மரபுவழி விவசாயத்தை அழிக்கவேண்டாம் -ரமேஷ்

Thursday, February 18, 2010





           இந்திய அரசு சுற்றுசூழல் துறை மரபணுமாற்றம் செய்யப்பட பயிர்களை அனுமதிக்க சம்மதம் தெரிவித்து நெல்,பருத்தி பயிர்களை சோதனை முறையில் இந்திய வயல்வெளிகளில் வளர்ந்தநேரத்தில் அதன் தீமைகள் குறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் ,இயற்கை  விவசாய அறிவியலார்கள் இந்த செயலுக்கு காரணமான அமெரிக்காவின் மான்சாண்டோ,மகிக்கோ நிறுவனங்களுக்கு எதிராகவும் , மரபணு மாற்றம் செய்தவிதைகளை அனுமதிக்கக்கூடாது என இந்திய மற்றும் மாநிலரசுகளை வலியுறுத்தி போராட்டம்,ஆர்ப்பாட்டம்,பேரணிகளை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர் .
மரபணுமாற்றம் செய்தவிதைகளால் விவசாயிகளின் பாதிப்புகள்:
             மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் ,பருத்திவிதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்த விவசாயிகள் இயற்கையாக மண்ணில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து மண்ணின் வளத்தை கெடுத்தும், குறைவான விளைச்சளைமட்டுமே தந்தது , இந்த விதைகளை பயன்படுத்தி விவசாயத்தி செய்யும் அடுத்தடுத்த முறைகளில் அதிக நச்சு தன்மை வாய்ந்த பூச்சுகொல்லிகளை விவசாயிகள் வாங்க வேண்டியிருந்தது .
              மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்த நிறுவனங்கள் இந்த விதைகள் பூச்சிகளால் பாதிக்கப்படாது மாறாக தண்டு புழு ,காய்புழு இவைகளை அழித்து நல்ல கூடுதல் மகசூல் கிடைக்கும் என உறுதி தந்தபின்னர் பயிரில் விழும் பூச்சிகள் பற்றிய புகாருக்கு பூச்சிகொல்லிகளை பரிந்துரைத்தனர் , விதைகளுக்கு அதிகவிலை இவைகளால் தாங்கமுடியாத கடன்சுமையால் மூழ்கிப்போன விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் நாடறிந்தது .
              நமது நாட்டில் கிட்டத்தட்ட நூறுவகையானநெல்வகைகள் , ஏராளமான கத்தரிவகைகள் இருந்தது , இதனை பாதுகாக்க வேண்டிய அரசுகள் , இருக்கின்ற பாரம்பரிய நெல்,கத்தரி விதைகளை பாதுகாக்க , விளைவிக்க ஊக்க படுத்தாமல் விதைகள் காப்புரிமை  சட்டம் இயற்றி நாட்டுமக்களை அந்நிய நட்டு நிறுவனங்களிடம் கையேந்தவைக்க அரசின் அதிகார வர்க்க விஞ்சானிகளின் கருத்தைஏற்றுள்ளது  ,மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி ; இது ஜனநாயகத்தின் மிகப்பெரிய படுகொலை.
விதை காப்புரிமை சட்டமும், மரபனுமாற்றமும்: 
                 விதை காப்புரிமை சட்டத்தின்படி காப்புரிமை பெறாத நபர் விதைகள் வைத்திருத்தல் சட்டவிரோதம் , விதைகளை கட்டாயமாக நிறுவனகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும்.இந்த விதைகளால் மண்வளம் நாளுக்குநாள் குறைந்துகொண்டேபோகும் .  பெரும்பாலும் தாவரங்களில் தன்மகரந்த  சேர்க்கை ,அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுவது இயற்கை , அயல்மகறந்த சேர்க்கையால் நமது பாரம்பரிய விதைகள் பயிர்செய்யப்பட்ட நாற்றாங்காலில் உள்ள பயிர்களில் மரபணு மாற்றம்  செய்யப்பட்ட விதைகள் கலப்படம் வர நேர்ந்தால் விதைகள் காப்புரிமை சட்டத்தால் இந்திய விவசாயிகள் கைது செய்யப்படுவது நிகழும். அயல் மகரந்த சேர்க்கை நிகழ்வால் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்பட மலட்டு மரபணு மாற்றம்செய்யப்பட்ட விதைகள் காரணமாக இருக்கும்.
உணவு பொருள் பற்றாக்குறை :
        நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க பசுமைப்புரட்சி என்ற பெயரில் நவீன எந்திரங்களையும் , பூச்சிகொல்லிகளையும் கொண்டுவந்த பின்பும் வறுமையும் ,சாவும், எலிக்கறி உண்பதும் நிகழ்வதை தடுக்கவோ ,தீர்க்கவோ முடியவில்லை.  உணவுப்பொருள் தட்டுப்பாடு இல்லை போதிய அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு உள்ளது .  என்று சொல்லும் அரசு இப்போது பற்றாக்குறையை போக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் நாட்டிற்கு அவசியம் என விவசாய துறை அமைச்சர் கூறுவது தவறு.  உணவுபொருட்கள் தட்டுப்போடு  நிலவுதோ?,கையிருப்பு போதிய அளவு உள்ளதோ ? இந்த மாறுபட்ட விளக்கங்களால் மட்டும் வறுமை ஒழியாது.  அத்தியாவசிய பொருட்களின் முறைகேடு,பதுக்கல்,கடத்தல் இவைகளை முறையாக அறவே ஒழிப்பதுதான் வறுமையை ஒழிக்க ஒரே வழி , எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வழி செய்ய அரசு வெட்கப்படக்கூடாது , அதுவரை வறுமை ஒழியாது.
          மரபு வழிவிதைகளும், இயற்கை விவசாயமும்தான் இந்த நாட்டை காக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் நன்மையேதும் கிடைக்காது என்பதே உண்மை.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger