உன்னைப்போல் நூறுகோடி

Wednesday, October 28, 2009

சமீபத்தில் தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல பொதுவாகவும் ஒரு பரபரப்பையும்,சர்ச்சைகளையும் ஏற்படுத்திய திரைப்படம் நடிகர் கமலஹாசன்,மோகன்லால் நடித்து வெளிவந்த உன்னைப்போல் ஒருவன்.இத்திரைப்படத்தில் தீவிராதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே அழிக்கமுடியும் என்ற கருத்தை வலியுறுத்தப்பட்டுள்ளது.  இது எங்களைப்போன்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கின்ற மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்ற கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதி உள்பட ஏராளமானவர்கள் கண்டித்துல்லதில் இருந்து இப்படம் முக்கியத்துவம்பெற்றது.  சமீபத்தில் இப்படத்தை பார்த்தேன் ; சர்ச்சைக்குரிய படம் என்பதால் இரண்டுமுறைபபர்த்தேன். இப்படத்தில் ஒரு ஆள் (நடிகர் கமல் ஹாசன் ) ஐந்து இடங்களில் வெடிகுண்டுவைத்து அதை மாநகர காவல் ஆணையருக்கு , தொலைக்காட்சி நிருபருக்கு தெரிவித்து , கோவை குண்டுவேடிப்பில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட நால்வர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவித்து ஜீப்பில் ஏறவைத்து செல்போனில் இருந்து வெடிக்கின்ற வகையில் செட் செய்து தீர்த்துக்கட்டுகிறமாதிரி செய்து தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஆழிக்கவேண்டுமே தவிர இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நம்பி  ஒன்றும் பயனில்லை  என்பதுபோல் இருக்கும்.  இது சராசரி அமைதியையும் , நாட்டின்மீது பற்று உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள சராசரி உணர்வுகள் இந்த தேசத்தில் பல்வேறு மொழிகளை பேசுகின்ற மக்கள் வசித்தாலும்,பல்வேறு கொள்கைகளை கொண்ட மதங்களை பின்பற்றுகிறவர்கள் இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற ஒருமைப்பாடு உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா, இங்கு பல்வேறு காலகட்டங்களில் மக்கள் கூடுகிற இடங்களில் , வழிபாட்டு தளங்களில் , மருத்துவமனைகளில் , தொடர்வண்டிநிளையங்களில் , ஓட்டல்களில் , சட்டமன்றம் ,பாரளுமன்றம் உள்ளிட்ட பலஇடங்களில் வெடிகுண்டுவீசி தாக்குதல் நேரடித்தாக்குதல் உள்ளிட்ட பலமுறைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் சாதி, மத, இன வேறுபாடின்றி  கொன்றுகுவித்து வருவது அமைதியை விரும்பும் யாரும் ஏற்கமட்டர்கள் அப்படியிருக்க 112  கோடி இந்தியமக்களின் உணர்வுகள் போதுஅமைதிக்கும்,உயிருக்கும் கேடுவிளைவிக்கும் யாராக இருந்தாலு இந்து , கிறிஸ்து, முஸ்லிம், புத்த,சமண என எந்த மதத்திலும் கொலைசெய்ய போதிக்கதபோது எவரையும் , எவரும் கொலைசெய்வது மட்டுமல்ல மனரீதியாக பாதிக்கும் அளவிற்கு பேசுவதில் இருந்தே வன்முறை தோன்றுகிறது , எனவே யார்,யாரை தாக்கினாலும் அது குற்றமே , அது பொதுவாழ்வில் உள்ளவர்கள் அதுகுறித்து விழிப்புணர்வு செய்ய சொல்ல உரிமை உண்டு .அது கோவை குண்டு வெடிப்பனாலும் , பெஸ்ட் பேக்கரி வழக்கனாலும் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டுமே தவிர குண்டுவைத்து பிறரை கொள்ளக்கூடாது. அதற்க்கு யாரும் அதிகாரம் பெற்றவர்கள் இல்லை .  எது எப்படியோ குற்றஞ் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் ;கலையுனர்வுகள் போற்றப்படவேண்டும் அதுவும் சக குடிமகன்களின் உணர்வுகளின் பிரதிபலிப்புகளுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும்.  இந்த தேசம் சுதந்திரமாக அமைதியாக திகழவேண்டும். ஜெய் ஹிந்து.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger