Monday, August 9, 2010
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய தீர்மானங்களான வறுமை ஒழிப்பு ,ஊழல் ஒழிப்பு , புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட பல நல்ல பல திட்டங்களுடன் வெளிப்படையான நிர்வாகம் ,தகவல் அறியும் சட்டம் என நல்லாட்சி தருவதற்கான தோரணையுடன் தொடங்கியது. இதில் சுகாதார அமைச்சர் மருத்துவரின் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் மூலம் நூறு சதம் மருத்துவமனைகளில் பிரசவம் , தாய் சேய் நலன் என தொடங்கி பதினான்கு மாநிலங்களில் அவசரவூர்த்தி மருத்துவர் , செவிளியர்களுடன் விபத்து நடந்த இடத்திலிருந்தே 108 தொலைபேசியில் அழைத்தால் பத்து நிமிடத்தில் விரைந்து வந்து நிகழ்விடத்திளிருந்து நோயாளியை மீட்டு சிகிச்சையை தொடங்கி அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசேர்த்து நிலைய மருத்துவரிடம் ஒப்பம்பெற்று திரும்புவது , மருத்துவம் படித்து இறுதியாக ஓராண்டு கிராமத்தில் பணிபுரிய வேண்டும் என தான் பதவியேற்ற நாளில் உறுதியேற்ற தைபோன்று முதல் குடிமகன் பெரும் சுகாதார வசதியை சாதாரண சலவைதொழிலாளியும்,கூளிக்காரவிவசாயியும் பெரும் வண்ணம் கிராமப்புற சுகாதார நிலையங்களை சிறிய மருத்துவமனைகளைபோன்று நவீன வசதிகொண்ட நிலையங்களாகவும் வட்டாரத்திற்கு ஒரு 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளை உருவாக்கினார். இதில் அரசியல் காழ்புனர்ச்சிகளால் மருத்துவமாணவர்கள் தூண்டப்பட்டு போராட்டத்தை நடத்தி ஓராண்டுகால கிராமப்புற வேலை கனவாகப்போனதேதவிர துணை சுகாதார செவிலியர்கள், பிரசவிக்கும் தாய்மார்கள் சிரமமின்றி குளிக்க ஷவர்வசதிகள் , நோயாளிகள் அமர இருக்கைகள் என பிடல் காஸ்ட்ரோ வின் க்யுபா போன்று குறுகிய காலத்தில் 24 மணிநேர பிரசவவிடுதிகளாக கிராம சுகாதார நிலையங்கள் மாறிவிட்டது மட்டுமே ஒருசாதனை.புகையிலை ஒழிப்பு , எய்ட்ஸ் ,போலியோ ஒழிப்பு போன்ற சுகாதார இயக்கம் மட்டுமே தவிர வேறொன்றும் சொல்லவதற்கில்லை.
அடுத்து வந்த முறையில் திறமைவைந்த நபர்கள் யாருமே இல்லாததால் ஊழல்,தீவிரவாதம், விலைவாசி உயர்வு என நாட்டின் பிரச்சினைகள் நாளுக்க் நாள் பெருகிக்கொண்டே போகிறதே தவிர இதை தீர்க்க அரசு எந்திரம் செயலற்றுபோய்விட்டது.

0 பின்னூட்டம்:
Post a Comment