ஆங்கிலத்தை தூக்கிபிடிக்கும் தமிழினத்தலைவர் கருணாநிதி

Friday, November 27, 2009

             தமிழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவதர்க்காகவும், கல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நீண்ட நாட்களாக கல்வியாளர்கள் , அரசியல் தலைவர்கள் (மருத்துவர் ராமதாஸ் ) போன்றவர்கள் ஆரம்பகல்வியை தரமாக தர அவர்களின் புத்தக சுமையை குறைத்து , சமச்சீரான கல்வியை நடைமுரைப்படுத்தவேண்டி போராடி வந்தனர் .  கடந்த 1996  ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஏ.பி.ல். (செயல் வழி கற்றல் முறை ) கொண்டுவரப்பட்டு கடந்த இரண்டாண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .  இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் தீவிரமான போராட்டம், கருத்தரங்குகள் , தீவிர பிரச்சாரம் செய்து அரசுக்கு கொடுத்த நெருக்கடிகாரணமாக அரசு பேராசிரியர் முத்துக்குமரன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து சமச்சீர் கல்விகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சொன்னது , அவரும் அந்த அறிக்கையை தாக்கல் செய்தார் ஆனால் இதுநாள் வரையில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சமச்சீர் கல்வியை அடுத்த ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
சமச்சீர் கல்வியா?சமரசக்கல்வியா?...
           தமிழகஅரசின் சமச்சீர் கல்வித்திட்டம் அமல் முறை ஒரு சமரசத்திட்டம் என ராமதாஸ் தெரிவித்திருந்தார் இதற்கு முதல்வர் சமச்சீர் கல்வியை கேட்டதே அவர்கள்தான் இப்போது இதையும் குறை சொல்லுகிறார்களே என வருத்தப்பட்டார் .  சமச்சீர் கல்வி அண்மைய பள்ளிமுறை , பொதுப்பள்ளி முறையில் அனைத்து அதாவது மாநில பாடத்திட்டம் , மத்திய பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம்,ஆண்களோ இந்தியன் பாடத்திட்டம் என நான்கு படத்திட்டத்திற்குமான பாடங்கள் ஒன்றாக இருக்கவேண்டும் , அண்மை பள்ளிமுறையில் வட்டாரத்திற்குள் வரும் சாதாரண தொழில்லாளி பிள்ளை, மாவட்ட ஆட்சியர் பிள்ளை, அமைச்சர் பிள்ளை என அனைவரும் அன்மைபல்லியில் கல்வி பயில வகை செய்தால் மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் .  முன்னால் ஜனாதிபதி. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தியபடி மூன்று கிலோமேட்டேருக்கு ஒரு உயர் நிலை பள்ளி அவசியம் , முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம்  பின்பற்ற  போதிய ஆசிரியர்கள் அரசு நியமிக்கவில்லை இப்படிப்பட்ட சூழலில் அரசு அமல் படுத்தப்போகும் சமச்சீர்கல்வியால் நமக்கு பதிப்பு எனக்கருதிய தனியார் பள்ளி நிர்வாக உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள் அதற்கு கல்வித்துறை அமைச்சர் தனியார் பாதிக்கப்படதவாறு நடைமுறைப்படுத்தப்படும் என்றார். சமச்சீர் கல்வி குறித்தார் கமிட்டி பரிந்துரை வெளியிடப்படாமல் அதற்குரிய சூழலை வகுக்காமல் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது யாருக்காக நலன்பயக்க என்பதுதான் கல்வியாளர்களின் ஐயம்.அதனால்தான் என்னவோ மருத்துவர் ராமதாஸ் சமச்சீர் கல்வியா சமரசக்கல்வியா என்று வினா எழுப்பியுள்ளார்
                சமச்சீர் கல்வி குறித்த கமிட்டியின் தலைவரும் பேராசிரியருமான முத்துக்குமரன் ஒரு கருத்தரங்கில் பேசும்போது தமிழ் பாடத்திற்கு குறைவான பக்கங்களும், ஆங்கிலப்பாடத்திற்கு அதிகப்பக்கங்களையும் ஒதுக்கியுள்ளனர் என தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வேதனையை தெரிவித்துள்ளார்.
                தமிழ் இனத்தின் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் தமிழை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் தருவது தமிழுக்குமட்டுமல்ல தமிழனுக்கும் செய்யும் துரோகம் இது மாற்றப்படவேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் வாழவேண்டும், தமிழனும்
வாழவேண்டும் , அதற்கு தமிழின் நலன் விரும்பி ஆளவேண்டும் .








0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger