தேசம் காக்க தாலி இழந்த பெண்களை மறக்கவேண்டாம் சோனியா.

Monday, October 12, 2009

              உயிரைகொல்லுதல்வேறு , சிறைவைத்தலும்  , ஏன், உடலுக்கு ஊரு செய்யும் தண்டனை என்பதும்கூட வேறு என நான் கருதுகிறேன் .  அளவில் மட்டுமல்ல , தன்மையிலும் கூட வேறுபட்டிருப்பதாக நினைக்கிறேன் .  சிறைத் தண்டனையைத் திரும்பப் பெற முடியும் .  உடலுக்கு ஊறு  செய்யும் தண்டனைக்கு ஆளானவருக்கும் கூட இழப்பீடு செய்யமுடியும் .  ஆனால் ஒருவரைசாகடிதுவிட்டால் , அந்தத் தண்டனையைத் திரும்பப் பெறவும் முடியாது, இழப்பீடு செய்யவும் முடியாது .இது மரணதண்டனைக்கு எதிராக மகாத்மா காந்தியடிகள் கூறியது.                                                      இன்றைய இந்தியாவின் நிலை மரணதண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு  விட்டதாகத் தெரிகிறது .  இறுதியாக தமிழகத்தில் ஆட்டோசங்கர் தூக்கிலிடப்பட்ட பிறகு யாரும் தூகிளிடப்பட்ட்டதாக தெரியவில்லை .  அதனால்தான் என்னவோ இந்தியாவில் தீவிரவாதத்தின் தாக்குதல் அமைதிப் பூங்கா என்ற பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது . கடந்த    1996  இல் நடைபெற்ற தொடர் குடுவேடிப்பு, மும்பை தொடர் குண்டுவெடிப்பு, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக,ஆந்திர,அகமதாபாத் , குஜராத்,டெல்லி உள்ளட்ட பல மாநிலங்களில் பொதுஇடங்கள், பேருந்து நிறுத்தங்கள் , மார்கெட் என மக்கள் நடமாடும் இடங்களில் நடத்திய குண்டுவெடிப்புகள் என நிகழ்வுகளுக்கு காரணத்தை அரசு ஆராய்வதற்கு முன்னமே தீவிராத்தின் நிகழ்வுகளில் மறக்கமுடியாத மைல்கல்லாக நிகழ்ந்துபோனதுதான் மும்பையின் தாஜ் ஹோட்டல் , நரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில்  நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்.     இதுவரை இல்லாத அளவிற்கு தேசப்பாதுகாப்பு படையினருடன் நேருக்கு நேரான தாக்குதல் தீவிரமான பயிற்சி , தாக்குதல் தலங்களைப்பற்றிய நீண்டநாள் ஆராய்ந்த துணிவு  மட்டுமல்ல இந்தியாவின் தண்டனைகள் குறித்த விழிப்பும்கூட என்றுதான் சொல்லவேண்டும் .  கடந்த 2001 டிசம்பர் 13 ஆம் தேதி புது டெல்லியில் இந்திய பாராளுமன்ற வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டு புது டெல்லியில் உள்ள பொடா(pota-prevention of Terrism Act) சிறப்பு நீதி மன்றத்தால் (designated court) விசாரணை செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது, இதனை டெல்லி உயர் நீதி மன்றமும்,உச்ச நீதி மன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது .  மரணதண்டனை விதிக்கப்பட்ட முஹம்மத் அப்சல்  எனும் தீவிரவாதியை தூக்கிலிடுவதற்காக கடந்த 20.10.2006 அன்று வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.மேலும் அபிசளின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் குறிப்பாக தொலைக்காட்சிகள் துடித்தன.இந்த மரணதண்டனையை நிறைவேற்ற அப்போது ஆட்சியில் இருந்த இப்போதும் ஆட்சியில் இருக்கின்ற காங்கிரஸ் அரசு ஒட்டு  வங்கியை நினைவில் வைத்தும் , தீவிரவாதத்தை வேரறுக்கும் திராணி இல்லாததாலும் தள்ளிப்போட்டது. அதன் விளைவுதான் மும்பை தாக்குதல்.   கொலைவெறிபிடித்த இதுபோன்ற தாக்குதல்களினால் நிம்மதி இன்றி தவிக்கும் மக்கள் நலனைவிட இந்த அரசுக்கு ஒட்டு  என்பதும், ஆட்சியின் மீதான தீராத ஆசையும் மிக மிக முக்கியமாகிப் போனது வெட்கக்கேடானது.    இந்தியாவின் கவுரவம், இதயம், என எந்தபெயரிட்டாலும்  பொருத்தமான இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதான் தாக்குதல் நடத்திய  எல்லை கடந்த பயங்கரவாதிகள், இந்திய தலைவர்கள் பாரளுமண்டரத்தின் உள்ளே இருக்கின்ற பொழுது அசுரத்தனமான தாக்குதல்களை நடத்தினர், இதில் எட்டு பாடுகப்படை வீரர்களும் ஒரு தொட்டகரனும் உயிரிழந்தார்கள் . ஆகா ஒன்பது பெண்கள் தாலியை இழந்த கைப்பற்றிய நமது தேசத்தின் தலை .  இன்றுவரை அதற்கு காரணமானவர்களை தண்டிக்க இந்த அரசுக்கு துணிவில்லை என நாம் சொல்லவதை விட அப்சல்  என்ற தீவிரவாதி திமிராக பதிரிக்கையலர்கலிட சொல்கிறான் என்னை தூக்கில்போட இந்த அரசுக்கு தெம்போ, திராணியோ இல்லை லால்க்ரிஷ்ணன் அத்வானி பிரதமராக வந்தால் மட்டுமே என்னை தூக்கில் போடமுடியும் என்றதுகூது இந்த ஆட்சியாளர்களுக்கு கோபம் வரவில்லை என்பதுதான் கேவலம்.     இப்படி வாழ்கின்ற மக்களுக்கு உள்நாட்டில் ஏற்படுகின்ற தீவிரவாத தாக்குதல்களை தடுத்தி நிறுத்தி தீவிரவாதத்தை வேரறுக்க வக்கில்லாத பிரதமமந்திரி அப்ஸலை தூக்கிலிட்டால் மட்டும் தீவிரவாதம் ஒழிந்துவிடுமா  என்றும் ,   பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ,எஸ்.ஐ. அமைப்புதான்  காரணம் என்று அமரிக்க நாடும்,இந்தியாவும், மட்டுமின்றி உலகிற்கே தெரியும்போது;   110 இந்திய மக்களின் விருப்பமே பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவேண்டும்  என்பது. மும்பை மீது நடந்த தாக்குதலுக்கு  பாகிஸ்தான் மக்களை பொறுப்பாக்க விரும்பவில்லை  என்று பொறுப்பான பிரதமர் சொல்வது வேடிக்கையானது.  உள்நாட்டில் நடக்கின்ற செயலுக்கு மக்களை பொறுப்பாக்க விரும்பாத அரசு நமது அண்டை  இலங்கை நாட்டில் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திர்க்காகவும்  போராடிவரும் விடுதலைபுலிகளை அழிக்க பூகோள வரைபடங்களையும், இராணுவ  பயிற்சிகளையும் அளித்து , இந்திய இராணுவத்தை அனுப்பி உரிமைக்காக போராடிய போராளிகளை  ஒடுக்கியதொடு உரிமையின்றி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை குண்டுபோட்டு அழித்து , நிர்வாணப்படுத்தி சுட்டுகொன்றும் , பெண்களை மானபங்கபடுதியும் , திருமணம் ஆகாத பெண்களுக்கு கருத்தடை செய்தும் முகாம்களில் விலங்குகளைவிட கேவலமாக அடைத்துவைத்து வெயிலிலும், மழை வெள்ளத்திலும், நனையவைத்து தினம்,தினம், சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றவர்கள் மேல் எந்த கரிசனமும் அண்டை நாடான தேச என்பதை விட தன அரியாசனத்திற்கு திட்டமிட்டு நாற்பது நாடளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவிடும் தமிழ் மக்களின் தொப்புள் கொடி உறவுகளுடன் ஈழ தமிழ் மக்களிடம்  காட்டாதது  வேதனைதான். ராஜீவ் கொலைக்கு காரணமான விடுதலைபுலிகளை அழிக்க தீவிரம் காட்டிய சோனியா இந்திராகாந்தியை  கொன்ற சிங் இனத்தவரை அரியணை அமர்த்தியது விந்தை மாமியார் வேறு கணவன் வேறு என்பதாலா.  இந்த இன அழிப்பு நாளை தனிதமிழ் நாடு கோர அடிப்படையகிவிட்டால்  எந்த இறையாண்மையை காக்க தமிழ் தலைவர்களை தேசப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தார்களோ அந்த இறையாண்மை கெட்டுப்போக வைத்த பெருமை இவர்களையே சாரும் என்பதை மறந்துவிடக்கூடாது.  விடுதலைபுலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடுகிற இயக்கம் அல் கொய்த , இஸ்லாமிய மாணவர் இயக்கம், லஷ்கர்  இ தொய்பா  உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்கள் இன்றும் செயல் பட்டுகொண்டிருக்கிறது ஆனால் விடுதலைபுலிகள் இயக்கம் தடை செய்தது முதல் இந்தியாவில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்பதை தெரிந்தவர்களுக்கு புரியும். எனவே தீவிரவாததிடம் இருந்து காக்கவேண்டியது இந்தியாவையும், இந்திய மக்களையுதான், இலங்கையில் தமிழ்மக்களுக்கு தேவையான அதிகாரப் பகிர்வையும், சுதந்துஇரதியு உள்ளடக்கியல் தனித் தமிழ் ஈழம் என்பதை இந்திய அரசும், சர்வதேச சமூகமும் உணரவேண்டு.    எனவே நமது நாட்டில் நிழுவில் உள்ள துக்கு தண்டனை கைதிகளின் தண்டனைகளை நிறைவேற்றாவிட்டால் துக்குதண்டனையை ரத்துசெய்து ஆயுள் தண்டனையாக மடறிவடுவோம் என உச்ச நீதி மன்றம் சமீபத்தில் அறிவுரிதியத்தை மதிய அரசு நினைவில் கொள்ளவேண்டும் .  இந்தியாவின் இறையாண்மை மேலும் மோசமகிவிடமைல் இருக்கவேண்டுமானால் கிடப்பில் உள்ள முமை,பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களின் தூக்கு தண்டனைகளை துணிச்சலுடன் அரசு நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் திறமையின்மையை ஒப்போக்கொண்டு ஆட்சியைவிட்டு விலகினால்தான் இந்தியனின் திறமைமீதும், துணிச்சல் மீதும் சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கைவரும். வாழ்க சுதந்திரம்.

காவல்துறைக்கு அவசிய தேவை தன்னாட்சி

Sunday, October 11, 2009


இந்திய அரசு 1977 ஆம் ஆண்டு நவம்பர் பதினைந்தாம் நாள் சட்டத்தை நிலை நிறுத்தவும் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் ஆண் ஒரு அமைப்பாக காவல்துறை இயங்குவதை பற்றி ஒரு விரிவான ஆய்வு நடத்த ஒரு ஆணையத்தை நியமித்தது .  இந்த ஆணையம் தனது அறிக்கைகளை 1979 பிப்ரவை முதல் 1985 மே வரை அரசுக்கு அளித்தது .  கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த அறிக்கை மேல் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .  ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி பிரகாஷ் சிங்  உள்ளிட்ட  சிலரும் உச்ச நீதிமன்றதில் மத்திய அரசு காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுரிப்படுத்த கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 22.9.2006 அன்று மிக முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது .  அதில் காவல் துரையின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளுக்கு பெரும்பாலான காரணம் மிகையான , நாட்டு நலனுக்கு போருதமில்ல்லாத வெவ்வேறு மட்டத்திலான அரசியல் குறுக்கீடுகளே (An overdose of unhealthy and petty political interferance)  என்பதே மக்கள் கருத்தாக நாடுமுழுவதும் உள்ளது .  இந்த குறிக்கீடுகள் காவலர்களின் பணி மாறுதல்களில் இரிந்து தொடக்கி கட்சி நலனுக்காக காவல்துறையை பயன்படுத்துவது மற்றும் ஊழல் அலுவலர்களுக்கு அரசியல் பாதுகாப்பு அளிப்பது வரை உள்ளது. மைய அளவிலும் மாநில அளவிலும் மாநில பாதுகாப்பு ஆணையம் ( State Security
Commission) அமைக்கப்படவேண்டும் .  இந்த ஆணையம் காவல்துறை மேல் மாநில
அரசு முறையற்ற அழுத்தத்தையோ  தாக்கத்தையோ கொடுக்காமல் (Unwarranted influnce or pressure) காவல் துரை அரசியல் அமைப்புசட்டம் படியும், இதர சட்டபடியும் செயலாற்ற வழிவகை செய்யும் பொருட்டு தக்க வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும்.இந்த ஆணியத்தின் தலைவராக முதல்வரோ அல்லது உள்துறை அமைச்சரோ இருப்பர், மாநில காவல் துரை தலைவர் செயலாளராக இருப்பார் . அரசின் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக இயங்கும் வகையில் இந்த ஆணையத்தின் இதர உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவர்,இதற்காக மாநில அரசு மனித உரிமை ஆணையம் ,ரிபெரோ குழு , சோரப்ஜி குழு ஆகியவை பரிந்துரைத்த குழுக்களில் இரூந்து ஒன்றை தேர்வு செய்யலாம்..  மாநில காவல் துரை இய்யக்குனர் பதவிக்கு துரை அலுவலர்களின் பனிக்காலம் , அனுபவம், பணியின் தரம் ஆகியவைகளின் அடிப்பாடையில் மைய தேர்வனையத்தின் பரிந்துரைப்பட்டியலில் இறந்து மூன்று மூத்த அலுவலர்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும்.  அவர் இரண்டாண்டுகள் குறைந்தபட்சம் பணியில் இருக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு கீழ் உள்ள பதவிகளுக்கான் நியமனம் மாறுதல், பதவி உயர்வு,மற்றும் இதர பணிகளுக்காக நிர்வாக நலவாரியம்  அமைக்கப்படவேண்டும்.  இந்தவரியம் மேல்முறையீடுகளை ஏற்று தீர்பளிக்கும் வாரியமாக செய்யல்படும். மாவட்ட அளவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு கீழ் உள்ள அலுவலர் களின் மீதான் புகார்களை விசாரிக்க புகார் குழுமம் நியமிக்க்கப்ப்படவேண்டும்,  அதற்கு மேல் உள்ளவர்கள் மீதான புகார்களை விசாரிக்க மாநில அளவில் தனி குழுமம் அளிக்காப்படவேண்டும்..  மாவட்ட குழுவிற்கு தலைவராக நீதிபதியும், மாநில குழுவிற்கு தலைவராக உயர் அல்லது உச்ச நீதிமன்ற நீதி பதியும் இருக்கவேண்டும், மேற்கண்ட வழிகாட்டுதல்கள் மைய, மாநில அரசுகளால் 31.12.2006 குள்நடைமுரைபடுதவேண்டும், இந்த புதிய அமைப்புகள் 1.1-2007 முதல் செயல்பட வேண்டும். இதற்கான பிரமான பத்திரத்தை மத்திய அமைச்சரவை செயலாளர், மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் 3-1-2007-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இதுவரை உச்சநீதிமன்ற உத்தரவுகள் இதுவரை நடைமுறை படுதாததுதான் நாட்டில் ஊழல்களும், குற்றங்களும் பெருகியதற்கு காரணம்.

வாழ்த்துக்கள் திரு.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் .

வரும் டிசம்பர் பத்தாம் நாள் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நோபல் பரிசுபெறும் விழாவில் மூன்றாவதுமுறையாக தமிழன் நுழைவது தமிழனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியனுக்கும் பெருமைதான் .  இந்த நோபல் பரிசு ரிபோசோம்களின் பனி மற்றும்  கட்டமைப்பு பற்றிய ஆய்விற்காக வழங்கப்படுகிறது .  இந்த கண்டுபிடிப்பு புரதச்துகுரைவால் உலக அளவில் அன்றாடம் உயிர் இழக்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் உடல்நலத்தை பாதுகாத்து  உயிரிழப்பையும் தடுக்கிறது.   உலகஅளவில் இரண்டுகோடியே அறுபது லட்சம்  இந்திய அளவில் ஒருகோடியே அறுபது லட்சம் பேர் புரதுசத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். நீண்டகாலமாக மனித  சமூகத்திற்கு இருந்துவந்த சவால் தீர்க்கப்படும் என்ற நிலை நமது தமிழன் திறமையினால் என்று நினைக்கும்போது பெருமை படுகிறோம்..நோபல் பரிசுபெறப்போகும் நமது சகோதரர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு என்தனிப்பட்ட முறையிலும் ஒட்டுமொத்த மனித சமுகத்தின் சார்பிலும் பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  

காற்றில் பறக்கும் சட்டங்கள்

Wednesday, October 7, 2009


இந்தியஅரசு திருத்தியமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு சட்டம்,புகயிலைபொருள் தடைசட்டம்.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டுவந்தது. இச்சட்டப்படி (போதைபொருள்) பெரிய அளவில் அல்லது சிறிய அளவில் போதை பொருள்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என யார் வைத்திருந்தாலும் குற்றம் .  புகையிலை தடைச்சட்டம் கோவில்கள் , பள்ளிகள்,மருத்துவமனைகள், உணவகங்கள் , திரையரங்குகள் ,அலுவலக வலாகங்கள் , பேருந்துகள் , தொடர்வண்டிகள்,பெட்டிகடைகள் என மக்கள் குடும் இடங்களில் புகை பிடிக்க ,கோவில் , மருதுவமைகள், கல்விநிலைய வளாகங்கள் நூறுமீட்டர் சுற்றளவில் புகைக்க , புகையிளைபோருல்கள் விற்க தடை செய்கிறது. புகையிலை பொருட்கள் மீதான் எச்சரிக்கை வாசகங்கள் , படங்களை கட்டாயமாக்கவேண்டும் என இந்த ஆண்டு மே 31  முதல் நடைமுறைக்கு வந்தது ஆனால் இந்த தடை சட்டங்கள் தமிழகம் , புதுவி உள்ளிட்ட மாநிலங்களில் முழுவதுமாக நடைமுறைப்படுத்தவில்லை  என்பது வேதனைதான்.  எதிர்கால இந்திய என்ற இளம் தலைமுறை கலை குறிவைக்கும் போதை பொருள்களும் , புகையிலை பொருள்களும்  பள்ளி கல்லுரி மாணவ மாணவிகளுக்கு தாராளமாக கிடைக்கிறது இதை தடுத்தாலே வளமான இந்திய , இளமையான இந்தியா என உரக்கவளிமையோடு சொல்லலாம் இதற்கு அரசு மட்ட்டுமல்ல            பிள்ளைகளின் வாழ்வில், நாட்டின் வளர்ச்சியில் அக்கறை உள்ள ஒவ்வொரு வரும் முயற்சிக்கவேண்டும் , நம்பிக்கைவைப்போம் வல்லரசு இந்திய விரைவில்.    .

குளங்களை அழிக்கதீர்...

விழுப்புரம் நகரம் தமிழகத்தின் நடுப்பகுதிமட்டுமல்ல பெரும்பாலான் தமிழகபோக்குவரதினை இணைக்கும் இடம் .  இந்த நகரத்சியில் நற்பதிஎட்டு மெட்ரிக் டன் நகரகழிவுகள் உற்பதியவதாக அந்த நகர நிர்வாக அலுவலக தகவல்.  இந்த குப்பைகளை தரம்பிரிக்காமல் நகரின் நடுவிலும் பழைய பேருந்து நிலையதிணை ஒட்டி உள்ளது ஆதிவாலிஸ்வரர்  கோவிலுக்கு சொந்தமான குளம் தற்போது என்பது சதம் தூர்கப்பட்டுவிட்டது நகரகழிவுகள் , பழைய கட்டிடங்களை இடிக்கும் கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு வணிகவலாகம் கட்ட நகரின் நடுவே இருந்த குளம் பயனற்று போனதோடு அன்றாடம் நகரகழிவுகளை கொட்டி எரித்து அங்குள்ள பேருந்து ஓட்டிகள் மாணவ மாணவிகள் , அருகில் உள்ள கார் வாடகை  ஓட்டுபவர்கள் , குளத்தை ஒட்டி உள்ள நகர அரசு நடுநிலைப்பள்ளி மாணவமாணவிகள் , வணிகர்கள்  என நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் துன்பப்படுகின்றனர், நகரகழிவுகளை சம்பத்தப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்ட இடத்தில திடக்கழிவுமேலன்மை செய்து உரம் தயாரித்து விற்பனை செய்வதை விடுத்தது எரித்து மனித வளத்தை அழிப்பதை அரசு வேடிக்கைபார்க்ககுடது.  மாவட்டத்தின் நிர்வாகம் இதுகுறித்து ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கவேண்டும்.   குளங்களை அழிக்கதீர்...

புதுவையை காக்க தடை விதிக்க


புதுச்சேரி மாநிலம் சிரியளவில் இருந்தாலும் அதிக அளவிலான தொழில்சாலைகள் , அழகிய வீதிகள் , சுத்தமான கடற்கரை,உலகத்தரத்திலான ஆரோவில்நகரம் , அரவிந்தர் ஆசிரமம் , காந்தி நினைவு மண்டபம் என புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்த மண் தொழிர்சாளைகழலும், நகராட்சி தரம்பிரிக்கப்படாத கழிவுகளை வில்லியனூர் புறவழிச்சாலை ஓரம் கொட்டி தீஇட்டு எரிக்கின்றனர். இதனால் டை ஆக்சின் என்ற விஷ வாயுவும் , கரியாமிலவயுவும்  கலந்த புகை மண்டலம் அந்த சாலையில் வாகனோட்டிகள் மிகவும் சிரமதிற்குள்ளகின்றனர் . அந்த பகுதில் குடியிருக்கும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.  பிளாஸ்டிக்ஸ் , அந்தபகுதி மருத்துவமனைகளில் உருவாகும் மருதுவக்கழிவுகள் எரிக்கப்படும்போது வுருவாகும் விஷவாயு ஆண்மைக்குறைவு,பெண் தன்மைகுறைவு, மலட்டுத்தன்மை , மயிர்சருமநோயிகள்,பிறவி ஊனங்கள் ,தோல் நிறம்பற்றிய நோய்கள் , நரம்புமண்டலம் பதிப்புகள்  என எராளமான பாதிப்புக்கள் உண்டாகிறது .  இதுகுறித்து பசுமைத்தாயகம் சார்பில் நகரகழிவுகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு உயிர் கொல்லி நோய்கள் வரும் மேலும் கழிவுகளை எரிக்காமல் திடக்கழிவு மேலாண்மை செய்து உயிர் உரங்கள் தயாரித்தால் மாநிலத்தின் உரதட்டுப்படு தீரும்,அதன்மூலம் நகராட்சிகளுக்கு வருமானம் பெருகும் , மனிதவளம் பாதுகாக்கப்படும் . மேலும் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு , நிலவளம் பாதிக்கப்பட்டு எழில்மிகுந்த புதுவை சுற்றுலாத்தளம் என்ற அந்தஸ்தை , அடையாளத்தை இழக்கும் எனவே பிளாஸ்டிக் மீதான எரிக்க, பயன்பாட்டுக்கு தடை விதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுதொடர்பான மனு கடந்த ஆண்டு அம்மாநில முதல்வரிடம் அளிக்கப்பட்டது, வில்லியனூர் சேர்மன் புறவழி சாலையில் குப்பைகளை கொட்டி எரித்தால் கடும் நடவடிக்கை என எச்சரித்தார் ஆனால் இன்றுமந்த நிகழ்வு தொடர்கிறது.  புதுவை அரசு கடந்த ஜூலை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை அமுலுக்கு வருவதாக அறிவித்தது.  பிளாஸ்டிக் வணிகர்களின் நிர்பந்தத்தால் அந்த தடை அமல்படுத்தாமல் உள்ளது .  அரசின் இந்த நிலை ஒருவகையில் மனிதஉரிமை மீறல்தான் , இதுகுறித்து பசுமைத்தாயகம் சார்பில் வழக்கு தொடர உள்ளோம் .

வேண்டாம் தாய்பால் வங்கி

Tuesday, October 6, 2009


இரத்ததானம், கண்தானம், உடல்தானம், அன்னதானம் என பிற உயிர்களை காப்பதில் மனித இனம் சமீபத்தில் மிகுந்த அளவில் விழிப்புணர்வு அடைந்துள்ளது மகிழ்ச்சியான ஒன்றுதான் .  ஆனால் தாய்பால் கொடுக்கும் விசயத்தில் இன்னும் மனித இனம் முதிர்வு பெறவில்லை என்பதுதான் வருத்தம். ஏனெனில் தாய்பால் குறித்து மூன்று மணிநேரம் பேசுபவர்கள் கூட அதை பின்பற்றுவதில்லை. தாய்பால் மட்டுமே ஆரோக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் அதை குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்ற நிலையிலும் அழகு          கெட்டுபோய்விடும் என்றெண்ணம், வறுமை உள்ளிட்ட காரணங்களால் தாய்பால் கிடைக்காத நிலையை தொடர்ந்து தற்போது தாய்பால் வங்கி தொடங்கி வருகின்றனர்.  இதில் தாய்மார்களிடம் இருந்து சேகரித்த தாய்பாலை சில்வர் பாத்திரத்தில் சேகரித்து வைத்தால் கெடாது என மருத்துவர்கள் கூறி வருகின்றனர் . தாய்பாலை சீசாவில் கொடுக்கவேண்டும் என நினைப்பவர்கள்  வழக்கமாக தரும் பசும்பால் போன்றவற்றையே தரலாம் ஏனெனில் பசும்பால் சேகரிக்கும் முறை சுத்தமனதாக இருக்கும்படி பார்த்தாலே சிறப்புதான்.  தாய்பாலை கருவிகள் மூலம் உறிஞ்சி சேகரித்து பாதுகாப்பதிலும் சில ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம், ஒருவேளை இல்லை என நிருபிதலும் இதில தாய்க்கும் குழைந்தைக்குமான பிணைப்பு  குறைத்துவிடும். மேலும்  இதனால் வறுமைகள் உள்ள தாய்மார்கள் தன் குழந்தைக்கு பால் தருவதை தவிர்த்து வருமயை போக்க பாலை விற்பது அதிகரிக்கும்.  எனவே ஒவ்வொரு உயிரின் தாய்பால் அதன் குழந்தைகளுக்கு சேர்வதற்கு  உண்டான உரிமையை  பாதுகாக்க வேண்டிய நாம் மனித இனத்தின் தாய் பாலையாவது வணிக பொருள்   ஆவதை ஊக்குவிக்க வேண்டாம். எனவே  ரத்தவங்கி போன்று  தாய் பால் வங்கி திறப்பது மனிதகுலத்தில் எஞ்சியுள்ள பாசபினைப்பை வேரறுக்கும் செயல் ஆகும்.

வேண்டாம் தாய்பால் வங்கி 

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger