கல்வி அரசுடமையாக்கப்படவேண்டும் ; சாராயம் ஒழிக்கப்படவேண்டும்

Sunday, November 29, 2009

     
 தமிழகம் சட்டத்தை பொதுமக்களும், அதிகாரிகளும் மதிக்கின்ற மாநிலங்களில்




முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்ந்தது. ஏனெனில் இங்கு ஆண்ட மன்னர்களும் அதனைதொடர்ந்துவந்த ஆட்சியாளர்களும் அதாவது பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா , காவல் துறை அமைச்சர் கக்கன் போன்ற முன்மாதிரியாக ஆட்சியாளர்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள். பொதுமக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல் பட்டு வந்ததால் அதனை பொதுமக்களும் , அதிகாரிகளும் அதனை பின்பற்றிவந்தனர் அதனால் தான் என்னவோ தமிழக உலகிற்கு அமைதி பூங்காவாகவும் , உலகின் இதர நாட்டின் குடிமக்கள் பின்பற்றும் அளவிற்கு நமது கலாச்சாரம் இருந்திருக்கிறது.



சுயநலமும் , மக்கள்நலனை பாதுகாக்கின்ற துணிச்சலும் இல்லாத ஆட்சில்யாளர்கள் கையிலேயே தொடர்ந்து அதிகாரம் இருப்பதால் அமைதிபூன்காவான தமிழகம் குண்டர்கள் , கள்ளச்சாராய,கூலிப்படைகள் , நுகர்வோரை ஏமாற்றுகின்ற கொல்லைகும்பளிடம் வணிகம் போன்ற வெட்ககேடான நிகழ்வுகள் நடைபெற்றுவந்த நிலையில் அமைதி,நேர்மையான நுகர்வு தன்மை , அடிப்படை உரிமைகள் ,இலவச தரமான கல்வி , இலவச தரமான மருத்துவம் , வழங்கல் துறையில் சுத்தமான , தரமான , அத்தியாவசிய பொருட்கள் அவர்களுக்கு உரியவகையில் கிடைப்பது கேள்விக்குரியாகிப்போனது.



அரசின் மாறும் கடமைகள்:



ஆரம்ப கல்வி முதல் கல்வி வரை இலவசமாக தரப்படும் சிறிய நாடாப் கியுபா அளவிற்கு கூட நமது 6 .5 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் ஆரம்ப கல்விய கூட இன்னோம் முற்றிலும் இலவசமாக அரசே அனைவருக்கும் கொடுக்க சரியான திட்டத்த வகுத்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை ஏனெனில் ஆரம்ப கல்வி (pre KG-Phd.,



) முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசியல் வாதிகளின் கைக்குள் சிக்கி தவித்துக்கொண்டு வியாபாரத்தலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது கல்வி கோயில்கள் . மிகப்பிரம்மாதமாக கல்லாகட்டும் கடைகளாகிப்போனது கல்வி நிலையங்கள் . முன்னால் ஜனாதிபதி



ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்க மூன்று கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலை பள்ளி திறக்கவேண்டியது அவசியம் என்று கூறினார்.



அதை தவறாக புரிந்து கொண்ட அரசு தெருவெங்கும் சில ஆயிரங்களை கறக்கும் மழலையர் பள்ளிகள் , லட்சங்களை கறக்கும் பொறியல், மருத்துவக்கல்லுரிகள் மிகப்பெரிய வர்த்தக நிருவனங்களாகிப்போனது ஏழைஎளிய மக்களுக்கு உயர் கல்வி எட்டாக் கனியாகிப்போகச்செய்தது , சேவை வணிக மையமாகி போகச்செய்தது எது?



அது தவிர்த்து தனியாருக்கு விடவேண்டிய சாராயம் அரசுடமையாக்கப்பட்டு இளைஞர்களை சாராயம் விற்க செய்து குடிகாரர்களாகி அழிந்துபோகச் செய்தது அரசின் தர்மாம?



அரசின் நியாய விலை கடைகளில் அத்தியாவசியப்பொருள் களான அரசி , கோதுமை, மண்னென்னை போன்றவைகள் கிடைக்கசெய்யாமல் தரமற்ற சோப்புகள், ஷாம்புகள், டீ தூள் போன்ற விற்காத தரமட்ட்ற பொருட்களை அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் பணம் சம்பந்த பட்ட நிறுவனத்திடம் பெற்றுக்கொண்டு சிபாரிசு செய்து சப்பளை செய்ய வகை செய்கின்றனர் இது நுகர்வோரை ஏமாற்றும் வேலை இல்லையா?



அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் ,ஆட்டோக்கள் என மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய தினசரி சேவைகள் திடீரென அரசு அறிவிக்காமல் கட்டனங்ககளை ஏற்றுவது பொதுமக்களை வேதனையில் சிக்கவைக்கிறது மேற்படி இடங்களில் பெரும்பாலும் ரௌடிகள் ராஜ்யத்தில் பணிபுரிவதால் பொதுமக்கள் கேள்வி கேட்க தயங்குகின்றனர் . இது குறித்து அரசு அதிகாரிகளும் தங்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தால் போதும் என நினைக்கின்றனர் நடவடிக்கை எடுக்கும் இடங்களில் உள்ளவர்கள் .



இப்படி பொதுமக்கள் களை எழுந்து வாங்கும் பால் பாக்கெட்டில் இருந்து அரசி, பருப்பு ,காய் கரி, செல்லும் ஆட்டோ, பேருந்து , அறுந்து தேனீர், சாப்பாடு இவை எல்லாமே அன்றாடம் நிர்ணயிக்கப்படுகின்ற தங்கம் மற்றும் வெள்ளி விளையைப்போன்றது அதுவும் ஒருநாள் குறையும் இதன் விலை எல்லாம் ஒரு நாள் ஏறினாள் மறுபடி இறங்காது.



பேருந்து கட்டணங்களை அரசு அறிவிப்பின்றி அரசு போக்குவரத்து கழகம், தனியார் பேருந்துகள் ஏற்றுவது எப்படி சரியாகும் . இப்படி ஒரு மனிதன் எழுந்து அலுவலக மற்றும் பிரவேளைகளுக்காக வெளியில் செல்வது பொருட்களை வாங்குவது என எங்கும் ஒழுங்குபடுத்தாதா நிலை ஊழல்கள் கீழ் நிலை முதல் மேல் மட்டம் வரை ஊழல் பெருத்துவிட்டதால் அயல்நாடுகளில் கூட நமது மரியாதை குறைந்து விட்டதை பிரதமர் சமீபத்தில் குறிப்பிட்டு சி.பி.ஐ. அதிகாரிகளை ஊழல் வாதிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் அதற்கு முன் உங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.



இந்த தேசம் நல்ல வல்லரசாக மாற நிறைய இளைஞர் சக்திகள் நமது நாட்டில் உள்ளது , அறிவு சார்ந்த திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களின் திறமைகள் முறையாக பயன் படுத்தி ஊழலை ஒழித்தாலே இந்தியா வல்லரசாக மாறும். ஆக மொத்தம் பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகள் , அடிப்படை உரிமைகள் விசயத்தில் தலையீடுகள் முறைகேடுகள் களையப்பட்டாலே நாடு வளம் பேரும் நல்ல பேர் பேரும்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger