வெறி நாய்களை சுட்டு தள்ளுங்கள்

Monday, September 28, 2009


இன்று உலக வெறிநோய் தினம் விலங்குகள் மனிதர்களை கடிப்பதால் ஏற்படும் ஒரு கொடிய நோய் .  குறிப்பாக நாய் கடிப்பதால் இந்த நோய் தாக்குகிறது.  வெறி நோய் மனிதனின் மூளையும் , நரம்புமண்டலமும் தாக்கப்பட்டு கட்டாய மரணத்தை ஏற்படுத்திவிடுகிறது . உலகம் முழுவதும் ஆண்டுக்கு அறுபதாயிரம் பேர் வெறி நோயினால் சாகிறார்கள் .இதில் பாதிபேர் பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளாகவே உள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.   தற்பொழுது தமிழ்கத்திலும், புதுவையிலும் நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்து விடுவது நடைமுறைபடுதப்பட்டுள்ளது.குடும்பக்கட்டுப்பாடு செய்துவிடும் நாய்களை வெவ்வேறு எல்லைகளில் கொண்டுபோய்விடுவதால் புதிய நாய்களை ஏற்கனவே உள்ள நாய்கள் கடித்து குதரிவிடுகின்றன , இதனால் குடும்பக்கட்டுப்பாடு செய்த நாய்கள் வெறிபிடித்து மனிதர்களையும் ஆடுமாடுகளையும் கடிதுவிடுகின்றன. கிராமங்களிலும் நகரங்களிலும்  வெறிபிடித்து திரியும் நாய்களை பிடித்து வெறி நோய் தடுப்பு மருந்துகளை ஏற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மோசமான குணப்படுத்தமுடியாத நாய்கள்  அனைத்தையும் சுட்டு தள்ள வேண்டும்.  இதைதான் மகாத்மா அவர்கள் சுயநினைவின்றி துன்பப்படும் உயிர்களை கண்டு வேதனைபடுவதைவிட கொன்றுவிடுவதே மேல் என்று கூறியதை நினைவு கூறுகிறேன

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger