நதிகள் இணைப்பு தேவை இல்லை : நதிகள் தேசமையம் முக்கியம்

Tuesday, November 3, 2009

இந்தியாவின் சகமாநிலமான தமிழ்நாடு விவசயத்திர்காகவும்,குடிநீருக்காகவும்,பெருத்த அவதிக்குள்ளகின்றன இதனால் பிரமாநிலன்களான ஆந்திரா,கர்நாடக,கேரளா மாநிலங்களின் உதவியை எதிர்பர்கவேண்டியுள்ளது .  ஆனால் மனிதநேயத்திர்க்காகவோ,உரிமைக்க்காகவோ சிறிதளவேனும் தண்ணீர் தர அவர்கள் தயாரில்லை அதற்காக நீர் வளத்துறை , உச்சநீதிமன்றம் , மத்தியாரசு என எந்த உத்தரவுகள் ஆனாலும் மதிக்கத்தயாரில்லை. ஆட்சிகள் மாறினாலும் கர்நாடக கட்சிகள் ஒன்றிணைத்து போராடுவதால் தமிழ்மக்களை சமாதான படுத்துவதிலே மதிய அரசுகள் இருந்தது.  இதற்கு மாற்றுதிட்டமாக  கொண்டுவரப்பட்டதுதான் நதிகள் இணைப்பத்திட்டம்.
நதிகள் இணைப்புத்திட்டம்:
            1834 ஆம் ஆண்டில் ஆங்கிலேய பொறியாளர் சர.ஆர்தர்கட்டன் என்பவரால் கங்கை -காவிரி நதிகளை இணைத்து தேவையான இடங்களில் அணைகளை கட்டி வரட்சியானபகுதிகளில் வளப்படுத்தவும், வெள்ளப்பெருக்கு மிகுந்த இடங்களில் வெள்ளச் சேதங்களை தடுக்கவும் ஆய்வுகளை செய்தார்.  1971-1972 இல் மத்தியநீர்வள அமைச்சராக இருந்த டாக்டர் கே.எல்.ராவ். கங்கை-காவிரி இணைப்புக்கான திட்டத்தை தீட்டினார். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி இந்தத்திட்டம் நிறைவேற விரும்பினார்.
பிரம்மபுத்திர-கங்கை, மகாநதி-கோதாவரிய்-கிருஷ்ணா ,நதிகளை காவிரி நதியோடு இணைக்க ருபாய் 20,000 கொடி செலவு மதிப்பிடப்பட்டதால் இந்தத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பிறகு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது பூமாலை திட்டம் போடப்பட்டு அதுவும் கிடப்பில் போடப்பட்டது.
பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு 1982  இல் மதிய நீர் அபிவிருத்தி நிறுவனத்தை அமைத்து நதிகள் இணைப்புத்திட்டம் இந்து பெரும் பிரிவுகளாக திட்டமிடப்பட்டது.
           * இமாலய நதிகள் அபிவிருத்தி திட்டம்
            * தீபகற்ப நதிகள் அபிவிருத்தி திட்டம்.
       இதில் தீபகற்ப நதிகள் திட்டம் இந்து பெரும் பிருவுகலகப் பிரிக்கப்பட்டது .
            * மகாநதி - கோதாவரி-கிருஷ்ண நதிகளை காவிரி நதிகளோடு இணைப்பது. தேவையான இடங்களில் நீர் தேக்கங்களை அமைப்பது .
              * பம்பாய் க்கு வடக்கேயும் தபதிக்கு தெற்கேயும் உள்ள மேற்கு நோக்கி பாயும் நதிகளை இணைப்பது.
              * சென்-சம்பல் நதிகளை இணைப்பது .
               * மேற்கு நோக்கி பாயும் மற்ற நதிகளை இணைப்பது .
         இதில் தமிழகத்திற்கு பயனளிக்கும் மிக முக்கிய திட்டமான மகாநதி-கிருஷ்ணா -பென்னர் நதிகளை காவிரி நதிகளோடு இணைப்பது. இத்திட்டத்தின் மகாநதி -வைகை வரை உள்ளதுரம் 3716km அதற்காக செலவிட 50,000 கோடிகள் (at 1999 cost basis) நிர்ணயிக்கப்பட்டது .
           ஆனால் இந்த திட்டம் தொடர்பான அறிக்கை நீர்வள அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டு அங்கீகாரம் பெறுவது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இடையே இன்னும் விவாதம் கூட நடத்தாமல் உள்ளது தான் வேதனை..
              இந்த நதிகள் இணைப்பு நமது மாநிலத்தை நிச்சயம் வளப்படுத்தும் என தமிழக மக்கள் நம்பிக்கொண்டிருக்கையில் தமிழகம் கட்சி வளர்சிப்பநிகளுக்காக வருகை தந்த காங்கிரஸ்  கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி துறைரீதியாக, அரசியல் ரீதியாக இன்னும்னடவடிகை எடுக்கப்படாதது குறித்து சொல்லாமல் தேச நதிகள் இணைப்பு சாத்தியம் இல்லை எனவும் அது தேசிய அளவி சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டு போனார்.
                இது குறித்து தமிழக காங்கிரசார் தமிழகத்தின் நலன் குறித்து ஏதும் மருப்புதெரிவிக்க இயலாமல் ராகுல் கருத்தை திடீரென ஆதரித்து சுற்றுசூழலை காரணம் காட்டி திடீர் ஆர்வலராக மாறியுள்ளனர் தமிழக காங்கிரசார் .
               நதிகள் இணைப்பு என்பது அரசுத்தரப்பில் இருபது ஆண்டில் நிறைவுபெறும் திட்டம் என சொல்லப்பட்டது ஆனால் இத்திட்டம் தெட்டி இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் இது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பேசாமலே மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி சுகபோகம் அனுபவிக்கின்றனர். தற்போது இதுகுறித்து விவாதங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
             நதிகள் நீர் பங்கீடு, கூட்டுகுடிநீர் திட்டம்  எல்லாமே தமிழனுக்கு வாய்ப்பில்லாமல் செய்ய அண்டை மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன.
               நதிகள் இணைப்பை விட தற்போது நதிகள் தேச மயம், நதிகள் தூரவாரப்படல் போன்ற சட்டரீதியாக செய்து நதிகள் அனைத்து மாநில மக்களுக்கும்சொந்தம் என்பதை தீர்மானிக்கவேண்டும்.  பிறகு நதிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்தவேண்டும் பிறகு சம்பந்தப்பட்ட மாநிலங்களுகிடையிலான நதிநீர் பங்கீடு உருதிப்படுத்தப்படல்வேண்டும்.
ஆணை கட்டும் விசயத்தில் கடைமடை மாநில மக்களை கெட்டு ஆட்செபமின்மை  உறுதிசெய்து அணை கட்டும் சட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும்.
      
          
  
          

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger