Sunday, January 13, 2013

              காசியிலும் வீசம் பெரிது மனிமுக்தாறு துர்நாற்றம் 
காசியிலும் வீசம் ஜாஸ்தி என்கிறார்கள் விருத்தாசலம் மனிமுக்தாற்றின் புனிதத்தை.காரணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மணிமுத்தாற்றின் கரையில் முனிவர் ஒருவரால் கட்டப்பட்ட பழமலைநாதர் கோவில். பழங்கலத்தில் விருத்தாசலத்தை திருமுதுகுன்றம் எனவும், இந்த கோவிலை பழமலை நாதர் கோவில் எனவும், மூலவரை பழமலை நாதர் எனவும் அழைத்துள்ளனர்.
காலப்போக்கில் பழமலை நாதர் என்ற சிவபெருமான் பெயரை விருத்தகிரினாதர் எனவும்,  திருமுதுகுன்றம் என்ற நகரின் பெயர்கள்  விருத்தச்சலம் எனவும் சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டுவருகிறது.புதிதாக திருமணமானவர்கள் பாளையம் விட்டு தங்கள் வாழ்க்கையை இங்கிருந்துதான் துவங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.மேலும், இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் மாநிலத்தின் பல இடங்களிலிருந்து இங்குதான் வருகின்றனர்.மனிமுக்தாற்றில் குளித்து, பழமலைநாதரை வணங்கினால் பாவங்கள் தொலைந்து புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளகுறிச்சி வட்டம், கல்ராயன்மலையில் உற்பத்தியாகின்ற மணி, முக்தா என்ற இரு நதிகள்; கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வழியாக வங்கக்கடலில் மணிமுக்தா என்ற புண்ணிய நதியாக கலக்கிறது.
நவ நாகரீக காலத்திற்கு முன் இந்த நதி உண்மையிலேயே புனிதமாகத்தான் இருந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த நதியில் விருத்தச்சலத்தின் கழிவு நீரை கலக்கவிட்டுள்ளனர். மழைக்காலத்தை தவிர மற்ற காலங்களில் விடப்படும் கழிவு நீர் தேங்கி நின்று , பன்றிகள் உழன்றுகொண்டுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து துணிகளை துவைத்து, மீன்களை பிடித்து ஆற்றோடு விளையாடி மகிழ்ந்துள்ளனர்.ஆனால், தற்போது இந்த நதியில் குளித்தால் புண்ணியம் சேர்கிறதோ இல்லையோ கண்டிப்பாக வியாதிகள் வந்து சாவது நிச்சயம். மனிமுக்தாறு விருத்தாசலம் நகரில் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது. நகராட்சி பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுநீர் என கால் நனைக்கவே அருவருப்பாக மாறியுள்ளது. புனிதம் போற்றும் நதியின் நிலை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் திடக்கழிவு மற்றும் கழிவு நீர் மேலாண்மையால் மட்டுமே காப்பாற்றப்படும்.


0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger