ஊழல் ஒழிய வேண்டும்

Thursday, June 16, 2011


இந்தியாவில் ஊழலற்ற நிர்வாகம் சிறப்பாக நடைபெறுகிறது என அமெரிக்க அதிபர் பரக் அதிபர் ஒபாமா இந்தியாவின் சிறப்புகளை வரிசைப்படுத்தி பாடி மன்னிக்கவும் பேசிவிட்டு சென்றவுடன்தான் இந்தியாவில்தான் உலக ஊழலின் ஊற்றுக்கண் உள்ளது என நிருபிக்கின்றவகையில் அடுத்தடுத்து காமன்விளையட்டு துறையில் ஊழல், மும்பை ஆர்தர்ஸ் வீட்டு ஊழல் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற வகையில் உலகையே உலுக்குகின்ற 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என இந்தியா நேர்மையின் சுயரூபம் உலக நாடுகளுக்கு வெளிச்சம் போட்டு கட்டவேண்டிய காலம் வந்தது.
இதுவரை சுயநலம் காரணமாக நமக்கென்ன என இருந்த பொதுமக்கள் பொங்கி எழுந்து ஊழலுக்கான  எதிரான போராட்டம் நாடெங்கிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
அன்று சுவாமி விவேகானந்தா, அவரது குரு ராமகிருஷ்ண உட்பட எராளமான நல்லவர்கள் இருந்த இங்குதான் கால ஓட்டம் கயவர்களை அரசியலிலும் ஆன்மிகத்திலும் வரவழைத்தது. நீண்ட நெடிய காலத்திற்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்டுள்ளு புரட்சி இங்கு மக்களுக்கு ஒரு நம்பிக்கையும் கயவர்களுக்கு ஒரு கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது, இது இந்திய நலனுக்கு வலு சேர்த்தல் நல்லத்துதன் போருத்திருது பார்க்கவேண்டும்.



 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger