ஆண்டிற்கு 50 லட்சம் பேரை கொள்ளும் உயிர்கொல்லி ஓர் எச்சரிக்கை

Wednesday, November 11, 2009


புகையிலை பீடி, சிகரெட்,குட்கா, ஹான்ஸ்,மெல்லும்புகையிலை என பலவடிவங்களில் கடைகளில் தாராளமாகக் கிடைக்கிறது.  தற்பொழுது புகையிலை பயன்பாடுகள் 14 வயதுமுதல் 22 வயதுவரையிலான இளம் வயது ஆண்கள்,பெண்களின் எண்ணிக்கை 23 கோடியை எட்டும் நிலையில் உள்ளது .  இந்த புகையிலை பயன்பாடுகளால் ஆண்டுதோறும் இந்தியாவில் பத்துலட்சம் பேர் இறந்துபோகிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.  இதனை தடுக்கும் பொருட்டு இந்தியாவின் இளம் அமைச்சராக கடந்த காங்கிரஸ் ஆட்சியின் சுகாதார அமைச்சராக பொறுப்புவகித்த மருத்துவர் அன்புமணி புகையிலை தடைச்சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.  கடந்த 2008 அக்டோபர் 2  தேதி கொண்டுவரப்பட்ட இச்சட்டம் கல்விநிலையங்கள் , மருத்துவமனைகள் , சுகாதார நிலையங்கள் , கோவில்கள் என நூறு மீட்டர் சுற்றளவில் புகையிலை பொருட்களை விற்க , பயன்படுத்த தடை செய்கிறது.  பேருந்துநிலையங்கள் , தொடர்வண்டிநிளையங்கள் , பேருந்துகள், தொடர்வண்டிகள் , திரையரங்குகள், உணவகங்கள் , அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள்  என மக்கள் கூடும் எங்கும் இடங்களில் புகையிலை பொருட்களை பயன்படுத்த தடைசெய்கிறது.  இச்சட்டம் ஊடகங்களில் விளம்பரம் செய்ய , மாணவர்களுக்கு உதவுவதாக உதவித்தொகைகள் வழங்க , நிகழ்ச்சிகளை வழங்க, புகையிலை பொருட்கள் மீது 30  முதல்  50 சதம் வரை எச்காரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும் , திரையரங்குகளில்  குறைந்த பட்சம் காட்சி ஒன்றுக்கு இரண்டு விழிப்புணர்வு ஸ்லைடுகளை காட்டவேண்டும் என்கிறது.  2008 மே 31 முதல்  நடைமுறைக்கு  வந்த  புகையிலை பொருட்கள் மீதான எச்சரிக்கை படங்களை கட்டாயமாக்கும் சட்டம் புதிதாக புகைபிடிக்கும் இளைஞர்களை விழிப்போடு இருக்க செய்கிறது.   இப்படிப்பட்ட தீவிர புகையிலை தடைச்சட்டங்களை துணிச்சலுடன் கொண்டுவந்த அன்புமணியின் வழியில் துணிச்சலுடன் அதனை நடைமுறைப்படுத்த ஆட்ச்யாளர்கள் முன்வரவேண்டும் இளைஞர்களும் விழிப்புனர்வுகொள்ளவேன்டியது அவசியம்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger