிக்கோ நிறுவனங்களுக்கு எதிராகவும் , மரபணு மாற்றம் செய்தவிதைகளை அனுமதிக்கக்கூடாது என இந்திய மற்றும் மாநிலரசுகளை வலியுறுத்தி போராட்டம்,ஆர்ப்பாட்டம்,பேரணிகளை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர் .
மரபணுமாற்றம் செய்தவிதைகளால் விவசாயிகளின் பாதிப்புகள்:
             மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் ,பருத்திவிதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்த விவசாயிகள் இயற்கையாக மண்ணில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து மண்ணின் வளத்தை கெடுத்தும், குறைவான விளைச்சளைமட்டுமே தந்தது , இந்த விதைகளை பயன்படுத்தி விவசாயத்தி செய்யும் அடுத்தடுத்த முறைகளில் அதிக நச்சு தன்மை வாய்ந்த பூச்சுகொல்லிகளை விவசாயிகள் வாங்க வேண்டியிருந்தது .
              மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்த நிறுவனங்கள் இந்த விதைகள் பூச்சிகளால் பாதிக்கப்படாது மாறாக தண்டு புழு ,காய்புழு இவைகளை அழித்து நல்ல கூடுதல் மகசூல் கிடைக்கும் என உறுதி தந்தபின்னர் பயிரில் விழும் பூச்சிகள் பற்றிய புகாருக்கு பூச்சிகொல்லிகளை பரிந்துரைத்தனர் , விதைகளுக்கு அதிகவிலை இவைகளால் தாங்கமுடியாத கடன்சுமையால் மூழ்கிப்போன விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் நாடறிந்தது .
              நமது நாட்டில் கிட்டத்தட்ட நூறுவகையானநெல்வகைகள் , ஏராளமான கத்தரிவகைகள் இருந்தது , இதனை பாதுகாக்க வேண்டிய அரசுகள் , இருக்கின்ற பாரம்பரிய நெல்,கத்தரி விதைகளை பாதுகாக்க , விளைவிக்க ஊக்க படுத்தாமல் விதைகள் காப்புரிமை  சட்டம் இயற்றி நாட்டுமக்களை அந்நிய நட்டு நிறுவனங்களிடம் கையேந்தவைக்க அரசின் அதிகார வர்க்க விஞ்சானிகளின் கருத்தைஏற்றுள்ளது  ,மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி ; இது ஜனநாயகத்தின் மிகப்பெரிய படுகொலை.
விதை காப்புரிமை சட்டமும், மரபனுமாற்றமும்: 
                 விதை காப்புரிமை சட்டத்தின்படி காப்புரிமை பெறாத நபர் விதைகள் வைத்திருத்தல் சட்டவிரோதம் , விதைகளை கட்டாயமாக நிறுவனகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும்.இந்த விதைகளால் மண்வளம் நாளுக்குநாள் குறைந்துகொண்டேபோகும் .  பெரும்பாலும் தாவரங்களில் தன்மகரந்த  சேர்க்கை ,அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுவது இயற்கை , அயல்மகறந்த சேர்க்கையால் நமது பாரம்பரிய விதைகள் பயிர்செய்யப்பட்ட நாற்றாங்காலில் உள்ள பயிர்களில் மரபணு மாற்றம்  செய்யப்பட்ட விதைகள் கலப்படம் வர நேர்ந்தால் விதைகள் காப்புரிமை சட்டத்தால் இந்திய விவசாயிகள் கைது செய்யப்படுவது நிகழும். அயல் மகரந்த சேர்க்கை நிகழ்வால் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்பட மலட்டு மரபணு மாற்றம்செய்யப்பட்ட விதைகள் காரணமாக இருக்கும்.
உணவு பொருள் பற்றாக்குறை :
        நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க பசுமைப்புரட்சி என்ற பெயரில் நவீன எந்திரங்களையும் , பூச்சிகொல்லிகளையும் கொண்டுவந்த பின்பும் வறுமையும் ,சாவும், எலிக்கறி உண்பதும் நிகழ்வதை தடுக்கவோ ,தீர்க்கவோ முடியவில்லை.  உணவுப்பொருள் தட்டுப்பாடு இல்லை போதிய அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு உள்ளது .  என்று சொல்லும் அரசு இப்போது பற்றாக்குறையை போக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் நாட்டிற்கு அவசியம் என விவசாய துறை அமைச்சர் கூறுவது தவறு.  உணவுபொருட்கள் தட்டுப்போடு  நிலவுதோ?,கையிருப்பு போதிய அளவு உள்ளதோ ? இந்த மாறுபட்ட விளக்கங்களால் மட்டும் வறுமை ஒழியாது.  அத்தியாவசிய பொருட்களின் முறைகேடு,பதுக்கல்,கடத்தல் இவைகளை முறையாக அறவே ஒழிப்பதுதான் வறுமையை ஒழிக்க ஒரே வழி , எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வழி செய்ய அரசு வெட்கப்படக்கூடாது , அதுவரை வறுமை ஒழியாது.
          மரபு வழிவிதைகளும், இயற்கை விவசாயமும்தான் இந்த நாட்டை காக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் நன்மையேதும் கிடைக்காது என்பதே உண்மை.

அரியவகை நெல் வகைகள்

Monday, February 15, 2010

                                                                                                    சில  மாதங்களாக நாடெங்கிலும் விவசாயிகள்,தொண்டுநிறுவனங்கள்,சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் மரபீனி மாற்ற கத்திரிக்காய்க்கு மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக தற்காலிக தடையை விதித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டங்களை நாட்டின் முக்கிய சில நகரங்களில் வைத்து மக்கள் கருத்தறிந்த பின்பே இருதிமுடிவேடுக்கப்படும் என சுற்றுசூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்தார்.  இதற்கு முன் மான்சாண்டோ,மகிக்கோ போன்ற அமெரிக்கா நிறுவனங்களின் சோதனை முயற்சியாக இந்தியாவிற்குள் நெல்,பருத்தி போன்ற பயிர்களை விவசாயிகள் மீது பொய்யான கவர்ச்சி மிகுந்த காரணங்களான பூசிவிழாது,அதிக மகசூல் என சொல்லி விதைகளை அதிக விலைக்கு விற்றதன் காரணமாக வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கடனாளியாகி ஆந்திராவில் மட்டும் 7000 க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

                நமது பாரம்பரிய விவசாயமுறையில்  விவசாயிகள் ஏராளமான வகைகளை உற்பத்திசெயதனர் அதில் இயற்கையான முறையில் ஊட்டசத்துக்களும் ,விதவிதமான சுவையும்,வெவ்வேறுவிதமான பருமனும் , பூச்சிகளை எதிர்க்கும் திறனும் கொண்டவைகளாக இருந்து வந்தன .  இவைகள் ஒன்றும் ஆராச்சிகல்வி முடித்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவைகள் அல்ல அனுபவம் மட்டுமே உள்ள விவசாயிகள் கண்டுபிடித்தவைகள் அவைகளின் விவரங்கள் இங்கே.

பாரம்பரிய நெல்விதைகளின் வகைகள் :
              சம்பா நெல் வகைகள்:
        கஸ்தூரி சம்பா,நெல் சம்பா,குணா சம்பா,சீராக சம்பா,குண்டுமணி  சம்பா,கொத்தமல்லி சம்பா,தூய மல்லி சம்பா,கீர சம்பா,கல்லன் சம்பா,செறிய சம்பா .
        இந்த வகை நெல் 4  மாதம் முதல் 6 மாதம் வரை ஆகும்.
             குறுவா நெல்வகைகள் :
        கட்டு குறுவா,டார்ப்ப குறுவா ,மிக் குறுவா,கரி குறுவா,குல குறுவா,பணம் குறுவா,அறுவாள் குறுவா.
         இந்த வகை நெல் 2 மாதம் முதல் 4 மாதங்களில் விளைந்துவிடும்.
          சொர்ணவாரி,காடகழுத்தான்,விலங்கன்,மானாவாரி,மருதவேளி,கரிமுலாக்கி,ஜீரகமுலாக்கி,எவன்ன முலாக்கி,மஞ்சமுலாக்கி,.
            இந்த வகை நெல் வகைகள் மூன்றரை மாதத்தில் விளைவதாகும்.
காற்றாடி முத்தன்,காற்று காரிமைணன், விரியன் , கல்லுண்டான்,கருத்த அரிவிக்குருவி,சிறலாகி,சுட்டிவிரியான்,கருத்த செறு கண்டான் ,குற்றாலம்,குன்தாவேலா,குன்னியப்பன்,கொடா நரியன்,கட்டி வெல்லா,பூதல கறுப்பன்,முண்டாக்க(சிகப்பு)சொன்னால்,முண்டாக்க பள்ளிபுறா(கருப்பு
),கியூவாலா,மஞ்ச வள்ளி,வெற்றிகண்டான்,(பெரியது),சின்குனி,குருவகல்லான்,சிமநெல்,அதிக்கிரவி வெள்ளா,செண்பகா மார்த்தாண்டன் கருத்த தட்டார வெல்லா , பலன்த தட்டார வெல்லா ,ஆனா கொம்பன்,குட்டி ஆனா கொம்பன்,செம்புள்ளி,முத்து வெல்லா,கும்பாலாவால் கிளை முண்டான்,(வெள்ளை),பாலி  சொறிம்பு(கறுப்பு),பாலி  சொறிவு(வெள்ளை),வெள்ளை  செறு நெல்,விரியாதுங்கன்,புல்லு புளத்தி,கறுப்பு காணி,செம்பாக லிங்கம்,வாலி கறுப்பான்,சித்ரகாணி.
        இவற்றில் இன்று 90 சதம் அழிந்து போனது வருத்தமானது மல்ல மிகப்பெரிய இழப்பு மாகும் .

உயிரின் முதல் உரிமை தாய்பால்...

Friday, February 12, 2010


        வானம் பாலாய்  பொழிகிறது
                மண்ணுக்கு மழையை ..
        காட்டில் புலிகள் கூட தன்
             குட்டிகளுக்கு கொடுக்கிறது பாலை..
        பறவையினத்தில் வவ்வால் கூட
               தாய் பாலை கொடுக்கிறது
        கடலில் திமிங்கலம்,டால்பீன்கள்
                தன்குட்டிகளுக்கு தாய்பாலையே கொடுக்க...
        மனிதா நீ மட்டும் ஏனோ ?அழகை காக்க தன்
               பிள்ளைகளுக்கு பிளாஸ்டிக் புட்டிகளில் பால்....
         உலக நியதி ஒவ்வொரு உயிருக்கும் அதன்
              தாய் பால் அடிப்படை உரிமை ..........                                                                                
..


கூலிப்படைகளின் வேட்டைகள் தொடரவேண்டும்...


          தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்த காலம் ஒன்று அது மகாத்மா காந்தி அவர்களின் எண்ணப்படி நள்ளிரவில் கூட பெண்கள் தனியாக நடமாடமுடியும் ஆனால் இன்று ஆண்கள் கூட சொந்த வீட்டில் நிம்மதியாக கண்மூடி தூங்கமுடியாத நிலை.அது யாராக இருந்தாலும் சரி ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். என பெரிய அளவில் இருந்தாலும் கூலிப்படைகள் குடும்பத்துடன் தீர்த்துக்கட்டிவிடுகிரார்கள். அதிகார போட்டி, வணிக அறீதியான போட்டி என ஏதேனும் ஒருவிதத்தில் சாதாரண பகை முதல் பெரிய அளவிலான பகைக்கும் தீர்வு கொலை மட்டுமே என இன்றைய நிலை உள்ளது.   இதற்கு காரணம் கள்ள சாராயம் காச்சுதல்,கஞ்ச,கேட்டமைன்விற்றல் என ஏதேனும் ஒரு சட்டவிரோத நிகழ்வில் ஈடுபட்டால் பணத்தை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவது பிறகு அரசியல் ,பெரிய அளவிலான கடத்தல் ,கட்டபஞ்சாயத்து என அரசியல் பலத்துடன் நிற்கும்பொழுது காவல்துறை சாதாரண விசாரணை என்றால் கூட யோசிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.  இவர்கள் பல கற்பழிப்புகள் ,பெண்களை கடத்தல், குழந்தைகளை கடத்தல்,கொலைகள், ரியல் எஸ்டேட் , முறையற்ற விதத்தில் நிலங்களை பலரிடம் விற்பது போன்று பொதுமக்கள் ஏராளமாக பாதிக்கப்பட்டு ஒன்றுகூடி போராடும்போழுதோ? அல்லது பெரிய அளவிலான புள்ளிகள் இவர்களால் பாதிக்கப்பட்டாலோ இவர்கள் மீது சட்டம் பாயும் அதுவும் நமது நாட்டின் சட்ட ஓட்டைகளை காவல் துறையைவிட நேர்த்தியாக குற்றவாளிகள் பயன்படுத்துவதால் சவாலான ஒன்றாக இருக்கும் கட்டுக்கடங்காத நிலையில் காவல் கடைசியில் துப்பாக்கி எடுத்து போராடவேண்டிய நிலை வளர்த்துவிட்ட காக்கிகளையே காவுகேட்கும் கூலிப்படை.
            இப்படி தமிழகம் முழுவதும் கூலிப்படைகளை வைத்து செயல்பட்ட திண்டுக்கல் பாண்டி சமீபத்தில் காவல் அதுரையினரின் அசத்தலான நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலுமுள்ள கூலிப்படையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .  குற்றம் சிறியதோ பெரியதோ அதற்கேற்றார்போல தண்டனைகள் இருந்தால்தான் தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் அமைதி ஏற்படும் , அதற்கு காவல் துறை தயக்கம் காட்டக்கூடாது .

..

உலக அழிவை தடுக்க...

Thursday, February 11, 2010

             அமரிக்காவை ஒட்டியமைந்துள்ள கரிபியன் தீவான ஹைத்தி யில் கடந்த ஜனவரி பனிரெண்டாம் தேதி ஏற்பட்ட நிலநத்க்கத்தில் 2,30,000  பேர் உயிரிழந்தனர். இது உலகெங்கிலும் மனிதகுலத்திற்கு பெருத்த அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கோபன் ஹெகன் புவி வெப்பநிலை மாநாடு:
             கடந்த டிசம்பர் 7-18 வரை நடைபெற்ற உலக அளவிலான மாநாட்டில் உலகின் 192 நாடுகளை சேர்ந்த பிரதம மந்திரிகள் , அதிபர்கள் , அமைச்சர்கள் , தன்னார்வ அமைப்புகள் என அனைவரும் கலந்துகொண்டு உலகின் வெப்பநிலை உயர்வு , பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து தீவுகள் கடலுக்குள் மூழ்குதல் , சுனாமி, புயல்,கடுமையான வறட்சி, நிலநடுக்கள் போன்ற பேரிடர்கள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் விவாதித்தனர் இதில் வளர்ந்துவாரும் நாடுகள் பொருளாதார மேம்பாடு ,வளர்ச்சித்திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களை காரணம் காட்டி பசுமை இல்லை வாயுக்களை வெளி விடுவதை  குறைப்பதை மறுத்து நழுவிவிட்டனர். வல்லரசு நாடுகள் வளர்ந்துவரும் நாடுகள் பசுமை இல்லை வாயுக்களை வெளியேற்றத்தை குறைக்க அதற்கான நிதி உதவியை அமரிக்க அளிக்கும் என அறிவித்தது.

வளர்ந்துவரும்,வல்லரசு நாடுகளின் போட்டியால் அழிவின் விளிம்பில் தீவுகள்:
              
            உலகின் எழில மிகுந்த ஹைத்தி , சுமித்ரா உள்ளிட்ட ஏராளமான தீவுகள் கடலுக்குள் செல்லும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன.சக நாடுகளில் வாழும் சக மனிதர்களின் உயிர்களை காக்கவும், எதிர்கால தலைமுறைக்கு எழில் சூழ்ந்த பாதுகாப்பான உலகை விட்டுசெல்ல மனமில்லாத வல்லரசு நாடுகளின் சுய நலம் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இவர்கள் வெளிவிடும் பசுமை இல்லை வாயுக்களின் வெளியேற்றத்திற்கு பொறுப்பேற்றால் அதற்கான விலை தருவதாக அமரிக்க போன்ற வல்லரசுகள் தெரிவிப்பது அந்நாட்டிற்கு அடிக்கடி வரும் ஹரிக்கேன் சுறாவளி போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை மறந்துவிட்டது போலும் .  எது எப்படியோ அமரிக்க தாழ்த்தப்பட்ட இனத்தின்(கறுப்பரினத்தின்) தலைவர் ஒருவரை ஏற்றுக்கொண்டதிலிருந்து தனது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே நல்வழிபிறக்கும் என எண்ணிய அமரிக்க உள்ளிட்ட உலக மக்களின் எண்ணங்களுக்கு ஏமாற்றம் நேர்ந்துள்ளது.
அமரிக்க எப்போதும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படுமே தவிர மக்களை சூழல் , எதிர்காலம் குறித்து கவலைப்பட்டதில்லை அதை புதிய அதிபரும் பின்பற்றுவது வேதனை.
காக்க காக்க ......
         புவி வேப்பமடைவதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் கடந்த 100 ஆண்டுகளுக்குமேலாக வெளியிடப்பட்ட கரியமிலவாயு உள்ளிட்ட பசுமை இல்லை வாயுக்களை வெளியேற்றத்தின் விளைவுகளை நம்மால் தடுக்க முடியாது ;ஆனால் இனி வெளியிடப்படும் வாயுக்களை நாம் நிச்சயம் குறைக்கவேண்டியது அவசியம் அதை வல்லரசுகள் உணர்ந்து உலகை காக்க தானும் அது தொடர்பான நடவடிக்கைகளில் உடன் இறங்கவேண்டும்.  இயற்கையுடன் இணைந்த வாழ்வு மட்டுமே இனிக்கும் இல்லையேல் நமது அழிவு உறுதிசெய்யப்படும் .......


..

அன்புமணிக்கு இளைஞர்களின் சலாம்





           இந்திய அரசு கடந்த 2004 மே முதல் தேதியிலிருந்து புகையிலை தடைசட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது. இதை மாநில அரசுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென மத்திய அரசின் மக்கள் நலவாழ்வு அமைச்சர் மருத்துவர் இரா.அன்புமணி ராமதாஸ் தெரிவித்து , சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசு அதிகாரிகளின் பதவிகளின் பெயர்களை வெளியிட்டார் மாவட்ட சுகாதார செவிலியர் , கிராம சுகாதார செவிலியர் , மருத்தவ கல்லுரி முதல்வர், மருத்துவ இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ,துணை இயக்குனர்கள், மருத்துவர்கள்,பள்ளி முதல்வர்கள்,உதவி ஆய்வாளர் அந்தஸ்த்திற்கு குறையாத காவல் துறை அதிகாரிகள்.
            இந்த சட்டத்தில் பொது இடங்கள் எவை என தெளிவாக குறிப்பிடப்படவில்லை என சட்டம் வழக்கம் போல காற்றில் பறந்தது , ஆனால் அமைச்சர் மனம் தளராமல் மீண்டும் சட்டத்தை முறையாக  சட்டத்தில் பொது இடங்களின் விவரங்களை குறிப்பிட்டு கடந்த அக்டோபர் இரண்டாம் நாள் தேச தந்தை அண்ணல் மகாத்மாகாந்தி அவர்களின் பிறந்த நாள் அன்று முதல் நடைமுறைப்படுத்தி அதை மாநில அரசுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார் பெண்கள் , புகைபிடிக்காதவர்கள் மத்தியிலும் , சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது .  இந்த அறிய செயலுக்காக மருத்துவர் அன்புமணிக்கு  உலக நாடுகளின் பொதுமன்றமான ஐ.நா. பொதுசபையில் நடைபெற்ற உலக தலைவர்கள் மாநாடொன்றில் லூரதர் எல் டெர்ரி  என்னும் உயரிய விருதை உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கி கவுரவித்தனர். 
   fdfddfdsdsafdsasdபின்னர் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் புகையிலை ஒழிப்புக்காக விருதுவழங்கி கவுரவித்தார்.  ஆனால் சட்டத்தை தீவிரமாக ஒருசில இடங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தினர் பலஇடங்களில் கண்டுகொள்ளவில்லை ; எனினும் அவரின் பசுமைதாயகம்மூலமும் , அவரின் வலியுறுத்தல் மூலமும் மக்களிடம் நாளடைவில் விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களே புகை என்னும் அரக்கனிடமிருந்து விலகி வருகின்றனர் இதனை புகையிலை தயாரிப்புகள் விற்பனை குறைந்துவருவது சாட்சியாக ஊடகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.  
pffஅன்புமணியின் புகையிலை தடைசட்டத்தை இளைஞர்கள் ஏற்பு 
       நாளொன்றுக்கு 2500 மனித உயிர்களை கொலை செய்யும் புகையிலை பொருட்கள் நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கும் இல்லை என்ற நிலைக்கு இந்தியா முன்மாதிரியாக விளங்க உரிய அனைத்து நடவடிக்கைகளை பதவியின் நலன் சுகங்களை பாராமல் துணிச்சலுடன் செயல்பட்ட விதத்திற்கு மக்களிடம் அங்கிகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியானது. இந்த விருதுகள் அனைத்து விருதுகளிலும் முதலானது.  வாழ்க மருத்துவர் அன்புமணி சிறக்க அவரின் சமூக நலப்பணிகள்.



தனிநாடு கேட்கும் பால் தாக்ரே....

Friday, February 5, 2010

           இந்தியாவின் மிகப்பெரிய மாநகரங்கள் (metrocorporation-Mcity) மும்பை , கொல்கத்தா , டெல்லி , சென்னை இவற்றில் மும்பை அவ்வப்போது தீவிரவாத தாக்குதல், வன்முறை, இறையாண்மைக் கெதிரான  பேச்சுக்கள் இவைகல்லால் பரபரப்படைவது வாடிக்கை. சமீபத்தில் சிவசேன கட்சியின் தலைவர் பால்தாக்ரே மும்பை மராட்டியர்களுக்கு மட்டும்தான் சொந்தம் வட இந்தியர்களுக்கு அல்ல என வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது பேரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.  இவரது பேச்சுகளுக்கு அவ்வப்போது சில பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம் இந்த முறை பிரபல கிரிக்கெட் வீரரும் மும்பை மண்ணின் மைந்தருமான சச்சின் டெண்டுல்கர் இந்தியா இந்தியர் அனைவருக்கும் சொந்தம் என பேசி ஒருமைப்பாட்டுக்கு வலுசேர்த்து உள்ளார் ஆனால் சிவசேன தலைவர் பால்தாக்கரே எதிர்ப்பை தேடிக்கொண்டுள்ளார்.இந்த வரிசையில் இந்தி நடிகர் ஷாருக்கான் ,காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி , மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்ட பலரும் பால்தாக்கரே கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததால் அவர் கோபமடைந்து , ஷாருக்கான் திரை படங்கள் பாதிப்படைந்தால் நாங்கள் பொறுப்பல்ல என பேசி வன்முறைக்கு அழைப்புவிட்டிருக்கிறார் .
இந்தியாவின் நுழைவுவாயில் 
           கேரளா மண்ணின் மைந்தர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேநீர் கடைகளையும், வணிக நிறுவனங்களையும் , அரசு பணிகளையும் செய்து வாழ்கின்றனர், அதேபோல் மும்பை , கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநில மக்களும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணிபுரிகின்றனர் அதற்கு நமது அரசியல் சட்டம் வழிவகை செய்கிறது .  ஏன் வெளிநாடுகளில் கூட சென்று பணிபுரிய புலம் பெயர் சர்வதேச தொழிலாளர் சட்டம் வழிவகைசெயகிறது.  நமது நாடு பல மொழிகள் பேசுகின்ற மக்கள் வாழ்வதால் அவர்களின் விருப்பப்படி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது .   ஆனால் பிரமாநிலத்தவர்கள் பணிபுரியக்கூடாது என கர்நாடக, மும்பை போன்ற மாநிலங்களில் மட்டுமே சில அரைவேக்காட்டு அரசியல் வாதிகள் மிரட்டுகின்றனர்.  முதலில் அந்த மாநில மக்களின் புலம்பெயர்தலையோ , பிறமாநில அரசுவேலை,(மத்திய அரசு பணி) , மின்சாரம் உள்ளிட்ட தேவைகளை புறக்கணித்தால் இது நியாயமானது.  நெய்வேலி அனல்மின்னிளையத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கர்நாடக, மராட்டியர்கள் பணிபுரியலாம், கர்நாடகாவிற்கு மின்சாரம் தேவைப்படுகிறது; ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது  என்பது வெட்கமாக இல்லையா? இந்தியா என்ற ஜனநாயக நாடு அனைத்து மொழிகளை பேசுகின்ற அனைத்து மக்களும் எங்கு வேண்டுமானாலும் வசிக்க , பணிபுரிய , எந்த மதத்தையும் சார்ந்திருக்க வழிவகை செய்கிறது.  மராட்டிய இந்தியாவில் ஒரு மாநிலம் தானே தவிர தனி நாடு அல்ல என்பதை உணரவேண்டும் மராட்டியர்களுக்கு மட்டுமே மும்பை சொந்தம் என வன்முறையை தூண்டிவிடுவது இந்தியாவிலிருந்தும் இந்தியா மக்களிடமிருந்தும் மராடியர்களையும், மராட்டிய மாநிலத்தையும் தனிமைப்படுத்தும் ஒரு துர்பாக்கிய நிலையை மட்டுமல்ல சர்வதேச அளவில் வளர்ந்துவரும் பெரு நகரங்களில் புகழ்பெற்றுவரும் மும்பை அந்த வாய்ப்பை இழக்கவேண்டிவரும் . அந்த மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிராக பால்தாக்கரே மட்டுமல்ல வேறு யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில , மத்திய அரசுகள் தயங்கினால் சம்பந்தப்பட்ட மாநில மக்கள் பிற மாநிலங்களுக்கு செல்ல, வசிக்க, பணிபுரிய வேண்டிய வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் , எனவே இறையாண்மை மீது அக்கறை செலுத்திவரும் காங்கிரஸ் அரசு உடனே அவர்களை தேசப்பதுகப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் . 


.









இறந்துபோகும் ஜீவநதிகள் ; நடந்தேறும் மணல் சுரண்டல்

Tuesday, February 2, 2010

         விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாககொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது நாடு , ஆனால் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை இல்லாத நாடு .  கிட்டத்தட்ட 50 நதிகள் சீறிப்பாய்ந்து வளமாக்கிய நேரம் ஒருகாலம்.  சிந்து, கங்கை , பிரம்மா புத்திரா,நர்மத,தபதி, மகாநதி, தாமிரபரணி உள்ளிட்ட 14 பெரிய நதிகளையும் இதர சிறிய நதிகளையும் கொண்டது.  ஜன நாயக நாடு என்பதாலோ என்னவோ நாட்டின் வளங்களை யார் வேண்டுமானாலும் சுரண்டலாம் என்ற எழுதப்படாத விதியை வைத்துக்கொண்டு நாட்டை வளம் கொழிக்கவைத்து எழில்கொஞ்சும் இயற்கை வளங்களால் அன்னியதேசத்தினரை கவர்ந்திழுத்த நதிகளின் நதிநீரை தனியாருக்கு தாரைவார்த்து , சட்டவிதிகளுக்கு மாறாக நதிகளில் மணல் கொள்ளை பல மீட்டர்களுக்கு தோண்டி பல கிராம நகரங்களுக்கு கிடைக்கும் கூட்ட குடிநீர் திட்டத்திற்கு வேட்டுவைத்து  நதிகளை முள்புதர்கள் மண்டி அதன் போக்கை மாற்றி வெள்ளம் ஊருக்குள் சென்றும்,நிலங்களுக்குள் புகுந்து உயிர்,பொருளாதார பேரழிவை ஏற்படுத்துகின்றன.   சரஸ்வதி போன்ற நதிகள் புவிக்குள் ஓடும் நாதிகளாகிப்போனது.  தென்பெண்ணை போன்ற பல நதிகள் அழிவைத்தேடிகொண்டிருக்கின்றது.
             அரசு மணல் குவாரியை ஏற்ற பின்னும் மணல் சுரண்டல் , கொள்ளை தொடருவது தமிழகத்தில் வெட்ககேடானது.
அரசின் நடவடிக்கையும், பொதுமக்கள் போராட்டமும்:
         இன்று இயற்கை வளங்களை மட்டுமல்ல மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களையும்  அரசியல் வாதிகள் , குண்டார்கள் என பலரும் சுரண்டவும் கடத்தவும் செய்கிறார்கள்  இதற்கு மக்கள் ஒன்றாக இணைந்து போராடவும் , எதிர்க்கவும் முன்வரவேண்டும்.  போராட்டங்கள் நிறைந்த உலகில் நமது தேவைகளுக்கும் , நமது வளங்களை பாதுகாப்பதற்கும் போராடவேண்டும்.  ஏனெனில் இயற்கை வளங்களில் தான் நமது பொருளாதாரமும், வாழ்வின் ஆதாரமும் உள்ளது. அரசு நதிகளை மட்டுமல்ல நீர்மூலங்களை பாதுகாக்கவேண்டியது அவசியமும் கடமையும் ஆகும்.  ஏரிகள் தூர்வாரப்படும் , புதிய ஏரிகள் வெட்டப்படு என அறிவித்துவிட்டு  ஏரிகளில் அலுவலகங்கள் , பேருந்துநிலையங்கள் , கல்லூரிகள் என சட்டத்தை மதிக்காமல் அரசே ஏரிகளை ஆக்கிரமித்து செயல்படுவது மானக்கேடு மட்டுமல்ல ஜனநாயக படுகொலை அரசு இத்தகைய செயல்களை கைவிடவேண்டும் .
மத்திய அரசும் நீர்வள ஆணையம்:
       நதிகள் செல்லும் மாநில அரசுகள் நதிகளை எண்ணற்ற அணைகளை கட்டி திருப்பி விடுகின்றனர், இது நதிகள் பாதுகாப்பு சட்டத்திற்கு முரணானது பிறமாநில மக்களுக்கு குடிக்க , விவசாயத்திற்கு தண்ணீர் தர மறுப்பது இந்தியா இறையாண்மையை பதிக்கும்செயல் இது உல் நாட்டு கலவரங்களை தூண்டிவிடும் செயல் .  ஒற்றுமையுள்ள நாட்டில் நீரினால் பிரிவினைகள் ஏற்படுவதை தடுக்க நடுவணரசு நதிகளை தேசமயமாக்கவேண்டும் , அணைகட்டும் மாநில அரசு சட்டப்படி அடுத்த மாநிலத்தின் அதாவது கடைமடை விவசாயிகளின் அரசை அணுகி ஆட்சேபனை இல்லை ஒப்புதல் பெற்று அணைகட்ட அறிவுறுத்தவேண்டும். அப்போதுதான் பிறமாநில மக்கள் உரிமை மட்டுமல்ல நலனும் பாதுகாக்கப்படும் . மத்தியஅரசு முதலில் நதிகளை தேசமயமாக்கி, அனைத்து நதிகளையும் தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு மணல்கொல்லைகள் தடுக்கப்பட்டாலே நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும்.  அனைத்து நதிகளும் அனைத்து இந்தியருக்கும் சொந்தம் என்ற நிலை ஏற்பட்டாலே ஒக்கேனக்கல் திட்டங்கள் எளிதில் நிறைவேறும்.

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger