Sunday, January 13, 2013

              காசியிலும் வீசம் பெரிது மனிமுக்தாறு துர்நாற்றம் 
காசியிலும் வீசம் ஜாஸ்தி என்கிறார்கள் விருத்தாசலம் மனிமுக்தாற்றின் புனிதத்தை.காரணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மணிமுத்தாற்றின் கரையில் முனிவர் ஒருவரால் கட்டப்பட்ட பழமலைநாதர் கோவில். பழங்கலத்தில் விருத்தாசலத்தை திருமுதுகுன்றம் எனவும், இந்த கோவிலை பழமலை நாதர் கோவில் எனவும், மூலவரை பழமலை நாதர் எனவும் அழைத்துள்ளனர்.
காலப்போக்கில் பழமலை நாதர் என்ற சிவபெருமான் பெயரை விருத்தகிரினாதர் எனவும்,  திருமுதுகுன்றம் என்ற நகரின் பெயர்கள்  விருத்தச்சலம் எனவும் சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டுவருகிறது.புதிதாக திருமணமானவர்கள் பாளையம் விட்டு தங்கள் வாழ்க்கையை இங்கிருந்துதான் துவங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.மேலும், இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் மாநிலத்தின் பல இடங்களிலிருந்து இங்குதான் வருகின்றனர்.மனிமுக்தாற்றில் குளித்து, பழமலைநாதரை வணங்கினால் பாவங்கள் தொலைந்து புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளகுறிச்சி வட்டம், கல்ராயன்மலையில் உற்பத்தியாகின்ற மணி, முக்தா என்ற இரு நதிகள்; கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வழியாக வங்கக்கடலில் மணிமுக்தா என்ற புண்ணிய நதியாக கலக்கிறது.
நவ நாகரீக காலத்திற்கு முன் இந்த நதி உண்மையிலேயே புனிதமாகத்தான் இருந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த நதியில் விருத்தச்சலத்தின் கழிவு நீரை கலக்கவிட்டுள்ளனர். மழைக்காலத்தை தவிர மற்ற காலங்களில் விடப்படும் கழிவு நீர் தேங்கி நின்று , பன்றிகள் உழன்றுகொண்டுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து துணிகளை துவைத்து, மீன்களை பிடித்து ஆற்றோடு விளையாடி மகிழ்ந்துள்ளனர்.ஆனால், தற்போது இந்த நதியில் குளித்தால் புண்ணியம் சேர்கிறதோ இல்லையோ கண்டிப்பாக வியாதிகள் வந்து சாவது நிச்சயம். மனிமுக்தாறு விருத்தாசலம் நகரில் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது. நகராட்சி பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுநீர் என கால் நனைக்கவே அருவருப்பாக மாறியுள்ளது. புனிதம் போற்றும் நதியின் நிலை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் திடக்கழிவு மற்றும் கழிவு நீர் மேலாண்மையால் மட்டுமே காப்பாற்றப்படும்.


                                      குப்பையாகிப்போன தமிழன் பண்டிகை

              தமிழர்கள் கொண்டாடும் முக்கிய திருநாள் பொங்கல் பண்டிகை.மார்கழி மாதத்தின் கடைசி நாளில் தொடங்கும் போகிப் பண்டிகை முதல் பெரும்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், ஆற்றுத் திருநாள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். போகிப்பண்டிகையன்று பழைய பாய், துணிகளை எரித்து அதிகாலையில் சுற்றிவந்து கொண்டடுவார்கள்.
 நாளடைவில் போகிப்பண்டிகையில் பிளாஸ்டிக் பேப்பர்கள், பைகள், பாலியஸ்டர் இழைகளாலான துணிகள், டயர்களை எரித்து சுற்றுச் சூழலையும், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், வீடுகள் தோறும் எரியும் குப்பைகளால் கிராமங்கள், நகரங்கள் என நச்சு வாயுக்கள் நிறைந்த புகை மண்டலமாக காட்சியளித்தது. கடந்த மாதம் உலகம் அழியபோவதாக ஊடகங்கள் செய்தியை வெளியிட இந்திய மட்டுமல்ல உலக நாடுகளே பீதியில் உறைந்திருந்தன. அமெரிக்க போன்ற வல்லரசுகளே அச்சமடைந்தன.
              கடந்த சில ஆண்டுகளாக ஒரே காலகட்டத்தில் ஒரு நாட்டில் கடுமையான வறட்சி ஒரு நாட்டில் அடை மழை நிலா நடுக்கம் சுனாமி சூறாவளி என் இயற்கை பேரிடர்களால் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பேரழிவுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இயற்கைக் கெதிராக போராட மனிதனால்  முடியாது என்பதை கடந்த காலத்தில் இயற்கை ஆணி அறைந்தாற்போல் உணர்த்தியுள்ளது. ஆனால், மனிதன் அதை ஏற்றுக்கொண்டதாக இல்லை என்பது போகிப்பண்டிகை கொண்டாட்டத்தில் தெரிந்தது.
              கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது, வைத்திருப்பது, விற்பனை செய்வது குற்றமாகும் என 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் கடந்த 1ம் தேதி முதல் அறிவித்தது. ஆனால், இந்த சட்டத்தினையோ அல்லது சுற்றுச்சூழல் சடத்தினையோ அதிகாரிகள் அமல் படுத்தாமல் வேடிக்கை பார்த்தனர். அரசின் பல சட்டங்கள் இப்படி சரியாக அமல்படுத்தமலும் கண்காணிக்காமலும் அலட்சியல் கட்டுவதால் பேரிடர்களின் பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்தனை பாடங்கள் இயற்கை கற்பித்தலும் ஏற்றுக்கொள்வதை இல்லை என்பதை ஆணித்தரமாக உள்ளனர்.
              இதுவரை இயற்கை பேரிடர்களின் பாதிப்புகளுக்கு நிவாரணம் தேடும் நிலை மனித குலத்திற்குள்ளது;. இனி வரும் பேரிடர்களை எதிர்கொள்ளவோ நிவாரணம் தேட முடியும் என்பது கேள்விக்குறிதான்?    

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger