குப்பைகளோடு எரிந்துபோகும் பைந்தமிழன் கலாச்சாரம்

Friday, November 6, 2009

          குப்பைகள் மனிதவாழ்க்கையில் நீங்காத இடம் பெற்றுள்ளன .  பழந்தமிழன் கலாச்சாரத்தில் நிரந்தர குப்பைகள் என்பது இருந்ததே இல்லை .  உழவு தொழில் செய்யும் தமிழன் அறுவடையில் எஞ்சும் குப்பைகளை எரித்து சாம்பலாக்கி அந்த நிலத்தின் சாம்பல் சத்தினை இடுவான் நடவு நேரத்தில் தழைகளை போட்டு தழைசத்துகளை இடுவான் காய்கறி , பழங்களை தோட்டத்தில் பயிர் செய்வான் .  ஆனால் என்றைய நவீன உலகில் மனித வாழ்க்கையில் பிளாஸ்டிக் இரண்டற கலந்து விட்டது .ஐந்து  நிமிடம் கையில் இருக்கும் டீ கப் பலாயிரம் ஆண்டுகள் மக்கத்து மண்ணை கெடுக்கும் , தீ இட்டு எரிப்பதால் பல உயிர்க்கொல்லி நோய்களையும் , சூழலையும் கெடுத்துவிடுகிறது .  மனிதவளத்தை , மண்ணை கெடுத்து நமது பைந்தமிழனின் அடையாளத்தை அழித்துவிடும் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பைகள், கண்ணாடி , சில்வர் டம்பளர்  உள்ளிட்ட மறுசுழற்சிக்கு ஏற்ற இயற்கைக்கு இணக்கமான பொருட்களை பயன்படுத்தி மனித சமூகத்திற்கு ஏற்படும் உயிர்கொல்லி நோய்களிலிருந்தும், பெரிடர்களிளிருந்தும் பாடுகப்பை ஏற்படுத்தவும், இயற்கையின் நண்பனாக பிந்தமிழனாக மட்டுமல்ல நல்ல மனிதநேயமுள்ள தமிழனாக வாழ ஒவ்வொருவரும் முன்வரவேண்டும், முயற்சிப்போம் குப்பை இல்லாத சமுகம் ஆபத்தில்ல சமூகம் அமைக்க , வாழ்த்துக்களுடன்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger