தமிழா விழித்திடு ..

Wednesday, October 28, 2009

இந்தியாவில் நதிகள் இணைப்பு பற்றி அடிக்கடி தலைவர்கள் பேசுவதுண்டு அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் அடிக்கடி .  தமிழ் நாட்டில் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் , 234 சட்டமன்ற உறுப்பினர்கள் என இந்தியா ஆட்சியை யார் நிர்வாகிப்பது என்பதை தீர்மானிப்பது தமிழ்நாடுதான் என்றல் இல்லை  என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால் கடுமையனவரட்சி என்றல் குடிக்க விவசாயத்திற்கு என எதற்கும் அண்டைமாநிலங்களான கர்நாடகா,கேரளா,ஆந்திர உள்ளிட்ட மாநிலங்கள் மதிய அரசு, உச்சநீதிமன்றம் என யார் சொன்னாலும் சட்டைசெய்வதில்லை. ஆட்சியை தீர்மானிப்பது தமிழன் என்ற நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் தமிழின தலைவர்கள் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்காக குடிநீரை பெற்றுத்தரமுடியவில்லை என்பதுதான் வெட்கக்கேடு. காங்கிரஸ் ,பாரதியஜனதா கட்சி போன்றவர்கள் தேசியக்கட்சி இருமாநில மக்களை அரவனைத்திபோவதைவிட சட்டத்தை மதிக்கின்றவர்களை சமாதனம் செய்துவிட நினைப்பதால் அவர்களை விடுத்து மாநிலக்கட்சிகளை தேர்ந்தெடுத்து வாக்களித்து வெற்றி பெற  வைக்கின்றனர். ஆனால் மாநிலக்கட்சிகள் அதையல்லாம் மறந்துவிட்டு மத்திய அரசில் எத்தனை அமைச்சர்கள் கேட்டுப்பெறுவது சம்பாதிப்பதர்க்காக என்பதுமட்டுமே குறியாக உள்ளனர்.  தமிழன் மீன் பிடிக்கப்போனால், தமிழன் தண்ணீர் கேட்டால் , தமிழன் உரிமையைக்கேட்டல் தாக்குதல் வழக்கு என எங்கும்,தமிழன் மதிக்கப்படுவதில்லை இதற்க்க்காகவா தாய் தமிழ்நாடு .  ஒற்றுமை இல்லாத தலைவர்கள் விழிப்புணர்வு இல்லாத மக்கள் அடி மாட்டு கூட்டங்களாக இந்தியா அரசுக்கு வரிகட்டிய அடிமைகள் வெட்ககேடு .   திருந்தவேண்டும் தலைவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் வோட்டுக்களை விற்பது , எது நடந்தாலும் தலை எழுத்து என்று மனதை தேற்றிக்கொண்டு போவது தமிழனுக்கு அழகில்லை.  பொறுத்தது போதும் தைமிழா  பொங்கி ஏழு.
.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger