நம்பிக்கைக்கு உரிய நாடல்ல அமரிக்கா

Friday, November 27, 2009

            மும்பை நகரம் சர்வதேச நகரமாக முன்னேறி கொண்டிருக்கின்ற வேளையில் அதனை தடுக்கும் விதமாகவோ அல்லது இந்தியாவின் மிகமுக்கிய மாநகரமான மாநில தலைநகரையோ அழிக்கவேனுமேனவோ எண்ணி மிகக்கொடூரமான தாக்குதல்களை நடத்தி மும்பை மாநில தீவிரவாத எதிர்ப்பு படை தலைவரான ஹேமந்த் கர்கர் உள்ளிட்ட தேசப்பதுகாப்புபடை அதிகாரிகளும் அப்பாவி பொதுமக்களும்  சுட்டுத்தள்ளப்பட்டனர் .  உலகமே அதிர்வுறும் இந்த நிகழ்வு நடைபெற்று ஓராண்டு நிறைவற்று விட்ட நிலையில் இன்றுவரை எந்த விதமான நடவடிக்கையுமே எடுக்காமல் இருக்கின்ற நிலையில் இந்தியா அரசு தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க விருப்பமில்லையா அல்லது நடவடிக்கை எடுக்க போதுமான துணிச்சல் இல்லையா என்பதுதான் மக்களின் கேள்வி. அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி.கிளிண்டன் இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்திருந்தார் அந்த உணர்வு இந்தியா மக்களின் அமெரிக்கா மீதான நம்பிக்கையை அதிகரித்தது ஆனால் இன்று ஓராண்டை நிறைவு செய்தும் ஏதும் செய்யாதது வழக்கமாக அமெரிக்கா இந்தியாவை திருப்திபடுத்த சொல்லும் ஏமாற்று வேலையாகவே தெரிகிறது இனியும் அமெரிக்காவை நம்பி இந்தியா தனது தேச நலனை குழிதோண்டி புதைக்கக்கூடாது இனியும் தாமதிக்காமல் தீவிரவாதத்திர்க் கெதிரான வேரறுக்கும் பணிகளை துரிதப்படுதவேண்டும்.  இந்தியமண்ணில் தீவிரவாததிர்க் கெதிரான துணிச்சல் வரும் நாள் தான் இந்தியா உலகின் அமைதி பூங்காவாகும்  நாள். இந்தியமண்ணில் தீவிரவாதத்தின் தாக்குதலில் உயிர் நீத்த உடன்பிறப்புகளுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

நாளை வேலுபிரபாகரன் மாவீரர் தின உரையாற்றுகிறார்?

Thursday, November 26, 2009


           இந்தியா ஜனநாயக தேசத்தின் அண்டை தேசமும் பௌத்த சமய தேசமான இலங்கை மண்ணில் சிங்களர்களும் , தமிழர்களும் மண்ணின் மைந்தர்கள் மன்னர் ஆட்சிக்கு பிறகு ஆங்கில ஆதிக்கத்திற்கு பின் விடுதலையான இலங்கை பிரதேசம் பெரும்பான்மையான சிங்கலர்களைமட்டும் முதன்மைப்படுத்தி , கல்வி,வேலைவாய்ப்பு,அதிகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மறுத்து இனவெறி அரசாக செயல்பட்டதால் கல்வி , வேலைவாய்ப்பு , அதிகார பகிர்வு உள்ளிட்டட தேவைகளுக்காக சொந்தமண்ணின் அரசு இயந்திரத்திற்கெதிராக போராடி பயனளிக்காததால் தமிழ்மக்களின் போராட்டம் தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கம் (liberation tiger tamil ealem - LTTE) என்ற இயக்கத்தை ஏற்படுத்தி போராடினார் தன மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தாங்களே ஏற்படுத்தி கொடுத்து போராடிவந்த முதல் போராட்ட இயக்கம் இதுதான் என்பது உலக வரலாறு. இவர்களின் போராட்டம் கட ந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது இடையே இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இருந்தபோது நார்வே நாட்டின் உதவியுடன் சிலகாலம் போர்நிறுத்த நடவடிக்கை அமலில் இருந்தது .  இதனை தொடர்ந்து ரணில் விக்கரமசிங்கே அரசை அந்நாட்டு அதிபர் பண்டாரநாயக்க குமாரதுங்க தனது அதிகாரத்தை பயன்படுத்தி கலைத்துவிட்டார். அதனை தொடர்ந்து நடந்துவந்த போர் ராஜபக்சே அரசு போர்விதிமுறை மீறல், இந்தியா,பாகிஸ்தான்,சீனா போன்ற அண்டை நாடுகளின் ஆயுத , பூகோள வரைபடம் ,இராணுவவீரர்களை அனுப்பியும்,ராடார் உள்ளிட்ட உழவு கருவிகள் வழங்கியும்  அவர்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி அப்பாவிமக்களின் உயிர்களையும் , உடமைகளையும் அழித்து எஞ்சிய மக்களை கம்பிவேளிக்குள் அடைத்து திறந்தவெளியில் கொட்டும் மழை,புயல் என அப்பட்டமான மனிதஉரிமை மீறலை அமெரிக்கா , ஜெர்மனி , பிரிட்டன்,ஐக்கிய நாடுகள் சபை ஆகியவைகள் எதிர்த்தும், கண்டித்தும் இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனங்களை (அப்பாவி இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொன்றும், கானணி பெண்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்தும் உலக வரலாற்றில் மனிதகுலம் இதுவரை செய்யாத அட்டுழியங்களை அரங்கேற்றி தனது வெறித்தனத்தை தீர்த்துக்கொண்டதுதான்  புத்தபூமியின் வேட்கக்கேடான அரசின் நிலைமை.
                மீதமுள்ளவர்களை காப்பாற்றவும்,எப்போதும் விடுதலை போராட்டங்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை எனவே நிச்சயமான வெற்றியும் ,விடுதலையும் என்றாவது ஒருநாள் நடந்தாகவேண்டியது நியதி.  இந்த போராட்டம் இன துரோகிகள் உடனிருந்தவர்களாலும்,தாய் தமிழர்கள் என எண்ணிய தமிழக அரசியல் தலைவர்கள் பதவிஆசையால் உதவியை தீர்க்கமாக குறித்தகாலத்தில்  செய்யாதது என அதிகார போதைக்கு ஆட்பட்டவர்களால் சந்தித்த மிகப்பெரிய சரிவுதான்.
               இந்த நிலையில் இந்த விடுதலை இயக்கத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும் நவ்வம்பர் 27 நாளில் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் தினத்தில் விடுதலை இயக்கத்தின் தலைவர் வெலுபிள்ளை.பிரபாகரன் வீர உரை நிகழ்த்துவது வழக்கம் , இந்த நிலையில் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் நாளை யார் மாவீரர் உரை நிகழ்த்துவது என்ற எதிர்பார்ப்பையும் , அந்த இயக்கம் சார்பில்  விடுதலை போர் நாளை முதல் தொடங்கும் என உள்ளூர் தமிழ்மக்களுக்கும், புலம்பெயர் தமிழ்மக்களுக்கும் செய்தியை அதிகாரபூரவமாக வெளியிட்டுள்ளதாக நாளேடுகளில் வெளிவந்துள்ளது.
                 இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் இய்யக்கத்தின் தலைவரும் , ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளியான பிரபாகரன் இறந்த பின்னர் அந்த இறந்த நபர் பிரபாகரன்தான் என இலங்கை தரப்பு இறப்பு சான்றிதழ் இதுவரை இந்தியா அரசிடம் வழங்கவில்லை. பிரபாகரன் இறப்பு உறுதி செய்யப்படாமல் அவ் வழக்கு இதுவரை முடிவடையவில்லை. தமிழர் தேசிய இய்யகத்  தலைவர் பழ நெடுமாறன் , வை.கோ.போன்றவர்கள் அடித்து கூறும் தகவல்களால் நிச்சயம் பிரபாகரன் உயிருடன் இருப்பதை உறுதியாக நம்பலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது
ஆனால் நாளை மாவீரர் தினத்தில்  உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கும் பிரபாகரன் வீர உரை ஆற்றுவார் என்பது நாளை தெரியவரும் நம்பிக்கை வைப்போம். இருளின் முடிவில் ஒளி கிடைக்கும் ,உண்மையான  போராட்டத்தின் முடிவில் வெற்றி கிடைக்கும் .

.

ஆண்மையை கேள்விக்குறியாக்கும் ஆண்மீகத்தலம்: எச்சரிக்கை.

Monday, November 23, 2009

  தமிழக ஆன்மீக தளங்களில் புகழ்பெற்ற சிவாலய மலைவளம் வரும் இந்தியா அளவில் பக்தர்களை கொண்டுள்ளதுதான்  திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம்.  இந்த ஆலயத்தை சுற்றி பதினான்கு  கிலோமீட்டர்  தொலைவில்  மலைவலப்பாதை  உள்ளது .  இந்தப்பதையை சுற்றிலும் ஒவ்வொருமாதமும் பக்தர்கள் வளம் வருவதுதான் இந்த ஆழத்தின் சிறப்பு இந்த மலை வலத்தின் பொது மலையில் உள்ள ஆயிரக்கணக்கான இயற்கை மூலிகை தன்மைகொண்ட காற்று தம்மீது படுவதால் தம்முடைய நோயல்கள் குனமாகின்றது, உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கின்றது .  மேலும் கடவுள் அனுகிரகத்தையும் நாடி தமிழகத்திளுமிருந்து மட்டுமல்ல  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இலச்சக்கணக்கான மக்கள்  வந்து செல்கின்றனர். இந்த மலை வலப்பாதையில் ஆனாய்பிறந்தான், அடி அண்ணாமலை , வேங்கிக்கால்,அத்தியந்தால் ஊராட்சிகளும் , திருவண்ணாமலை நகராட்சியும் இருக்கின்றது.  ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான மக்கள் போட்டுசெல்லும் பிளாஸ்டிக் குப்பைகள் ,நகராட்சிகுப்பைகள் என நூற்றுக்கணக்கான மெற்றிக் டன் குப்பைகளை தரம் பிரிக்காமல் கிரிவல்;அப்பதையிலும் , ஈசானிய லிங்க ஆலயத்தின் அருகேயுள்ள ஈசன்யத்தில் கொட்டி எரித்துவிடுகின்றனர்.
இதனால் டயாக்சின் விழ வாயுவும் , கரியமில வாயுவும் உற்பத்தியாகிறது.  இந்த குப்பை எரிக்கும் இடம் தி..மலை பேருந்து நிலையத்தின் அருகேயும் , வேலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்திலும் உள்ளதால் மலை வளம் வருகின்ற பக்தர்களுக்கு நன்மை பயப்பதைக் காட்டிலும் பெரிய அளவில்  உயிர் கொல்லி நோய்கள் வந்து மிகபெரிய கேடுகள் விளைவிக்கின்றன.
தடை செய்யப்பட்ட டயாக்சின் வாயுவால் ஆண்மைக்குறைவு,பெண்தன்மை குறைவு , மலட்டுத்தன்மை , குளோரின் சம்பந்தப்பட்ட நோய்கள் , மயிர்ச்சருமா நோய்கள், நரம்பு மண்டலம் பாதிப்புக்கள் , கொழுப்புசத்து குறைபட்டு நோய்கள், தோல் நிறம் பற்றிய நோய்கள் , பிறவி ஊனங்கள் , உடல் உறவில் குறைந்த நாட்டம் உள்ளிட்ட ஏராளமான உயிர் கொல்லி நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கரியமில வாயுவால் ஓசோன்  மண்டலம் பாதிக்கப்படுவதால் புவி வெப்பமடைதல் , பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்தல், சூரியனின் அதிகப்படியான புற ஊதாக்கதிர்களின்
தாக்கத்தால் புவியில் உள்ள பல்லுயிர்கள் பாதிப்புகள் , மனிதர்களுக்கு தோல்நோய்கள்
உள்ளிட்ட புதியவகை நோய்கள் ஏற்பட்டு மிகப்பெர்யா அழிவை உண்டாக்குகிறது.
திருவண்ணாமலை தீபத்திருவிழா வருடாவருடம் கார்த்திகை மாதம் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இதில் பல லச்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபாட்டு மலை வளம் வருவது சிறப்பு , இந்த நிகழ்வு வரும் டிசம்பர் முதல் தேதியில் நடைபெற உள்ளது  அந்த தினத்தில் இந்த குப்பைகள் எரிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், திருவண்ணாமலை நகராட்சி திடக்கழிவுகளை தரம் பிரித்து இயற்கை உரம் தரித்து நகராட்சிக்கு வருமானத்தை அதிகரிக்கவும், அழிந்து வரும் மனித வளத்தை காத்திடவும் நிரந்தர தீர்வு காண வழிவகை  செய்தால் மட்டுமே திருவண்ணாமலை ஆண்மீகத்தளம் இல்லையேல் ஆண்மை அழிக்கும் தளமாகும் , இதுகுறித்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஒருவிழிப்புனர்வுக்க்காகமட்டும் இல்லை ஆன்மீகத்திற்கு எப்போதும் வரலாற்றில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே நம் நோக்கம்.



சுத்தமான புதுவை , பசுமையான புதுவை :குப்பை புதுவை

         புதுவை யூனியன் பிரதேசம் இந்தியாவில் உள்ள ஏழு யூனியன் பிரதேசங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகம் போன்று அதிக மக்கள் தொகை , அதிக இடப்பரப்பு இல்லாததால் நிர்வாகம் செய்வதற்கு நல்ல வசதியாக இருந்துவந்தது.  கடந்த முறை முதல்வராக இருந்த ரங்கசாமி அரசுக்கு நெருக்கடிகொடுத்த வைத்தியலிங்கம் இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதலால் அரசு அதிகாரிகள் அதிகார தோரணையுடன் செயல்படதொடங்கிவிட்டனர். புதுவை அரசின் தூய்மையான புதுவை,பசுமையான புதுவை என்ற கொள்கையை அமல்படுத்த முனைந்ததால், பொதுமக்களின் கோரிக்கைகள், தொண்டுநிறுவனங்கள் வேண்டுகோளுக்கிணங்க கடந்த ஜூன் மாதம் ஒரு அரசாணையை புதுவை அரசு கொண்டுவந்தது (G.O.MS.NO.9\2009, ENVIT.DT.4.6.2009) .  இந்த சட்டம் 1986\5 (CENTRAL ACT 29 OF 1986) ஐ  நடைமுறைப்படுத்த புதுவை அரசு சுற்றுச்சூழல் சட்டத்தை கொண்டுவந்து கடந்த ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது , பிளாஸ்டிக் பண முதலைகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த சுற்றுச்சூழல் சட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  புதுவை அரசின் ஆளுகை குறுகிய பரப்பளவு என்பதால் நிர்வாகிப்பதற்கு வசதிதான் அதன் மக்கள்தொகைக்கு நாள்தோறும் உற்பத்தியாகும் நூற்றுக்கணக்கான மெட்ரிக் டன் குப்பைகளை வில்லியனூர் புறவழிசாலை ஓரம் எரித்து அப்பாகுதிமாக்கலுக்கும், அவழியே பயணம் செய்யும் பயணிகளுக்கும் பல்வேறு வகையான உயிர்கொல்லி நோய்களையும் , சூற்றுசூழளையும் கெடுக்கின்றனர், மேலும் புதுவை நகரில் உற்பத்தியாகும் குப்பைகளை சேகரித்து கடலூர் எல்லையிலும், விழப்புரம் மாவட்ட எல்லையிலும் கொட்டிவிட்டு வந்துவிடுகின்றனர், இதனால் அம்மாவட்ட மக்கள் போராட்டம், சாலைமறியல் என கொட்டிய குப்பைகளை மீண்டும் ஏற்றி அனுப்பிய சம்பவங்கள் நடந்துள்ளது.
             இதற்கு அந்த சுகாதார அமைச்சரான நமவச்சிவாயத்திடம்  கேட்டால் 49 கோடி ரூபாயில் உரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது என மழுப்புகிறார்.  அருமையான சட்டம் பிளாஸ்டிக் உற்பத்திக்கும் , விற்பனைக்கும் தடைவிதித்து இயற்கை கைவினைபோருட்களை ஊக்குவித்தாலே ஏராளமான மக்களுக்கும் வேலைகிடைக்கும் பசுமையான புதுவை, சுத்தமான புதுவை கனவு நனவாகும்.  மேலும் இயற்கை உரம் தரித்தாலே உரம் தட்டுப்பாடு நீங்கி, உரம் விற்பனை மூலம் அரசுக்கும் , பஞ்சாயத்திற்கும் நல்ல வருவாய் கிடைக்கும் , சுற்றுச்சூழல் கெடுவது தடுக்கப்படும். 
அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை சிறிதும் தாமதிக்காமல் உடனே நடைமுரைப்படுதினால் புதுவையில் உள்ள நகர கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு வருவாய் கிடைக்கும், குப்பைகளை எரிப்பதால் மனிதவளம் அழிக்கப்படுவது தடுக்கப்படும்,  அப்போதுதான் சுத்தமான புதுவை , பசுமையான புதுவை சாத்தியமாகும்.

மாற்றுங்கள் சிதம்பரத்தை......

Sunday, November 22, 2009

கடந்த நவம்பர் 26 ம் நாள் மும்பை நகரத்தை தீவிரவாதிகள் அதிரடித்தாக்குதலில் மும்பை மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப்படை தலைவர் ஹேமந்த கர்கரே உள்பட தேசபாதுகாப்புபடை  அதிகாரிகள் , பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பத்து முறை தீவிரவாதிகளின் பட்டியலை இந்தியா அளித்தும் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடமும் ஒப்படைக்கவில்லை , நடவடிக்கையும் எடுக்கவில்லை , நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமெரிக்கா நடவடிக்கையை எடுக்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அளித்த உறுதிமொழியும் நிறைவேற்ற  இந்தியா யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை , சம்பந்த பட்ட அமைச்சர்களும் கிருஷ்ணா, சிதம்பரம் போன்றவர்கள் எக்ஸ்குளுசிவ் பெட்டி கொடுத்து ஓராண்டை கடத்திவிட்டார்கள் , உள்நாட்டு தீவிரவாதிகளான மாவோயிஸ்ட் நல்வழிப்படுத்த முடியாத அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் தீவிரவாத வழிக்கு செல்கிறார்கள் , இதுகுறித்து அரசு மத்திய படைகளை கொண்டு ஒடுக்கும் எனவும், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போம் எனவும் கூறி ஏமாற்றுகிறவர்கள், அல் குவைதா தீவிரவாதிகளின் செயலுக்கு திடமான இந்தியா அரசின் நடவடிக்கை மட்டுமே தீர்வாகுமே தவிர பெட்டிகளும், அந்நிய நாட்டவரின் உதவி எதிர்பார்ப்பு பலனை தராது , எப்போது துணிச்சல் வருவது சிதம்பரத்திற்கு  இல்லையேல் திறமையான நபரை அமர்த்தவேண்டியது அரசின் கடமை. இந்தியா அரசு மும்பை மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியா மக்களுக்கு என்ன தீர்வு சொல்லபோகிறது.


...

பறவைகளை காப்பதில் ஓர் அழகிய கிராமம் ஆன்னியூர்

Friday, November 20, 2009

   விழுப்புரம் அருகே அன்னியூர் என்ற கிராமம் உள்ளது இக்கிராமத்தில் ஒரு அரசு ஆரம்பப்பள்ளி, மேனிலைப்பள்ளி, சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை உலடக்கிய ஒரு கிராமம் .  இக்கிராமத்தின் அனைத்து  தெருக்களிலும் தென்னை,வேம்பு,புலியன்,புங்கன் , முருங்கை உள்ளிட்ட மரங்களும் நிறைய கோயில்களும் கோவிலின் எதிரில் ஆலமரம் , அரசன் என பசுமையான மரங்களை கொண்ட  அழகிய கிராமம் அன்னியூர் .  இங்கு உள்ள மரங்களில் மாலை ஆறுமணிக்கு ஆஜராகும் காக்கைகள் , மைனாக்கள், கல்குருவிகள் என பறவைகள் பட்டாளம் ஏராளம்.  பலசூழலில் இருந்த கிராமம் இந்த பறவைகளின் வருகைக்கு பின்னர்தான் கவிஞர்களின்  கற்பனைகளில் காணுகின்ற இனிய கூக்குரல்களை கேட்டிட இன்பமாயிருக்கும் .  கிட்டத்தட்ட ஐந்தாயிரம் காக்கைகள் , இரண்டாயிரத்திற்குமேற்பட்ட மைனாக்கள்,கல்குருவிகள் , சொற்பமான குயில்கள் என இந்த கிராமத்தின் இன்பமயமான் சூழலுக்கு நாதங்களாகின்றன.
         பறவைகள் காலையில் பல்வேறு பகுதிக்கு அதிகாலையில் துயில் எழுந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றன. இந்த பறவைகள் இடும் எச்சத்தினால் பல்லுயிர்பெருக்கம் வலுவடையும், இப்பகுதியில் பறவைகள் இரவில் தங்குவதாலும் , இனப்பெருக்கத்தை இங்கு செய்வதாலும் இப்பகுதி சுற்றுச்சூழல் மாசடையாமல் இயற்கையாகவே இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது .  இவ்வளவு பறவைகள் வந்து தங்கவும் , இனப்பெருக்கம் செய்துகொள்ளவும் நீர்நிலைகள் ஏரிகள்,குளங்கள் இங்கு உள்ளது, மேலும் போதுமான மரங்கள்,குடியிருப்புகளில் தங்க வசதியாகவும் உள்ளது இதற்காக மக்கள் யாரும் இவைகளை துன்புறுத்துவதில்லை.
            மேலும் இங்கு பறவைகளை கல்வீசி தாக்கினாலோ, வேட்டையாடினாலோ இவ்வூர் மக்களும், ஊர்பிரமுகர்களும் துரத்தி துரத்தி அடித்துவிடுவார்கள் என அவ்வூர்மக்குள் கூறுகின்றனர். இப்படி மரம் வளர்ப்பதிலும், பறவைகளை காப்பதிலும் கிராமங்கள் தோறும் உள்ள இளைஞர்களும், பெரியோர்களும் இவைகளையும் ஒரு உயிராக நினைத்தாலே கிராமங்கள்தான் சொர்கங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த அழகிய கிராமத்தை ரசிக்க விரும்புபவர்கள் விழுப்புரம் நகரத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் பயனித்தாலே மகிழ்ச்சிக்கடலில் மிதக்கலாம் . இயற்கையை காப்போம் இன்றும் காந்தியின் வாக்கு வாழ்கிறது .

          

ஜனநாயகத்தில் செல்லரித்த தூணான பத்திரிகைகள்

           இந்தியாவின் நான்கு தூண்களுக்கு அடுத்ததாக பத்திரிகை துறையை பெருமையுடன் சொல்லிக் கொள்வார்கள்வார்கள் ஏனெனில் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பாலமாக இருந்து அரசின் திட்டங்கள் , மக்களின் அடிப்படை வசதிகள் , தேவைகள் குறித்தும் மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அரசு இயந்திரம் செவ்வனே செயல்பட்டு மக்கள் நலமுடன் வாழ வகை செய்வது அதன் கடமை .  ஆனால் இன்றைய சூழலில் அத்தகைய நிலையில் இருந்து சற்று விலகி மக்கள் நலனைவிட வர்த்தக ரீதியாக செயல்பட்டு வருமானம் பார்க்கவும் , தங்களது டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்துவதற்காக போட்டிபோட்டு வருகின்றவர்கள் ஏராளம் . ஒரு நடிகை பாய் பிரண்டு வைத்திருந்தாள் அதை இதை முதலில் படியுங்கள் என வண்ணப்படத்துடன் கோட்டை எழுத்துக்களில் போடுவார்கள் , ரஜினி நீலகலர் கொட்டு போட்டு அதில் வைலட்கலர் டைகட்டினார், சர்ரென்று வந்தார் விர்ரென்று போனார் என செய்திதாளின் தலைப்புச் செய்தியில்  போடுவார்கள் இப்படியாகிவிட்டது ஈடுகளின் நிலைமை.   அன்னைதெராசா முக்திபேறு பெற்றதற்காக விருது வழங்கியதை உள்பக்க செய்தியாகப்போட்டு நடிகை விபச்சார வழக்கில் கைதை முதல் பக்கசெய்தியாக போட்டது எவ்வளவுபெரிய கேவலம்(தினத்தந்தியில் மட்டும் அன்னைதெராசவிருது செய்தி தலைப்பு செய்தி) .  ஒரு ஆண்டிற்கு புகையிலை பயன்பாட்டால் இந்தியாவில் பத்துலட்சம் பேரும் , உலகில் ஐம்பது லட்சம் பேரும் சாகடிக்கப்படுகிறார்கள் , எய்ட்ஸ் நோயால் ஆண்டிற்கு உலகில் முப்பத்தொரு லட்சம் பேரும் சாகிறார்கள் என்பதனை எந்த செய்தி ஊடகமும் , நாளேடும்  முக்கியத்துவம் தருவதில்லை இதுதான் செய்தி தர்மமா யோசிக்கவேண்டும்  சம்பந்தப்பட்டவர்கள் .  விற்பனையை அதிகரிக்க சினிமாசெய்திகளையும், நடிகைகளின் கிசுகிசுக்களையும் போடுவதால் இன்றைய நிலையை பத்திரிகைகள் கொட்டருக்கும் , கோழி பிரியாணிக்கும் பாடுபட்டதாக சேற்றை வாரி இறைத்ததை மறக்கக்கூடாது இவர்கள்.   நாட்டின் ஆண்கவது,ஐந்தாவது என எந்த தூணாக இருந்தாலும் அப்பவிமக்களையும் , நாட்டின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டுமே தவிர தங்கள் துறைக்கும் , மக்களுக்கும் துரோகம் செய்யவோ, கெட்டபெயரை தேடி தர நினைக்கவோ கூடாது.  வாழ்க பத்திரிகை தர்மம் வளர்ந்திடட்டும் அதன் சேவைகள்.

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger