பறவைகளை காப்பதில் ஓர் அழகிய கிராமம் ஆன்னியூர்

Friday, November 20, 2009

   விழுப்புரம் அருகே அன்னியூர் என்ற கிராமம் உள்ளது இக்கிராமத்தில் ஒரு அரசு ஆரம்பப்பள்ளி, மேனிலைப்பள்ளி, சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை உலடக்கிய ஒரு கிராமம் .  இக்கிராமத்தின் அனைத்து  தெருக்களிலும் தென்னை,வேம்பு,புலியன்,புங்கன் , முருங்கை உள்ளிட்ட மரங்களும் நிறைய கோயில்களும் கோவிலின் எதிரில் ஆலமரம் , அரசன் என பசுமையான மரங்களை கொண்ட  அழகிய கிராமம் அன்னியூர் .  இங்கு உள்ள மரங்களில் மாலை ஆறுமணிக்கு ஆஜராகும் காக்கைகள் , மைனாக்கள், கல்குருவிகள் என பறவைகள் பட்டாளம் ஏராளம்.  பலசூழலில் இருந்த கிராமம் இந்த பறவைகளின் வருகைக்கு பின்னர்தான் கவிஞர்களின்  கற்பனைகளில் காணுகின்ற இனிய கூக்குரல்களை கேட்டிட இன்பமாயிருக்கும் .  கிட்டத்தட்ட ஐந்தாயிரம் காக்கைகள் , இரண்டாயிரத்திற்குமேற்பட்ட மைனாக்கள்,கல்குருவிகள் , சொற்பமான குயில்கள் என இந்த கிராமத்தின் இன்பமயமான் சூழலுக்கு நாதங்களாகின்றன.
         பறவைகள் காலையில் பல்வேறு பகுதிக்கு அதிகாலையில் துயில் எழுந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றன. இந்த பறவைகள் இடும் எச்சத்தினால் பல்லுயிர்பெருக்கம் வலுவடையும், இப்பகுதியில் பறவைகள் இரவில் தங்குவதாலும் , இனப்பெருக்கத்தை இங்கு செய்வதாலும் இப்பகுதி சுற்றுச்சூழல் மாசடையாமல் இயற்கையாகவே இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது .  இவ்வளவு பறவைகள் வந்து தங்கவும் , இனப்பெருக்கம் செய்துகொள்ளவும் நீர்நிலைகள் ஏரிகள்,குளங்கள் இங்கு உள்ளது, மேலும் போதுமான மரங்கள்,குடியிருப்புகளில் தங்க வசதியாகவும் உள்ளது இதற்காக மக்கள் யாரும் இவைகளை துன்புறுத்துவதில்லை.
            மேலும் இங்கு பறவைகளை கல்வீசி தாக்கினாலோ, வேட்டையாடினாலோ இவ்வூர் மக்களும், ஊர்பிரமுகர்களும் துரத்தி துரத்தி அடித்துவிடுவார்கள் என அவ்வூர்மக்குள் கூறுகின்றனர். இப்படி மரம் வளர்ப்பதிலும், பறவைகளை காப்பதிலும் கிராமங்கள் தோறும் உள்ள இளைஞர்களும், பெரியோர்களும் இவைகளையும் ஒரு உயிராக நினைத்தாலே கிராமங்கள்தான் சொர்கங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த அழகிய கிராமத்தை ரசிக்க விரும்புபவர்கள் விழுப்புரம் நகரத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் பயனித்தாலே மகிழ்ச்சிக்கடலில் மிதக்கலாம் . இயற்கையை காப்போம் இன்றும் காந்தியின் வாக்கு வாழ்கிறது .

          

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger