பிணிபோக்கும் பணியில் போலிகள் ஒழிக்கப்போவது எப்போது?

Tuesday, October 13, 2009

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல் என்று இரண்டாயிரம்  ஆண்டுகள்ளுக்கு முன்னமே மருத்துவத்தின் மகத்துவம் பற்றி அய்யன் திருவள்ளுவர் உலகப்பொதுமறையாம் திருக்குறளில் கூறியுள்ளார் .  அதையேதான் நவீன மருத்துவமான அல்லோபதி என்னும் ஆங்கிலமருதுவம் நோய் என்னவென்று தெரிந்து அதன் தன்மையினை ஆராய்ந்து அதற்கேற்ற அளவு மருந்தினை அந்தந்த காலத்தில் கொடுக்கவேண்டும் என்கிறது. இன்றைய நவீன வாழ்கை முறை மாற்றத்தில் புதிய வகை நோய்களும் , புதியவகை சிகிச்சை முறைகளும் நடை முறைக்கு  வந்துவிட்டன.  இப்போதுள்ள சூழலில் புதிய இதற்குமுன் கண்டறியப்படாத நச்சு கிருமிகளால் ஏற்படுகின்ற நோய்களுக்கு மருத்துவர்களே பலியாகின்ற நிலையில் மனிதகுலத்திற்கு சற்று சவாலாகவே உள்ளது.  இந்நிலையில் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவரிடம்  சிலகாலம் உதவியாளராக இருந்து கிராமங்களிலும் , சற்றுபெரிய கிராமங்களிலும் சிகிச்சை செய்கின்றனர்.  அதுவு சாதரண விதம் அல்ல அடிபடுகின்றன , சீழ்பிடித்த கட்டிகள் என ரண சிகிச்சியாளித்தலும், பிரசவம் பார்த்தாலும், சட்டத்திற்கு புறம்பான அரசு மருத்துவமனைகளில் கூட செய்ய தயங்குகின்ற நிலையில் இருக்கின்ற பெண்களுக்கு கருகளிப்பு போன்ற வைத்தியங்களை செய்து தாயின் உயிரோடும் குழந்தையின் உயிரோடும்  விளையாடும் போளிமருதுவர்களை கலையட்டுக்க சட்டங்கள் இருந்தும் அதை நடை முறைப்படுத்துவதில்லை. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 .  (Indiyan Medical council ACT 1956) ; இச்சட்டத்தின் ௧௫ ஆம் பிருவு ௨ ஆம் உப பிரிவு படி இந்திய மருத்துவ கவுன்சில் பதிவு செய்து சான்றிதழ் பெற்றவர்கள்தான் மருத்துவராக பணியாற்றலாம். மற்றவர்கள் அலோபதி சிகிச்சை செய்யக்கூடாது .  இச்சட்டப்படி பிரிவு ௧௫ உப பிரிவு ௩ இந படி மேற்கூறிய படி இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்படாமல் சான்றிதழ் பெறாமல் சிகிச்சை செய்பவர்கள் ஒரு வருடம் சிறைத்தண்டனையும், அபராததொகையாக 1000 ரூபாய் வரை கொடுக்கவும் இப்பிரிவு வகை செய்கிறது.  
இந்திய மருத்துவ பட்டங்கள் சட்டம் : 1956
 Indian Medical Degree Act - 1916;  இச்சட்டத்தின் பிரிவு 6 எ இன் படி எந்த ஒரு மனிதனும் அவரது பெயரின் பின்னல் எந்த ஒரு பட்டத்தையும் முறையாக பெறாமல் போடக்கூடாது .இதை மீறி அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் பெற்றோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் பெறாத பட்டங்களை போட்டுக் கொண்டால் முதல் முறையாக 250 ரூபாயும் இரண்டாம் முறையாக போட்டால் 500 ரூபாயும் கட்டவேண்டும்.
Drugs And Cosmetics Act 1940 ;  எந்தவ் ஒருமநிதரும் உரிஇமம் பெறாமல் மருந்துகளை உற்பத்திசெய்தல், விற்பனை செய்தல் பாதுகாத்தல் பிறருக்கு கொடுத்தல் செய்யக்கூடாது .  இந்த குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறையும்,5000 ரூபாய் அபராதமும்விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.  மேலும் போலி மருந்து விற்பவர்களுக்கு சேமிப்பதற்கு உற்பத்தி செய்வதற்கு இடம் அளித்தால்  இவர்களுக்கு இ.பி.கோ. பிரிவுகள் 416,417,418,419,471,23,24,25,43,44,208,270,336,337,338  படியும் இந்த போலிமருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்கள் .  இந்த சட்டங்களை சம்பந்தப்பட்ட அரசுகள் உரிய அதிகாரிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி உயிர்காக்கும் பணிகள் சிறக்க வகைசெய்ய வேண்டியது கடமை சட்டம் தன்கடமையை செய்யட்டும்.

 

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger