உயிர்பெறுமா க்யோடோ - உழன்றிடுமா புவி

Thursday, October 22, 2009

புவி வெப்பமடைவதை தடுக்க்ப்பத், அதன் வயுளைவுகலி எதிர்கொள்வது குறித்த உலக நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள் கடந்த இருபது ஆண்டுகளாக நடக்கின்ப்றன.  1988 ஆம் ஆண்டில் ஐ.நா.அவையின் அங்கமான உலக வானிலை அமைப்பும் (WMO)  ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டமும் (UNEP)  இணைந்து பன்னாட்ட்டு அரசுகளுக்கிடையிலான காலநிலை மாற்ற குழுமம் (Intter governmental Panel On Claimate Change - IPCC) என்ற அமைப்பை நிறுவின.
இந்த அறிவியலர்கள் குழு முறையே  1990, 1995,2001,2007 ஆகிய ஆண்டுகளில் கால நிலை மாற்றம் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட்டது .  இதன் முதல் அறிக்கையே கால நிலை மாற்றம் குறித்த அவசர நிலையை எடுத்துக் காட்டியதால் , 1992 ஆம்  ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ -டி -ஜெனிரோ நகரில் கூடிய ஐ.நா. புவி உச்சி மாநாட்டில் (UN Earth Summit) ஐ.நா.கால நிலை மாற்றத் திட்டப் பேரவை எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.(UN Framework Convention on Climate Change) . 
இந்த அமைப்பின் தொடர் நடவடிக்கையாக ௧௯௯௭ ஆம் ஆண்டில் க்யோட்டோ உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. உலக நாடுகளை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் இந்த ஆவணம் , 1990 இல் வளர்ந்த நாடுகள் வெளிட்ட பசுமை இல்லவாயுக்கள் அளவினை ஒரு இலக்காகக் கொண்டு - அந்த நாபால் அந்த அளவுக்கு தலைகீழாக 5.2% அளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாவதை  குறைக்கவேண்டும். இதற்கான கால அளவு 2008-2012 வரை ஆகும் . 
உலக பூபந்தில் உயிர்கள் வாழ உறுதி செய்யும் இந்த உடன் படிக்கை வளர்ந்த நாடுகளான அமெரிக்க , ரஷ்ய உள்ளிட்ட நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு இந்த ஒப்பந்தம் உயிர்பெறாமல் போனது சில ஆண்டுகளுக்கு முன் போலந்து ஏற்றுக்கொண்டது. இந்த ஒப்பந்தம் முடியும் தறுவாயில் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வரும் 7-12-2009  அன்று டென்மார்க் நாட்டின் கோபென்ஹெகன் நகரில் கூடும் கால நிலை மாநாட்டில் இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டு உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்வுடன் ஆரோக்கியமாக வாழ ஒவ்வொருவரும் முயற்சிப்போம்.  நமது தாய் வீடு பூமி ஒன்றே  அதை காப்பது அனைவரின் கடைமை.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger