நாளை வேலுபிரபாகரன் மாவீரர் தின உரையாற்றுகிறார்?

Thursday, November 26, 2009


           இந்தியா ஜனநாயக தேசத்தின் அண்டை தேசமும் பௌத்த சமய தேசமான இலங்கை மண்ணில் சிங்களர்களும் , தமிழர்களும் மண்ணின் மைந்தர்கள் மன்னர் ஆட்சிக்கு பிறகு ஆங்கில ஆதிக்கத்திற்கு பின் விடுதலையான இலங்கை பிரதேசம் பெரும்பான்மையான சிங்கலர்களைமட்டும் முதன்மைப்படுத்தி , கல்வி,வேலைவாய்ப்பு,அதிகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மறுத்து இனவெறி அரசாக செயல்பட்டதால் கல்வி , வேலைவாய்ப்பு , அதிகார பகிர்வு உள்ளிட்டட தேவைகளுக்காக சொந்தமண்ணின் அரசு இயந்திரத்திற்கெதிராக போராடி பயனளிக்காததால் தமிழ்மக்களின் போராட்டம் தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கம் (liberation tiger tamil ealem - LTTE) என்ற இயக்கத்தை ஏற்படுத்தி போராடினார் தன மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தாங்களே ஏற்படுத்தி கொடுத்து போராடிவந்த முதல் போராட்ட இயக்கம் இதுதான் என்பது உலக வரலாறு. இவர்களின் போராட்டம் கட ந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது இடையே இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இருந்தபோது நார்வே நாட்டின் உதவியுடன் சிலகாலம் போர்நிறுத்த நடவடிக்கை அமலில் இருந்தது .  இதனை தொடர்ந்து ரணில் விக்கரமசிங்கே அரசை அந்நாட்டு அதிபர் பண்டாரநாயக்க குமாரதுங்க தனது அதிகாரத்தை பயன்படுத்தி கலைத்துவிட்டார். அதனை தொடர்ந்து நடந்துவந்த போர் ராஜபக்சே அரசு போர்விதிமுறை மீறல், இந்தியா,பாகிஸ்தான்,சீனா போன்ற அண்டை நாடுகளின் ஆயுத , பூகோள வரைபடம் ,இராணுவவீரர்களை அனுப்பியும்,ராடார் உள்ளிட்ட உழவு கருவிகள் வழங்கியும்  அவர்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி அப்பாவிமக்களின் உயிர்களையும் , உடமைகளையும் அழித்து எஞ்சிய மக்களை கம்பிவேளிக்குள் அடைத்து திறந்தவெளியில் கொட்டும் மழை,புயல் என அப்பட்டமான மனிதஉரிமை மீறலை அமெரிக்கா , ஜெர்மனி , பிரிட்டன்,ஐக்கிய நாடுகள் சபை ஆகியவைகள் எதிர்த்தும், கண்டித்தும் இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனங்களை (அப்பாவி இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொன்றும், கானணி பெண்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்தும் உலக வரலாற்றில் மனிதகுலம் இதுவரை செய்யாத அட்டுழியங்களை அரங்கேற்றி தனது வெறித்தனத்தை தீர்த்துக்கொண்டதுதான்  புத்தபூமியின் வேட்கக்கேடான அரசின் நிலைமை.
                மீதமுள்ளவர்களை காப்பாற்றவும்,எப்போதும் விடுதலை போராட்டங்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை எனவே நிச்சயமான வெற்றியும் ,விடுதலையும் என்றாவது ஒருநாள் நடந்தாகவேண்டியது நியதி.  இந்த போராட்டம் இன துரோகிகள் உடனிருந்தவர்களாலும்,தாய் தமிழர்கள் என எண்ணிய தமிழக அரசியல் தலைவர்கள் பதவிஆசையால் உதவியை தீர்க்கமாக குறித்தகாலத்தில்  செய்யாதது என அதிகார போதைக்கு ஆட்பட்டவர்களால் சந்தித்த மிகப்பெரிய சரிவுதான்.
               இந்த நிலையில் இந்த விடுதலை இயக்கத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும் நவ்வம்பர் 27 நாளில் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் தினத்தில் விடுதலை இயக்கத்தின் தலைவர் வெலுபிள்ளை.பிரபாகரன் வீர உரை நிகழ்த்துவது வழக்கம் , இந்த நிலையில் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் நாளை யார் மாவீரர் உரை நிகழ்த்துவது என்ற எதிர்பார்ப்பையும் , அந்த இயக்கம் சார்பில்  விடுதலை போர் நாளை முதல் தொடங்கும் என உள்ளூர் தமிழ்மக்களுக்கும், புலம்பெயர் தமிழ்மக்களுக்கும் செய்தியை அதிகாரபூரவமாக வெளியிட்டுள்ளதாக நாளேடுகளில் வெளிவந்துள்ளது.
                 இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் இய்யக்கத்தின் தலைவரும் , ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளியான பிரபாகரன் இறந்த பின்னர் அந்த இறந்த நபர் பிரபாகரன்தான் என இலங்கை தரப்பு இறப்பு சான்றிதழ் இதுவரை இந்தியா அரசிடம் வழங்கவில்லை. பிரபாகரன் இறப்பு உறுதி செய்யப்படாமல் அவ் வழக்கு இதுவரை முடிவடையவில்லை. தமிழர் தேசிய இய்யகத்  தலைவர் பழ நெடுமாறன் , வை.கோ.போன்றவர்கள் அடித்து கூறும் தகவல்களால் நிச்சயம் பிரபாகரன் உயிருடன் இருப்பதை உறுதியாக நம்பலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது
ஆனால் நாளை மாவீரர் தினத்தில்  உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கும் பிரபாகரன் வீர உரை ஆற்றுவார் என்பது நாளை தெரியவரும் நம்பிக்கை வைப்போம். இருளின் முடிவில் ஒளி கிடைக்கும் ,உண்மையான  போராட்டத்தின் முடிவில் வெற்றி கிடைக்கும் .

.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger