தேசம் காக்க தாலி இழந்த பெண்களை மறக்கவேண்டாம் சோனியா.

Monday, October 12, 2009

              உயிரைகொல்லுதல்வேறு , சிறைவைத்தலும்  , ஏன், உடலுக்கு ஊரு செய்யும் தண்டனை என்பதும்கூட வேறு என நான் கருதுகிறேன் .  அளவில் மட்டுமல்ல , தன்மையிலும் கூட வேறுபட்டிருப்பதாக நினைக்கிறேன் .  சிறைத் தண்டனையைத் திரும்பப் பெற முடியும் .  உடலுக்கு ஊறு  செய்யும் தண்டனைக்கு ஆளானவருக்கும் கூட இழப்பீடு செய்யமுடியும் .  ஆனால் ஒருவரைசாகடிதுவிட்டால் , அந்தத் தண்டனையைத் திரும்பப் பெறவும் முடியாது, இழப்பீடு செய்யவும் முடியாது .இது மரணதண்டனைக்கு எதிராக மகாத்மா காந்தியடிகள் கூறியது.                                                      இன்றைய இந்தியாவின் நிலை மரணதண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு  விட்டதாகத் தெரிகிறது .  இறுதியாக தமிழகத்தில் ஆட்டோசங்கர் தூக்கிலிடப்பட்ட பிறகு யாரும் தூகிளிடப்பட்ட்டதாக தெரியவில்லை .  அதனால்தான் என்னவோ இந்தியாவில் தீவிரவாதத்தின் தாக்குதல் அமைதிப் பூங்கா என்ற பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது . கடந்த    1996  இல் நடைபெற்ற தொடர் குடுவேடிப்பு, மும்பை தொடர் குண்டுவெடிப்பு, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக,ஆந்திர,அகமதாபாத் , குஜராத்,டெல்லி உள்ளட்ட பல மாநிலங்களில் பொதுஇடங்கள், பேருந்து நிறுத்தங்கள் , மார்கெட் என மக்கள் நடமாடும் இடங்களில் நடத்திய குண்டுவெடிப்புகள் என நிகழ்வுகளுக்கு காரணத்தை அரசு ஆராய்வதற்கு முன்னமே தீவிராத்தின் நிகழ்வுகளில் மறக்கமுடியாத மைல்கல்லாக நிகழ்ந்துபோனதுதான் மும்பையின் தாஜ் ஹோட்டல் , நரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில்  நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்.     இதுவரை இல்லாத அளவிற்கு தேசப்பாதுகாப்பு படையினருடன் நேருக்கு நேரான தாக்குதல் தீவிரமான பயிற்சி , தாக்குதல் தலங்களைப்பற்றிய நீண்டநாள் ஆராய்ந்த துணிவு  மட்டுமல்ல இந்தியாவின் தண்டனைகள் குறித்த விழிப்பும்கூட என்றுதான் சொல்லவேண்டும் .  கடந்த 2001 டிசம்பர் 13 ஆம் தேதி புது டெல்லியில் இந்திய பாராளுமன்ற வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டு புது டெல்லியில் உள்ள பொடா(pota-prevention of Terrism Act) சிறப்பு நீதி மன்றத்தால் (designated court) விசாரணை செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது, இதனை டெல்லி உயர் நீதி மன்றமும்,உச்ச நீதி மன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது .  மரணதண்டனை விதிக்கப்பட்ட முஹம்மத் அப்சல்  எனும் தீவிரவாதியை தூக்கிலிடுவதற்காக கடந்த 20.10.2006 அன்று வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.மேலும் அபிசளின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் குறிப்பாக தொலைக்காட்சிகள் துடித்தன.இந்த மரணதண்டனையை நிறைவேற்ற அப்போது ஆட்சியில் இருந்த இப்போதும் ஆட்சியில் இருக்கின்ற காங்கிரஸ் அரசு ஒட்டு  வங்கியை நினைவில் வைத்தும் , தீவிரவாதத்தை வேரறுக்கும் திராணி இல்லாததாலும் தள்ளிப்போட்டது. அதன் விளைவுதான் மும்பை தாக்குதல்.   கொலைவெறிபிடித்த இதுபோன்ற தாக்குதல்களினால் நிம்மதி இன்றி தவிக்கும் மக்கள் நலனைவிட இந்த அரசுக்கு ஒட்டு  என்பதும், ஆட்சியின் மீதான தீராத ஆசையும் மிக மிக முக்கியமாகிப் போனது வெட்கக்கேடானது.    இந்தியாவின் கவுரவம், இதயம், என எந்தபெயரிட்டாலும்  பொருத்தமான இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதான் தாக்குதல் நடத்திய  எல்லை கடந்த பயங்கரவாதிகள், இந்திய தலைவர்கள் பாரளுமண்டரத்தின் உள்ளே இருக்கின்ற பொழுது அசுரத்தனமான தாக்குதல்களை நடத்தினர், இதில் எட்டு பாடுகப்படை வீரர்களும் ஒரு தொட்டகரனும் உயிரிழந்தார்கள் . ஆகா ஒன்பது பெண்கள் தாலியை இழந்த கைப்பற்றிய நமது தேசத்தின் தலை .  இன்றுவரை அதற்கு காரணமானவர்களை தண்டிக்க இந்த அரசுக்கு துணிவில்லை என நாம் சொல்லவதை விட அப்சல்  என்ற தீவிரவாதி திமிராக பதிரிக்கையலர்கலிட சொல்கிறான் என்னை தூக்கில்போட இந்த அரசுக்கு தெம்போ, திராணியோ இல்லை லால்க்ரிஷ்ணன் அத்வானி பிரதமராக வந்தால் மட்டுமே என்னை தூக்கில் போடமுடியும் என்றதுகூது இந்த ஆட்சியாளர்களுக்கு கோபம் வரவில்லை என்பதுதான் கேவலம்.     இப்படி வாழ்கின்ற மக்களுக்கு உள்நாட்டில் ஏற்படுகின்ற தீவிரவாத தாக்குதல்களை தடுத்தி நிறுத்தி தீவிரவாதத்தை வேரறுக்க வக்கில்லாத பிரதமமந்திரி அப்ஸலை தூக்கிலிட்டால் மட்டும் தீவிரவாதம் ஒழிந்துவிடுமா  என்றும் ,   பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ,எஸ்.ஐ. அமைப்புதான்  காரணம் என்று அமரிக்க நாடும்,இந்தியாவும், மட்டுமின்றி உலகிற்கே தெரியும்போது;   110 இந்திய மக்களின் விருப்பமே பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவேண்டும்  என்பது. மும்பை மீது நடந்த தாக்குதலுக்கு  பாகிஸ்தான் மக்களை பொறுப்பாக்க விரும்பவில்லை  என்று பொறுப்பான பிரதமர் சொல்வது வேடிக்கையானது.  உள்நாட்டில் நடக்கின்ற செயலுக்கு மக்களை பொறுப்பாக்க விரும்பாத அரசு நமது அண்டை  இலங்கை நாட்டில் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திர்க்காகவும்  போராடிவரும் விடுதலைபுலிகளை அழிக்க பூகோள வரைபடங்களையும், இராணுவ  பயிற்சிகளையும் அளித்து , இந்திய இராணுவத்தை அனுப்பி உரிமைக்காக போராடிய போராளிகளை  ஒடுக்கியதொடு உரிமையின்றி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை குண்டுபோட்டு அழித்து , நிர்வாணப்படுத்தி சுட்டுகொன்றும் , பெண்களை மானபங்கபடுதியும் , திருமணம் ஆகாத பெண்களுக்கு கருத்தடை செய்தும் முகாம்களில் விலங்குகளைவிட கேவலமாக அடைத்துவைத்து வெயிலிலும், மழை வெள்ளத்திலும், நனையவைத்து தினம்,தினம், சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றவர்கள் மேல் எந்த கரிசனமும் அண்டை நாடான தேச என்பதை விட தன அரியாசனத்திற்கு திட்டமிட்டு நாற்பது நாடளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவிடும் தமிழ் மக்களின் தொப்புள் கொடி உறவுகளுடன் ஈழ தமிழ் மக்களிடம்  காட்டாதது  வேதனைதான். ராஜீவ் கொலைக்கு காரணமான விடுதலைபுலிகளை அழிக்க தீவிரம் காட்டிய சோனியா இந்திராகாந்தியை  கொன்ற சிங் இனத்தவரை அரியணை அமர்த்தியது விந்தை மாமியார் வேறு கணவன் வேறு என்பதாலா.  இந்த இன அழிப்பு நாளை தனிதமிழ் நாடு கோர அடிப்படையகிவிட்டால்  எந்த இறையாண்மையை காக்க தமிழ் தலைவர்களை தேசப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தார்களோ அந்த இறையாண்மை கெட்டுப்போக வைத்த பெருமை இவர்களையே சாரும் என்பதை மறந்துவிடக்கூடாது.  விடுதலைபுலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடுகிற இயக்கம் அல் கொய்த , இஸ்லாமிய மாணவர் இயக்கம், லஷ்கர்  இ தொய்பா  உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்கள் இன்றும் செயல் பட்டுகொண்டிருக்கிறது ஆனால் விடுதலைபுலிகள் இயக்கம் தடை செய்தது முதல் இந்தியாவில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்பதை தெரிந்தவர்களுக்கு புரியும். எனவே தீவிரவாததிடம் இருந்து காக்கவேண்டியது இந்தியாவையும், இந்திய மக்களையுதான், இலங்கையில் தமிழ்மக்களுக்கு தேவையான அதிகாரப் பகிர்வையும், சுதந்துஇரதியு உள்ளடக்கியல் தனித் தமிழ் ஈழம் என்பதை இந்திய அரசும், சர்வதேச சமூகமும் உணரவேண்டு.    எனவே நமது நாட்டில் நிழுவில் உள்ள துக்கு தண்டனை கைதிகளின் தண்டனைகளை நிறைவேற்றாவிட்டால் துக்குதண்டனையை ரத்துசெய்து ஆயுள் தண்டனையாக மடறிவடுவோம் என உச்ச நீதி மன்றம் சமீபத்தில் அறிவுரிதியத்தை மதிய அரசு நினைவில் கொள்ளவேண்டும் .  இந்தியாவின் இறையாண்மை மேலும் மோசமகிவிடமைல் இருக்கவேண்டுமானால் கிடப்பில் உள்ள முமை,பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களின் தூக்கு தண்டனைகளை துணிச்சலுடன் அரசு நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் திறமையின்மையை ஒப்போக்கொண்டு ஆட்சியைவிட்டு விலகினால்தான் இந்தியனின் திறமைமீதும், துணிச்சல் மீதும் சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கைவரும். வாழ்க சுதந்திரம்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger