நம்பிக்கைக்கு உரிய நாடல்ல அமரிக்கா

Friday, November 27, 2009

            மும்பை நகரம் சர்வதேச நகரமாக முன்னேறி கொண்டிருக்கின்ற வேளையில் அதனை தடுக்கும் விதமாகவோ அல்லது இந்தியாவின் மிகமுக்கிய மாநகரமான மாநில தலைநகரையோ அழிக்கவேனுமேனவோ எண்ணி மிகக்கொடூரமான தாக்குதல்களை நடத்தி மும்பை மாநில தீவிரவாத எதிர்ப்பு படை தலைவரான ஹேமந்த் கர்கர் உள்ளிட்ட தேசப்பதுகாப்புபடை அதிகாரிகளும் அப்பாவி பொதுமக்களும்  சுட்டுத்தள்ளப்பட்டனர் .  உலகமே அதிர்வுறும் இந்த நிகழ்வு நடைபெற்று ஓராண்டு நிறைவற்று விட்ட நிலையில் இன்றுவரை எந்த விதமான நடவடிக்கையுமே எடுக்காமல் இருக்கின்ற நிலையில் இந்தியா அரசு தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க விருப்பமில்லையா அல்லது நடவடிக்கை எடுக்க போதுமான துணிச்சல் இல்லையா என்பதுதான் மக்களின் கேள்வி. அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி.கிளிண்டன் இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்திருந்தார் அந்த உணர்வு இந்தியா மக்களின் அமெரிக்கா மீதான நம்பிக்கையை அதிகரித்தது ஆனால் இன்று ஓராண்டை நிறைவு செய்தும் ஏதும் செய்யாதது வழக்கமாக அமெரிக்கா இந்தியாவை திருப்திபடுத்த சொல்லும் ஏமாற்று வேலையாகவே தெரிகிறது இனியும் அமெரிக்காவை நம்பி இந்தியா தனது தேச நலனை குழிதோண்டி புதைக்கக்கூடாது இனியும் தாமதிக்காமல் தீவிரவாதத்திர்க் கெதிரான வேரறுக்கும் பணிகளை துரிதப்படுதவேண்டும்.  இந்தியமண்ணில் தீவிரவாததிர்க் கெதிரான துணிச்சல் வரும் நாள் தான் இந்தியா உலகின் அமைதி பூங்காவாகும்  நாள். இந்தியமண்ணில் தீவிரவாதத்தின் தாக்குதலில் உயிர் நீத்த உடன்பிறப்புகளுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger